மார்ச் 2025
தமிழோவியம்
புறநானூறு – 41 (காலனுக்கு மேலோன்)
பாடியவர்: கோவூர் கிழார்
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
திணை : வஞ்சி
துறை: கொற்ற வள்ளை
“மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர் புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு எரிநிகழ்ந்த தன்ன செலவின் செருமிகு வளவசிற் சினைஇயோர் சாடே”
விளக்கம்:
வேந்தனே ! நீ போர் செய்ய வருவதைப் பார்த்த பகைவர்கள் தங்கள் மகனை முத்தமிட்டுக் கொண்டு, மனைவியின் முன் கண்கலங்குவதை மறைத்துக் கொண்டு நிற்பர். காற்றும் நெருப்பும் வீசுவது போல, நீ பகை நாட்டின்மீது தாக்க செல்வாய்.
திரு. மறைமலை வேலனார்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.