spot_img

அண்ணல் அம்பேத்கர் என்னும் ஆகப்பெரும் போராளி

ஏப்ரல் 2023

அண்ணல் அம்பேத்கர் என்னும் ஆகப்பெரும் போராளி

விடுதலை பெற்று 75 ஆண்டு காலத்திற்கு மேல் ஆன பின் கூட சாதி எனும் சாபக்கேடு, வேங்கை வயலில் மலமாய் மிதக்கிறது என்றால், விடுதலைக்கு முன்பான ஆண்டுகளை நினைத்துப் பாருங்கள்.  உன் சாதிக்காரனுக்கெல்லாம் படிப்பு ஒரு கேடா? என்று மட்டுமல்ல, உங்களுக்கெல்லாம் படிப்பே வராது; நீங்க படித்தால்… அது தெய்வகுத்தம்டா என்றெல்லாம் சாபமிடப்பட்ட சாதி மக்களுக்கு, நிதி கிடைப்பதற்காகப் படித்தார்… படித்தார்… படித்துக் கொண்டே இருந்தார் பீமாராவ ராம்ஜி என்கிற அம்பேத்கர்.

ஊர்க் குருவி உயரப் பறக்கலாமா? அதுவும் தாழ்த்தப்பட்ட குருவி தலையை நிமிர்த்திப் பார்க்கலாமா? என்று கூச்சலிட்ட சமூகத்தின் முன் படித்தார்; மேலும் படித்தார் மேலும் மேலும் படித்தார். அவர் அளவுக்குப் படித்தவர் இந்தியாவிலேயே இல்லை என்று நாடு கடந்தும் பேசப்படும் அளவுக்குப் படித்தார். அவர் அப்படி படித்து படித்துப் பேற்ற கல்வியைத் தான். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் வலிமை கொண்டதாக அம்பேத்கர் முன்னிறுத்துகிறார். நீ கற்பதோடு மட்டுமல்லாமல் அதை மற்றவர்க்கும் கற்பி, புரட்சிசெய், ஒன்று சேர் என்கிற தாரக மந்திரத்தை வெறும் வார்த்தைகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்த்தார் அந்த மாமனிதர்.

இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜி

அனைவரும் அழைத்த பெயர்: அம்பேத்கர்

பிறந்த நாள் மற்றும் ஆண்டு: ஏப்ரல் 14, 1891

பிறந்த இடம்:  மாவ் [மத்திய பிரதேசம்]

இறந்த ஆண்டு: டிசம்பர் 6, 1956

அம்பேத்கரும் கல்வியும்:

கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர் அப்போதைய பரோடா மன்னரின் கல்வி உதவி மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் படிப்பு படித்தார். அங்கும் அவரை சாதிப் பிரச்சனை தொடர்ந்து துரத்தியது. ஆனால், அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அங்கும் ஒரு நல்ல ஆசிரியரின் உதவியுடன் தனது இளங்கலைப் பட்டத்தினைப் பெற்றார். மேலும் அதே பரோடா மன்னரின் உதவியுடன் அவர் முதுகலைப் படிப்பிற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்த்து படிக்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்விப் படிப்பிற்காக ஒரு இந்தியர் அமெரிக்கா பயணிப்பது இதுவே முதன்முறை ஆகும். அங்கும் தனது சிறப்பான படிப்பைத் தொடர்ந்த அவர் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.

சட்ட மேதையாக, சமூக அரசியல் புரட்சியாளராக மட்டுமல்லாது கல்விப் புலத்துக்கு அம்பேத்கர் ஆற்றிய பெரும் பங்கு இன்றும் பேசாப் பொருளாகவே நீடிக்கிறது. ‘கற்பி, ஒன்றுசேர், கிளர்ச்சிசெய் என்று முழகாமிட்ட அம்பேத்கர், கல்வியையே முதன்மைப்படுத்தினார். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிதியையும் அரநேதிகளையும் உருவாக்கக் கூடியதையே அவர் கல்ளி என்றழைத்தார். பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று மனிதர்களை வகைமைப்படுத்தும் சமூகத்தையெல்லாம் விழுமியங்களை மதிக்கும் சமூகமாக உயர்த்த கல்வியே கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பினார். குலத்தொழில் வழக்கத்தை மாற்றும் செயல்வடிவமாகவும் கல்வியை உருவகித்தார்.

கல்வியைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த மக்கள்தொகையை நான்காகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சோந்தவர்கள் முன்னேறிய இந்துக்கள். இரண்டாவது வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிராமணர் அல்லாதவர்கள் எனப்படும் இடைநிலை இந்துக்கள் மூன்றாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓடுக்கப்பட்ட மக்கள், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் குற்றப்பரம்பரைப் பழங்குடியினர்; நான்காவது இஸ்லாமியர்கள். இந்த நால்வரும் சமூக அந்தஸ்திலும் வளர்ச்சியிலும் சமமற்ற நிலையில் இருக்கிறார்கள். இவாகளில் மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அம்பேத்கரும் அரசியலும்:

இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் சான்பாகக் கலந்து கொள்ள இலண்டன் சென்ற அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக “இரட்டை வாக்குரிமை” என்ற சட்டத்தினை கேட்டுப் பெற்றார். பிறகு சில ஆண்டுகளில் காந்தியடிகளின் எரவாடா சிறை உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் பூனா ஒப்பந்தத்தின் காரணமாக இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு, தாழ்த்தப்பட்டோருக்கான தனித்தொகுதியை அரசியல் சட்ட ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவந்தார்.

சாதியின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் துயரை, தீராத் துன்பத்தை கிடைக்கும் தளங்களில் urocont ஆதாரங்களோடு நிறுவி, அம்மக்கள் சமுகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு விடுதலையடையத் தேவை அதிகாரம் நான் என்று முழங்கினார், அம்பேத்கர். அவர் இந்த நாடு அரசியல் விடுதலை அடையும்போது, அதன் முக்கிய அங்கமான ஓடுக்கப்பட்ட மக்களும் ஒட்டுமொத்தமாக விடுதலை அடைய வேண்டுமென்று காலநேரம் பாராது உழைத்த உள்ளதர்.

சட்ட அமைச்சர்:

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்த சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இதன் மூலம் அரசியல் சட்டத்தின் பிரிவுகவைத் தொகுத்து அதில் அனைத்து இந்திய ஒன்றிய மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு முதல் ஆட்சி நிர்வாகம் வரை அனைத்தையும் ஆராய்ந்து தொகுத்தார். இது மிகச் சிறந்த ஆவணமாக மட்டுமல்லாமல் இன்றளவும் வாழும் ஆவணமாகவும் கருதப்படுகிறது.

பௌத்த மதம் மீது கொண்ட ஈடுபாடு:

தன்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வரும் இன்னல்களுக்குக் காரணம், அவர்கள் இந்து மதத்தில் இருப்பதனாலே என்று நினைத்த அவர், சிறிது சிறிதாக புத்த மதத்தின் மீது ஈடுபாடு காண்பித்து பௌத்த மதத்திற்கு மாறவும் முடிவேடுத்தார். 1935 இயோலா மாதாட்டில் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்ன அம்பேத்சர், இலட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன், நாக்பூரில் அக்டோபர் 14, 1956 அன்று முறைப்படி பெளத்தத்தைத் தழுவினார்.

அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள்:

பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தன் அமைச்சர் பதவியைத் துறந்த முதல் மனிதர், அண்ணல் அம்பேத்கர் ஆவார் பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து மற்றும் மறுமணம் போன்ற முற்போக்கான அம்சங்களடங்கிய இந்துச் சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பெரிதும் முயன்றார். பார்ப்பனர்களும், மத வெறியர்களும் இம்முன்னரைவு நிறைவேறா வண்ணம் தடுத்து நின்றனர். நேருவும் பார்ப்பனர்களுக்கு அஞ்சி இம்முன்வரைவ நிறைவேற்ற அளித்த உறுதிமொழியிலிருந்து நழுவினார். இதனைக் கண்டு மனவேதனை அடைந்த அம்பேத்கர் தன் அமைச்சர் பதவியை உதறியெறிந்துவிட்டு, காங்கிரஸ் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார்.

பெண்களின் பிரச்சனையும் தீண்டத்தகாதவர்கள் பிரச்சனையும் ஒன்றுதான் என்றும், இருவர் மீதும் தீட்டு என்கிற கருத்து திணிக்கப்பட்டிருக்கிறது என்றும் பெண் மீது ஆண் திணிந்திருக்கிற எல்லா கோட்பாடுகளையும் மீறாத வரை பெண்ணுக்கு வீடுதலையே இல்லை என்றும் எழுதினார். இலட்சியப் பெண்கள் புராண இதிகாசங்களில் எவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தார்கள் என்றும், பெண்களை மனு எவ்வாறு இழிவுப்படுத்தினார் என்றும் அம்பலப்படுத்தினார்.

ஒடுக்கப்படும் அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் என்னைவீட, என் நாடு பெரியது. என் நாட்டைவிட என் சமுதாயம் பெரியது. அந்தச் சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய பணிகள் மலைபோல் கொட்டிக் கிடக்கின்றன’ என்பதைத் தினம் தினம் மனதில் அசைபோட்டவராக, வண்ணத்து வைரமணிப் மண்டபத்தையும், பஞ்சணையும் தூக்கியெறிந்த மகத்தான தலைவர் பாபா சாகேப் அம்பேத்கர்.

நான் மரணமடைந்த பின், என் உடலின் மீது நாட்டின் தேசியக் கொடியைப் போர்த்துவதாலோ அல்லது என் தோழர்கள் மலர்மாலைகளைப் போட்டு அஞ்சலி செலுத்துவதாலோ மரியாதை கிடைத்துவிடாது. மரணத்தருவாயிலும், உடற்கூட்டில் இருந்து உயிர்ப்பறவை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறும் தருவாயிலும், என் சமூக மக்களின் நலனுக்காக ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும். உயிர் பிரியும் தருவாயில் அப்புத்தகத்தின் பக்கங்கள் என் மீது விழுவதுதான் நான், எதிர்ப்ார்க்கும் மரணம் என்று சொன்னவர் அம்பேத்கர்.

“என்னதான் வான் உயரப் பறந்தாலும் இங்குள்ளவர்களுக்கு நான் ஒரு சாதாரண தாழ்த்தப்பட்டவன்தானே. நான் இத்தியாவின் அல்லது உங்களின் தேசியத் தலைவன் அல்ல, இந்த நிலைகூட எனக்கு மறுக்கப்படுகிறது. எனவேதான் என்னை “மகர் மக்களின் தலைவர் என்கிறார்கள். ஒட்டுமொத்த தீண்டப்படாதோரின் தலைவர் என்றுகூட என்னை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு சிறு வட்டத்துக்குள் என்னை அடைக்கும் முயற்சியில் இந்தியத் தலைவர்கள் ஈடுபடுகிறார்கள்” என்று வருத்தம்பொங்கச் சொன்னார் அண்ணல் அம்பேத்கர்.

காலங்கள் தாண்டியும் நினைவு கூறப்பட வேண்டிய அண்ணல்:

விடுதலையடைந்த இந்தியா எப்படி இருக்கிறது. இந்தியத் தலைவர்கள், இந்திய மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் இத்தியாவுக்கு வத்தார்.

இரவு நேரத்தில் காந்தியின் வீட்டுக்குச் சென்றார். “காந்திஜி உறங்கச் சென்றுவிட்டார்’ என்றார் காவலாளி.

நாட்டின் பிரதமர் நேருவின் வீட்டுக்குச் சென்றார் அந்தப் பத்திரிகையாளர் நேருவும் உறங்கியிருந்தார்.

அடுத்து, அம்பேத்கரின் வீட்டுக்குச் சென்றார். அங்கே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்த அம்பேத்கரைச் சந்தித்த அந்தப் பத்திரிகையாளர். “காந்தி, நேரு இருவரையும் தேரில் சந்தித்துப் பேட்டி காணச்சென்றேன். இருவருமே உறங்கிவிட்டார்கள், நீங்களோ… நடுநிசி கடந்தும் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கின்றீர்களே?!” என்று வியப்பு மேலிடக் கேட்டார்.

அவர்களின் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்காக நான் விழித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார் அண்ணல்.

அம்பேத்கரைப் போற்றும் நாம் சாதிய வேறுபாடுகளற்ற, தீண்டாமைக் கொடுமைகள் இல்லாத ஆண், பெண் வேறுபாடு அல்லாத சமத்துவ சமூகம் உருவாகிட கற்போம்! புரட்சி செய்வோம்!! ஒன்று சேர்வோம்!!!

திரு. அருண் தெலஸ்போர்,

செய்தித் தொடர்பாளர்,

செந்தமிழர் பாசறை வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles