spot_img

அறமற்ற அரசியலை ஏன் வீழ்த்த வேண்டும்!

அக்டோபர் 2025

அறமற்ற அரசியலை ஏன் வீழ்த்த வேண்டும்!

தமிழர் நாட்டை ஆள்வது எங்கள் அடிப்படை உரிமை..!!
இங்கு வாழும் உரிமை யாவருக்கும் உண்டு! ஆனால்
தமிழ் நாட்டை ஆளும் உரிமை தமிழர்களுக்கே உண்டு..!!

வந்தவன் போனவனை எல்லாம் ஆட்சி செய்ய
வரவேற்று வழி விட்டதன் விளைவுகள் பல்லாயிரம்..!!
தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்விழந்தோமே! தோழர்களே ஏன் எப்படி?

அடிக்கப் போனால் பூனையும் புலியாகுமென்பாரே!
அடிபட்டு மிதிபட்டும் அமைதியாய் இருப்பதேனோ?
தமிழ் மறவர்களின் வீரம் எங்கே? ஆளுமை எங்கே?

கொட்டக் கொட்ட குனிந்து கொடுத்தோம்!
குனிந்துக் குனிந்து கூன்விழுந்து போனோமே! கொதித்தெழு தமிழா..!!

கல் தோன்றி மண் தோன்றிய காலத்தே;
கையில் வாளோடு முன் தோன்றிய
உலகின் மூத்தக்குடியா – நாம்..! சிந்திப்பீர் தமிழர்களே..!!

நான்கு திசையெங்கும் தமிழ் மண்ணை இழந்தோம்..!! அதில் ஒன்றுதான் கச்சத்தீவு..!!
கடாரம் வென்ற சோழரும்
கடைசியாய் நம் சேது மன்னரும்
சொந்தமாய் ஆண்டு வந்த கச்சத்தீவினை விட்டுக்கொடுத்தது யார்?

நமக்குத் தீமை பயக்கும் என்றறிந்த பின்னும்
தலையசைத்துத் தாரை வார்த்ததே எம் இனத்தை அழித்த காங்கிரஸ் அரசும் திருட்டு திமுகவும்!
மறந்துவிடாதீர்; மறந்தும் இருந்து விடாதீர்கள்..!!

தமிழின் காவலென்று விளித்துத் தமிழர் வாழ்வழித்தது யார்? வாய்மூடி மௌனித்து ஊழல்வாதிகளை நாமே விரும்பி ஏற்க வைத்த ஆரிய திராவிட ஓநாய்கள்..!!

ஊழலின் ஊற்றாகி ஊரை அடித்து உலையில் போடும் உறுபிணியாய் வந்தது தமிழரல்லாத் தலைமை தமிழ்நிலத்தின் இருண்ட காலமாய்!!

வடக்கில் திருவேங்கடத்தை இழந்தோம்..!!
வடமேற்கில் பெங்களூருவையும் தங்க வயலையும் இழந்தோம்..!!
மேற்கில் கொங்கு நாட்டையும் சேர நாட்டையும் இழந்தோம்..!!

தமிழா உன்றன் கண்ணைக் கட்டி
கருமையே நிறமென்றார் – ஏற்றோம்..!!
நம் உதிரத்தை உறிஞ்சிக் குடித்தார் – அறிந்தும் அறியாமலும் ரசித்தோம்..!!

கிழக்கில் கருணையற்ற கயவர்களின் காசைக் காக்க கச்சைத் தீவை இழந்தோம்..!!
தேசம் மீட்ட பேராயக் கட்சியே தமிழர்க்குப்
பகையாய்ப் போனது பெரும் ஏமாற்றமே..!!

தமிழர் வேடம் போட்ட கட்சி – தமிழரை மோசம்
செய்து சூழ்ச்சிகளால் வாகை சூடி வாழுதே..!!

உடல்மேவி ஓடுங்குருதி கலப்படமாயிற்றோ! சோரம் போனாயோ தமிழா நீ? வீழ்ந்து கிடந்தது போதும்..!!
உன் வலியை நீ சொல்லாமல் ஊராரை வந்து உணரச் சொல்வாயா…?

சிங்கள பண்டார நாயக சீதனம் கேட்கத் தூக்கிக் கொடுத்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியார் அதற்குத் துணை போன திமுக அரசு மறந்துவிடாதீர்..!!

பைந்தமிழர்ச் சொத்தைப் பாசாங்கு செய்து
இனப்பகைவர்க்குத் தந்து வதைத்தார்..!!
திராவிடத் திருடரும் ஆக்கினர்த்
தமிழரைக் குருடராய்ச் செவிடராய்..!!

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை இழந்தோம்..!! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து புதுமை செய்த ஓங்கோல் கூட்டம் எழுதிய
மற்றுமோர் மரணசாசன மன்றோ..?

இனியும் அவர் வேடம் நம்பாதீர்! – இல்லை இடம் இங்கே திராவிடத்திற்கு என்ற நிலை
இப்போதே கயவர்க்குப் பரிசளிப்போம் வாரீர் வாரீர்..!!

வரும் தேர்தலில் இளந்தமிழர்ப் புலிகளையே தெரிவுசெய்க..!!
இடைவந்த இடர் நீக்கும் உரையெழுத
இங்கொரு போர் முரசறைவோம்..!!

1974-லின் இந்திரா சரத்தை உடைத்து
இந்திய ஒன்றியத்துடன் தீவை இணைக்க நினை!1 சக்தி பிறக்கும்…. செய்!… வெற்றி கிடைக்கும்..!!

இந்திய வழக்காடு மன்றங்களில் வென்று,
சர்வதேச கடல்சார் நீதி மன்றம் சென்று
வெற்றிச்சங் கொலிக்க வைக்க
நாம் தமிழராய் சேர்ந்திடுவோம்..!!

தமிழர் ஒற்றுமை ஓங்கட்டும்! உலகமெங்கும் தமிழ்த் தேசியம் செழித்துப் பரவட்டும்..!!
தமிழர் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு! நம்மை நாமே ஆளும் வகை செய்வீர்..!!

நமக்கொன்று எனில் தமக் கென்பாரேத் தீர்வு..!!
தாய் மண்ணின் வளத்தைக் காப்போம்..!!
தாய்த் தமிழை நேசிப்போம்! தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்வோம்..!!

நாட்டை நாளைய இளந்தமிழ்ப்
பிள்ளைகளுக்கே கையளிப்போம்..!!
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்..!!
தோற்ற தழும்பினூடே வெற்றிக்கான விழுப்புண்கள் உருவாகட்டும்!

தமிழால் இணைந்து நாம் தமிழராய் நிமிர்வோம்..!
நாம் தமிழர்!

திரு. சி.தோ.முருகன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles