spot_img

இயற்கை வளம் காப்போம்! நலமாக வாழ்வோம்!

இயற்கை வளம் காப்போம்! நலமாக வாழ்வோம்!

“அப்பா சீக்கிரமா வாங்கப்பா பஸ் புறப்பட போகுது” என்றான் கண்ணன்.

” இதோ வந்துட்டேன்”. “சீக்கிரமா கொடுங்க சில்லறையை… பேருந்து போகப்போகுது” சில்லறையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக் கொண்டு வேகமாக பேருந்தில் ஏறினார்.

பேருந்தில் மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் கண்ணன் சன்னலோரத்திலும் அவனுக்கு அருகில் அவனது தந்தையும் அமர்ந்து கொண்டு, அவர்களது பயணத்தை துவங்கினார்கள்.

“அப்பா இந்த முறை எந்தெந்த இடமெல்லாம் சுற்றி பார்க்கப் போறோம்”. ” இந்தக் கோடை விடுமுறையில் உனக்கு உங்க அம்மா மூன்று நாள் சுற்றுலாவிற்காக அனுமதி கொடுத்திருக்கிறாள்… இன்றிலிருந்து நான்காவது நாள் காலையில் இருவரும் வீட்டில் இருக்க வேண்டும்.”
டிக்கெட் டிக்கெட் என்று நடத்துனர் வருவதை கண்ட கண்ணன் ” சரி சரி பேசுனது போதும் டிக்கெட் எடுங்க அப்பா” என்றான்.

நடத்துனரிடம் “குற்றாலத்துக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க” என்றார் கண்ணனின் அப்பா”. ” சாயல்குடியிலும் தூத்துக்குடியிலும் கொஞ்ச நேரம் நிக்கும் பரவால்லையா” என்றார் நடத்துனர். “சரி கொடுங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“ராம்நாடு டு குற்றாலம் வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போடுங்கப்பா”

“பொறுப்பா பொறு. போயிட்டு வந்து எல்லா புகைப்படத்தையும் போடுவோம்”.

கொஞ்சம் இஞ்சி கோணலாக முகத்தை வைத்துக் கொண்டு “சரி: என்றான்.

கண்ணன் ஒரு நாள் அவனின் அப்பாவிடம் அருவியில் குளிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான். அது அவனது மணக்கண்ணில் வந்து போனது. குற்றாலம் மட்டும் போகிறோமா? வேறு எந்த இடம் எல்லாம் போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தான் “அப்பா இந்த முறை எந்த எந்த ஊர் சுத்தி பார்க்க போறோம்” என்றான்.

“முதல்ல போயி குற்றால அருவியில் குளிக்கிறோம், அடுத்த நாள் காலையில் கன்னியாகுமரி அங்கே நான்கைந்து இடம் பார்க்கிறோம், அதுக்கப்புறம் திருச்செந்தூர் முருகன் கோவில் அங்கிருந்து நேர ஊருக்கு போறோம்” என்றார் அவனது அப்பா.

கண்ணன் முகத்தில் சிறு அச்சத்துடன் “கன்னியாகுமரியா அங்கே எதுக்குப்பா? அங்கே நல்லவர்கள் எல்லாரையும் திமுகவை சேர்ந்த ரவுடிகள் வெட்டிக்கொள்கிறார்களாம் அப்பா”

“யார்ரா சொன்னது உனக்கு” என ஆச்சரியமாக கேட்டார் அவனின் அப்பா.

“எங்க கணக்கு டீச்சர் தான் சொன்னாங்க. அவங்க கன்னியாகுமரி தான்”.

“என்ன சொன்னாங்க?” “டீச்சர் சொன்னதை அப்படியே சொல்ல வா அப்பா”?

“அப்படியே சொல்லு பாப்போம்” அவனின் அப்பா.

இந்த பாருங்க பசங்களா, அடுத்த வருஷம் பத்தாம் வகுப்பு போறீங்க படிப்பு ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் நம்ம வாழற நாடு, நம்மை சுற்றி இருக்கிற சூழல், நம்முடைய சுற்றுச்சூழல் சரிவர இருந்தால்தான் அதில் வாழும் மக்களாகிய நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். என்னுடைய ஊர் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பக்கம். அங்கே பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த மலையை வெடிவைத்து உடைத்து அள்ளிச் செல்கின்றார்கள்… அண்டை மாநிலத்திற்கு 24 மணி நேரமும் கடத்தல் பணி நடக்கிறது. அதுவும் அரசின் உதவியோடு என்பது தான் வேதனைக்குரிய செய்தி.

இதை தட்டிக் கேட்ட நல்ல மனிதனை திமுகவை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டார்கள்.

அதுவும் கிறிஸ்தவ மக்கள் வழிபடும் இடத்தில் கொலை செய்து விட்டார்கள். அந்த புனிதமான இடத்திற்கு கூட திமுக காரர்கள் மரியாதை கொடுக்கவில்லை.

இங்க பிள்ளைகளுக்கு நல்லது சொல்லிக் கொடுக்க வேண்டியது ஆசிரியரான எனது கடமை.

நீங்கள் எப்பொழுதும் நல்லவர்கள் பக்கம் நில்லுங்கள். சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நல்லவர்கள் பக்கம் நில்லுங்கள் என்று சொன்னாங்க அப்பா என்றான் கண்ணன்.

மகன் சொல்லுவதை ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்த தந்தை “தமிழ்நாடு என்பது தமிழர்களின் சொத்து, இதை திராவிடர்கள் 50 ஆண்டு காலமாக ஆட்சியை பிடித்துக் கொண்டு எல்லா வழியிலும் அழிக்கிறார்கள். திராவிடர்களின் ஆட்சிக் காலத்தில் தான் அதிகமாக தமிழர்களின் வரலாறும், இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டது, அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது” இதுதான் உண்மை நிலை. உங்களது ஆசிரியர் அருமையாக விழிப்புணர்வு கொடுத்திருக்கிறார்.

திராவிடர்களுக்கு தமிழ்நாடு சொந்த வீடு அல்ல… அதனால்தான் இயற்கை வளங்களையும் வரலாறுகளையும் அழிக்கிறார்கள்.

தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் சொந்த வீடு… அதனால் ஒவ்வொருவரும் தன்னுடைய வீட்டை பாதுகாப்பது போன்று தமிழ் நாட்டை பாதுகாப்போம்.

திரு. க. நாகநாதன்,

naganathanji@gmail.com

செந்தமிழர் பாசறை – ஓமன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles