உலகம் போற்றும் நாயகன்
அநீதியை கண்டால் அழிக்க துடித்தவர், அடிமை நாடுகள் எல்லாம் என் தாய் நாடு என்று முழங்கியவர்,வல்லாதிக்கத்தை நிற்பதே தன வாழ்நாள் பணியை ஆற்றியவர், எதிரியின் தோட்டாக்களை கேட்டு தன தோளில் வாங்கியவர் அவரே புரட்சி நாயகன் சேகுவேரா.
- அர்ஜென்டினாவில் 1928 ஜூன் 16ல் பிறந்தார் சேகுவேரா.
- அவர் இயற்பெயர் எர்னஸ்டோ குவரா.
- சிறு வயதிலேயே அவருக்கு ஆஸ்துமா நோய் வந்தது.
- அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை அதனால் அவர் வீட்டிலேயே கல்வி கற்றார்.
- பள்ளி படிப்பு முடித்த பிறகு அவர் மருத்துவம் படித்தார்.
- கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபிறகு, தனக்கு ஒரு வருடம் ஒய்வு தேவை என்று கடிதம் எழுதி கொடுத்தார்.
- அவரும் அவர் நண்பனும் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தென்னமெரிக்கா முழுவதும் சுற்றி வந்தனர்.
- அவர் சுற்று பயணம் செல்வதற்கான முக்கிய கரணம், அவருக்கு அங்குள்ள நோய்களை பற்றி அறிந்து கொள்ளணும் என்று ஆசை.
- அவர் சென்ற இடம் எல்லாம் வறுமை மற்றும் தொழுநோய் பரவி இருந்தது.
- அச்சமைத்தில் தொழுநோய் இருபவர்களை யாரும் தொட்டு பேச மாட்டார்கள்.
- ஆனால் சே அவர்களை கட்டி தழுவி அவர்களுக்கு வைத்தியம் செய்தார்.
- அங்குள்ளவர்கள் ஏன் இவளவு வெறுமையாக இறுக்கர்கள் என்று புரிந்துகொள்ள முயற்சித்தார்.
- அவருக்கு அந்த பயணத்தின் பிறகு ஒரு கேள்வி எழுந்தது, ஏன் இவளவு வறுமை, நாடு வளமிக்க நாடக இருக்கு ஆனால் மக்கள் வறுமையாக இறுக்கர்கள்.
- அவர் தென்னமெரிக்கா முழுவதும் உள்ள வறுமைக்கு காரணம் ஏதோ ஒரு அமைப்பு என்று புரிந்து கொண்டார்.
- கல்லூரி படிப்பை முடித்து விட்டு மறுபடியும் அதே போல் சுற்றுப்பயணம் சென்றார்.
- இன்னும் அங்கே வறுமை தான் இருந்தது.
- அதற்கு காரணம் அமெரிக்கா எனும் வல்லரசு நாட்டின் அரசியல் தான் என்று புரிந்துகொண்டார்.
- அதே சமயத்தில் குவாத்தமாலாவில் பெருந்தோட்டமுறையை எதிர்த்தது புரட்சி நடைபெற்றது.
- அந்த புரட்சியை பார்த்து புரட்சி என்றல் என்ன என்று கற்றுக்கொண்டார் சேகுவேரா.
- அடுத்த ஆண்டு அவர் பிடல் காஸ்ட்ரோவை மற்றும் அவரது சகோதரரை சந்தித்தார்.
- அவர்கள் அங்கிருந்து கியூபா சென்று அங்கு புரட்சி செய்து அங்கு மக்கள் ஆட்சி நிறுவலாம் என்று முடிவு செய்தனர்.
- அவர்கள் அங்கிருந்து கியூபா சென்று அங்கு புரட்சி செய்து அங்கு மக்கள் ஆட்சி நிறுவலாம் என்று முடிவு செய்தனர்.
- அவர் சொன்னார், “இந்த உலகில் எந்த எந்த நாடுகள் அடிமைப்பட்டு கிடக்கிறதோ, அந்த நாடுகள் எல்லாம் என் தாய்நாடுகள்”.
- அவர்களின் விடாமுயற்சி மற்றும் அங்குள்ள மக்களின் ஆதரவுடன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி இறுதியில் கியூபா புரட்சி வென்றது..
- பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபர் ஆனார்.
- சேகுவேரா கியூபாவின் தேசிய வங்கியின் தலைவர் ஆனார்.
- ஆனால் சில மாதங்கள் களித்து அவரது அந்த பதவியை விளக்கிவிட்டு ஆராய்ச்சி துறை தலைவர் ஆனார்.
- அதன் பிறகு அவர் உலகமெங்கும் சுற்று பயணம் மேற்கொண்டார்.
- ஒரு நாள் அவர் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் காங்கோ சென்றார்.
- அவர் காங்கோவில் உள்ள அடிமைத்தனத்தை ஒழித்து அவர்களுக்கு விடுதலை வாங்கி கொடுக்க சென்றார்.
- சேகுவேராவை கொல்வதற்காக அமெரிக்கா கடும் முயற்சி செய்தது.
- சேகுவேரா அடுத்து காங்கோவில் இருந்து பொலிவியா சென்றார்.
- அங்கே சென்று புரட்சியில் ஈடுபட்டார்.
- இறுதியாக ஒரு ஆடுமேய்க்கும் சிறுமி காட்டிக்கொடுத்ததால் அமெரிக்கா ராணுவம் இவரை கைது செய்தது.
- அவர் ஒரு கட்டிடத்தில் அடைத்து வைக்க படுகிறார்.
- அடுத்தநாள் அவரை சுட்டுவதாக திட்டம் போட்டனர்.
- அன்று இரவு அங்குள்ள ஆசிரியரிடம், அது என்ன இடம் என்று கேட்டபோது அவர் அது ஒரு பள்ளி என்று சொன்னார்.
- சேகுவேராவுக்கு அதிர்ச்சி, இவ்வளவு மோசமாக ஒரு பள்ளி இருக்குதா என்று வியந்தார்.
- அடுத்தநாள் 1967 அக்டோபர் 9ல் நற்பகல் 1:1௦ அளவில் அவர்மேல் 9 தோட்டாக்கள் பயந்து அவரது உடல் சரிந்தது.
- இதை கேட்ட கியூபா துக்கம் அனுசரிக்கிறது.
- சேகுவேராவின் பிரபலமான ஒரு வாக்கு,”அநீதிகளை கண்டு உன் இரத்தம் கொதித்தால் நீயும் என் தோழன்”
செல்வன். க. கார்த்திக்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.