எங்களின் கொள்கைத்தலைவன்
கக்கன் காமராஜனுக்கு பிறகு அறத்தின் வழிநின்று கொண்ட கொள்கையில் சமரசமில்லாத சண்டை செய்யும் சாமானியனின் அரசியல் யுத்தத்தின் அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் அடித்தளம் நடுங்கி நிற்கிறது.
காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த தமிழ் தேசிய இனத்தின் பிள்ளைகள் விழித்து கொண்டனர் நாம் யார்???நமக்கானவர் யார்???என்ற கேள்வியை தன் பரிசோதனை செய்ய தொடங்கி விட்டனர். எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுதோ, எங்கெல்லாம் மக்களின் உரிமைகள் அதிகார வர்க்கத்தால் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவனின் கால் தடம் பதியும்; அது நாளைய வரலாறும் பதிவு செய்யும்.
வந்தவரை எல்லாம் வாழ வைத்தோம்; ஆள வைத்தோம்; இனி நம் சொந்தவரை மட்டுமே ஆள வைப்போம். அது நமது அடிப்படை உரிமை. உரிமையும் உணர்வையும் இழந்து உயிரற்ற உடலாக வாழ்வது செத்த பிணத்திற்கு சமமானது. வரலாற்றில் நம் முன்னோர்கள் செய்த பெரும் தவறை அடுத்த தலைமுறை பிள்ளைகள் நாம் செய்து விடக்கூடாது.
கோடிகளுக்கு விலை போகாது கொண்ட கொள்கைக்காக நிற்பவன் தான் எங்களின் கொள்கைத்தலைவன்.மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு என்று போதித்தவன் பாதிக்கும் முன்பே நான் போதித்தை இறுக பற்றிக்கொள் என்று எடுத்துரைத்தவன்.காலம் கொடுத்த கடைசி வாய்ப்பு, அரணையூர் பெற்றுத்தந்த அஞ்சா நெஞ்சம், செந்தமிழன் சீமான் தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை.
திரு. ச.பாலமுருகன்,
சுபைல் மண்டலம்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.