மே 2022
கடந்துவிட்ட பொற்காலம் (முச்சங்கங்கள் முதல் மூவேந்தர்கள் வரை)
உன் குருதி என் குருதி வேறு இல்லை நம் தாய் தந்த குருதி தமிழானதால்!
உன் பாதை என் பாதை வேறு இல்லை நாம் போகும் பாதை அறமானதால்!
செவிகேட்கும் சொல்லெல்லாம் தமிழாகட்டும்! சிந்தைக்குள் தமிழ் ஒன்றே
ஊற்றாகட்டும்! திசையெங்கும் முடிசூடி வாழ்ந்திட்ட தமிழ்த்தாயே!
உன்பிள்ளை நானென்று சொல்லிக் கொள்ள எந்நாளும் மகிழ்வேன்!
தொல்காப்பியம் கூறும் திணைவாழ்வியல்:
கல் கொண்ட தென்மதுரையில் பாண்டியர்களால் நிறுவப்பட்டது. முதல் சங்கம். தென்மதுரையைக் கடல்கொண்ட பிறகு கபாடபுரத்தில் நிறுவப்பட்டது. இவை சாங்கம். கபாடபுரமும் ஸ்கொண் பிறகு மதுரையில் நிறுவப்பட்டது. கடைச்சங்கம் இன்று நம்மிடம் இருப்பவற்றுள் முதல் நால், மிகப்பழமையான தூள் தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் வருக்களில்லை: மனித வாழ்வியலுகரும் இலக்கணம் வகுத்துள்ள து.
பொருளதிகாரம், அகத்திணையியலின் முதற்பாவானது கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற திணை வாழ்வியல், அன்பின் ஐந்திணை எனப் போற்றப்படுகிறதாகச் சொல்கிறது. கைக்கிளை எனும் ஆண் மட்டுமே விருப்பம் கொண்டு பெண் விரும்பாமல், பெண் மட்டுமே விருப்பம் கொண்டு ஆண் விரும்பாமல் வாழ்கின்ற வாழ்க்கை ஒருதலைக்காதல்; இது வாழ்க்கைக்கு ஏற்றதல்ல என்கிறார் தொல்காப்பியர். இதனால், எல்லா காலங்களிலும் இளைய தலைமுறை, அவர்களைச் சார்ந்த குடும்பம், சமூகமென அனைத்துமே சிக்கல்களைச் சந்திக்கின்றன. ஒருதலைக்காதலின் உச்சத்தின் வெறுப்பாக, நம்மை விரும்பவில்லை என்ற ஒரே காரணத்தினால் விரும்பியவர்களின் மீது அமிலத்தை வீசுகின்ற நிலையும், கொலைகளும் நடக்கின்றன. ஒரு தலைக்காதலின் வாழ்வியல் புரிதலைப்பற்றி பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, தொல்காப்பியர் கூறிவிட்டார். பெருந்திணை எனும் ஒரு ஆண் தன்னைவிட மிக மூத்த பெண்ணை விரும்புவது, ஒரு பெண் தன்னைவிட மிக மூத்த ஆணை விரும்புவது, பொருந்தாக்காமம் என்று கூறுகின்றார்.
வயது இடைவெளி கூடுதலாக இருந்தால் இணையர்களின் இல்லற வாழ்க்கையில் இன்பமிருக்காது என்பதை இதைவிடத் தெளிவாகக் கூறமுடியுமா? சில மாதங்களுக்கு முன்பு “நாட்படு தேறல்” என்ற பெயரில் வந்த ஒரு பாடலில், பள்ளிச்சிறுமி ஒருவர் மிக மூத்த வயது ஆணை விரும்புவதுபோலக் காட்சியமைக்கப்பட்டுப் பாடலாக்கப்பட்டது. தமிழர்களின் வாழ்வியலுக்கும் பண்பாட்டிற்கும் எதிரானது என்பதனால், பல்வேறு தரப்பு மக்களும் எதிர்வினை ஆற்றினார்கள், பொருந்தாக்காமம் வாழ்க்கைக்கு உதவாது என்பதையும் தொல்காப்பியர் மிகத்தெளிவாகக் கூறியுள்ளார்.முதற் பொருளானது, நிலமும் பொழுதும்; உலகத்தில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் ஆதாரமாக இருப்பவை முதற்பொருளாகும்.

கருப்பொருளானது தெய்வம், தொழில், உணவு, மரங்கள், விலங்குகள், பவைகள், நீர் நிலைகள். பறை முழக்கம், யாழ் வகைகள் என்பவை. கடவுளைக்கூட கருப்பொருளில் ஒன்றாகத்தான் வைத்தார்கள்; காரணம் காணாத ஒன்றை கற்பனையாக கூற விரும்பவில்லையாதலால், உரிப்பொருளானது மனித வாழ்வின் ஊர்வுகளை கூறும் புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கள், இருத்தல் ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என திணை வாழ்வியலுக்கு ஏற்றவாறு முதற்பொருள். கருப்பொருள் மற்றும் உரிப்பொருள் அமைந்திருக்கும் என்பதைக் கூறுகிறது தொல்காப்பியம்.
இதிகாச புராணங்கள் கூறுவது போன்று அல்லது சமய நூல்களைப் போன்று, ஒரு பொழுதுக்குள் எல்லாம் நடந்தவிடும், ஆயிரம் கரங்கள் கொண்டு, நூறு தலைகள் கொண்டு உயிர்கள் இருக்கின்றன; மனிதர்கள் இருக்கின்றார்கள் என்று கூறவில்லை, நமது நூல்கள். கல்வி, பொருளாதாரம், அரசின் கடமை, பொது மக்களின் கடமை, போர், வீரம், கொடை, பெண்கள் என எல்லவற்றையும் பகுத்தாய்ந்து கூறுவதுதான், தொல்காப்பியம், சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் போன்றவை. பொது அறிவு என்பது வேறு அறிவு பொதுவானது என்பது வேறு. அறிவு பொதுவாக இல்லையென்றால், கல்வி இருந்திருக்காது: கல்வி பொதுவாக இல்லையென்றால் பெண்கல்வி இருந்திருக்காது, பெண்கல்மி இல்லாமல் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்கள் இருந்திருக்கமாட்டார்கள். பெண்பாற்புலவர்கள் புலவர் களாக மட்டுமில்லாமல், அரசவைத் தூதுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அரசவை தூதர்களாக இருப்பதற்கு கல்வி மட்டும் போதுமானதாக இருந்திருக்குமா என்றால் இல்லை; அவர்கள் ஆகச்சிறந்த வீரர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

பெருநகர வாழ்க்கையும், இருநகரக் கோட்பாடும்:
சங்க இலக்கியத்தில், பெண்களை வர்ணிக்கும்போது ஐம்பத்திரண்டு இடங்களில் நகரத்தை மேற்கோள் காட்டி, வர்ணிக்கின்றார்கள் என்றால், நகரத்தின் அழகும் அதன் வணப்பும் எப்படி இருந்திருக்கும்? நகரக் கட்டமைப்பில் மேம்பட்டு வாழ்ந்தோம் என்பதற்கான சான்றுகள் தானே இவையெல்லாம்? சிலப்பதிகாரப் புகார் காண்டத்தில் மங்கல வாழ்த்துப்பாடலின் கடவுள் வாழ்த்து “திங்களை போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்! என்று கூறிய பிறகு பூம்புகார் போற்றுதும்! என்று கூறுகின்றார்கள் என்றால் நகர வாழ்க்கையும் அதன் கட்டமைப்பும் அதன் வனப்பும் எப்படி இருக்கும் என்பதை அறிய முடிகிறது. இரு நகரக்கோட்பாடு என்பது அரசவை கொண்ட கோட்டை நகரங்கள் தனியாகவும், வாணிப நகரங்கள் தனியாகவும் இருந்தன. மதுரை, கூடலூர் போன்றவை அரசவை நகரங்களாகவும், தொண்டி, முசிறி, கொற்கை, அழகன்குளம் போன்றவை வணிக நகரங்களாகவும் இருந்தன.
முசிறியைச் சேர்ந்த வணிகர் ஒருவர், அரேபியர்களோடு வாணிபம் செய்வதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தமொன்று கிடைத்துள்ளது என்று சிந்துவெளி ஆராய்ச்சியாளர் ஐயா இரா. பாலகிருட்டிணன் அவர்கள் கூறுகின்றார். பொருள்களை மாட்டு வண்டியில் ஏற்றிக் கப்பலுக்கு எடுத்துச் செல்வது, கப்பலில் இருந்து இறக்கி ஓட்டகத்தில் ஏற்றுவது, இடையில் கப்பல் கவிழ்ந்தாலோ அல்லது வேறு சிக்கல்கள் நிகழ்ந்தாலோ யார் பொறுப்பேற்றுக்கொள்வது, ஒருவேளை பணம் கொடுக்காது ஏமாற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்ற தெளிவான ஒப்பந்தம் போடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. சங்க இலக்கிய வாழ்வியல் என்பது உண்மையென்பதை மண்ணுக்குள் புதைந்து கிடந்த கீழடியும் ஐயமற நிறுவியுள்ளது.
சங்க இலக்கியத்தில் விலங்குகள் பற்றிய கூறுகள்:
கவரிமா:
கவரிமா என்பது மான் அல்ல; ஒருவகை காட்டெருமையாகும். இது கடல் மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் வாழக்கூடிய உயிரினமாகும். அதற்குக் கீழிறங்கினால் அதன் மயிர் தீங்கி உயிரிழக்க நேரிடும். அதன் வாழ்வியலைப் பற்றி புறநானூற்றுப் பாடல்(132) 49 வரை உள்ள வரிகள்,
“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி, அயல் தகரத் தண்ணிழல் பிணையடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமையம், தென்திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே..”
கவரி என்கிற இந்த விலங்கு, நரத்தை என்கிற நறுமணம் வீசும் புல்லை உண்டு, பாறைகளுக்கிடையில் இருக்கும் நீரைப்பருகித் தகரம் என்கிற மரத்தின் நிழலில் இளைப்பாறுகின்றன: அப்படி இளைப்பாறுகின்றபோது, நாளையும் இதுபோல் நறும்புல்லை உண்டு சுனை நீர் அருந்தி வாழ்வோம் எனக் கனவு காண்கின்றன என்று இப்பாடல் கூறுகிறது.
ஒட்டகம்:
“குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு கடுங்கால் ஓட்டகத்து அலகு பசி தீர்க்கும் கல் நடுங் கவலைய கானம் நீந்தி”
வாணிபத்திற்காகவோ அல்லது பயணத்திற்காக பயன்படுத்தும்போது, ஏழு நாட்களாக தொடர் பட்டினி கிடக்க நேரிட்டால் ஒட்டகம் எலும்பைத்தின்னும் என்பது உண்மை. இராஜஸ்தானில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பிகானீரில் உள்ள ஓட்டக ஆராய்ச்சி நிறுவனம், இதை உண்மை என்று கூறுகிறது. தொடர் பட்டினி கிடக்கும்போது “பாஸ்பரஸ் என்ற தாது உப்பு குறைபாடு ஏற்படுவதால் பல நோய்களுக்கு ஆட்படுவதால் அதை சரிசெய்துக்கொள்ள ஓட்டகம் எலும்பைத்தின்னும் என்று கூறுகிறது.
கணைக்கால் அத்திரி:
(கோ ஏறும் கழுதை) “கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி
நெடுநீர் இருங்கழி பரிமெலிந்து அசைஇ, வல்வில் இளையரொடு எல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ’ (அகநானூறு 120)
இந்த விலங்கு வாழ்கின்ற இடம், குஜராத்திலுள்ள “கட்சி எனகிற பகுதி ஆகும். இதன் குறியீடுகள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ளன. இப்பாடல் சங்க இலக்கியப்பாடல் எனில் சங்ககாலத் தமிழக எல்லை என்பது திசைகளற்று பரவியிருந்தது உண்மையாகிறது.
களிறும் அரிமாவும்:
நர்மதை நதிக்கரையை கடந்து அரிமா எனும் சிங்கம் வந்ததே இல்லை என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். அப்படி இருக்கும்போது அரிமாவும் களிறும் சண்டையிட்டால் எது எப்பொழுது வெற்றிபெறும்? எதனால் வெற்றிபெறும்? அதன் உடற்கூறுகள் எப்படி இருக்கும் என்பதெல்லாம் எப்படி சங்க இலக்கியம் கூறமுடியும்? அப்படியெனில் சங்க காலம் என்பது உண்மை அது ஒரு பொற்குவியல் என்பது நமக்குப் புரியவருகிறது.

மூவேந்தர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான வரலாற்றுக்குறிப்புகள்:
வஞ்சி, உறையூர், கூடல் மதுரையைத் தலைநகராகக் கொண்டு, மூவேந்தர்கள் ஆண்டு வந்த சமயமது. தென்கலிங்கம் பாழியை வென்ற பிறகு, மௌரியர்களின் பார்வை தென்னகத்தின் மீது விழுகிறது. அதன் காலம், கி.மு. 293-280 வரையிலான காலமாகும். பலமுறை போரிட்டும் தோல்வியைச் சந்திக்கின்றார்கள். ஆனாலும் தொடர்ந்து போரிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இறுதியாக, இளஞ்சேட்சென்னியின் தலைமையில் (கல்வணையை கட்டிய கரிகால் சோழனின் தந்தை) மூவேந்தர்களின் படை மெளரியர்களை மிக விரைவில் தோற்கடித்து வெற்றிவாகை குடுகிறது. இதன் பிறகு, இவர்களோடு போரிடமுடியாது என்பதை உணர்ந்து மூவேந்தர்களுடன் நட்பு பாராட்டுகின்றனர், மௌரியர்கள். மௌரியாகளுக்கு அடிமையாக இருந்த கலிங்கம், பாழி போன்றவற்றைக் கைப்பற்றி அவர்களிடத்திலேயே ஒப்படைக்கின்றார்கள். மூவேந்தர்களும். “மூவேந்தர்களைப் போன்ற மன்னர்களை, இந்த உலகத்தில் வேறெங்கும் காணமுடியாது: கிரேக்க மன்னர்கள் கூட இவர்களுக்கு ஒப்பாக முடியாது’ என்று அசோகர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததில், மூவேந்தர்கள் ஆகச்சிறந்த ஒற்றுமையை கடைப்பிடித்தார்கள் என்றே கூறமுடியும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது பாண்டியர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பாண்டியர்களின் அவையில் சேர சோழர்களை, குறுதில மன்னர்களை, வேளிர்களை, கடையெழு வள்ளல்கள் எழுவரைப் பற்றியும் பாடமுடியும். அதுமட்டுமில்லாமல் பாண்டியர்களின் தோல்வியையும் கூடப் பாட முடியும் என்ற நிலையிருந்தது. “நாங்கள் தான் வைத்து நடத்துகின்றோம்: ஆதலால் நாங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற கொள்கையெல்லாம் கிடையாது. ஆதலால் தான், அனைத்து மன்னர்களின் வெற்றி தோல்வியென, அனைத்தையும் பாடமுடிந்த அறத்தைக் கொண்டு தமிழ் வளர்ந்தது.
தமிழகத்தில் பராந்தக சோழன் காலம் வரை, பொற்காலமாக இருந்தது என்பதற்கான வரலாறுகள் நம்மிடம் இருக்கின்றன. உத்திரமேருரிலுள்ள வெங்கடோ பெருமாள் ஆலயத்தில் இதற்கான சான்றுகள் கல்வெட்டுகளாக கிடைத்துள்ளது. கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக பணிபுரிய வேண்டுமென்றால் முதல் தகுதி கல்வி பயின்றவராக இருக்கவேண்டும்: அதற்கடுத்து குற்றமற்றவராக இருக்கவேண்டும்: அவர் மட்டுமல்ல, அவரைச் சார்ந்த குடும்பமும் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும் குடும்பமென்றால் அம்மா, அப்பா, அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் மட்டுமல்ல! பெரியப்பா, சித்தப்பா, சின்ன தாத்தா, பெரிய தாத்தா, இவர்கள் பெண்கொடுத்து, பெண்ணெடுத்த இடம் என அனைவரும் குற்றமற்றவர்களாக இருக்கவேண்டும் என்றால் அன்றைய காலத்தில் கல்வியறிவு பரவலாக இல்லாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு சட்டமியற்ற முடியுமா?
சங்ககாலம் பொற்காலம் என்பதைக் கூறும் சில பாடல்கள்:
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே! பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னனால் எழுதப்பட்ட பாடல் இது. கல்வியின் மேன்மை பற்றி கூறும் பாடலிதுவாகும். தன்னுடைய அரசு கல்விக்கும், கல்வி கற்றோருக்கும் எப்படி மதிப்பளிக்கும் என்றும், ஒரு தாயும் தன்னுடைய பிள்ளைகளில் கல்வி கற்ற பிள்ளைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதையும் இப்பாடலின் மூலம் அறியலாம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர் –
தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும்…
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
கணியன் பூங்குன்றனார் எழுதிய பாடலிது. “உலகமே என்னுடைய ஊர்தான் உலகத்திலுள்ளவர்கள் அனைவரும் எம்முறவுகள் தான்” என்று ஆரம்பிக்கும் இப்பாடலில், வயதில் மூத்தோர் என்பதற்காகவோ, கல்வியில் உயர்ந்தவர் என்பதற்காகவோ, பதவியில் உயர்ந்தவர் என்பதற்காகவோ, மன்னர் என்பதற்காகவோ, நான் போற்றிப் புகழ் வேண்டிய தேவையில்லை! அதேபோல் கல்வியற்றவர்கள் என்பதற்காகவோ, வயதில் இளையோர் என்பதற்காகவோ, பதவி இல்லை, பொருளில்லை என்பதற்காகவோ ஒருவரை இகழவேண்டிய தேவையுமில்லை என்று கூறுகின்றார். அறிவு பொதுவாக இல்லாத சமூகத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, இப்படிபட்ட ஒரு கருத்தைச் சொல்ல வாய்ப்பிருக்குமா?
“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்காகியா என வினவுதிர் ஆயின்
மாண்ட என மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையர் இளையரும் வேந்தலும்
அல்வவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோன் பலயான் வாழும் ஊரே”
நாம் மருத்துவரிடம் சென்று உறக்கம் வரவில்லையெனக் கூறினால், மருத்துவர் என்ன கூறுவார்? உறக்கம் சரியில்லையென்றால் உடல் தளர்வு, மனச்சோர்வு, முகப்பொலிவு குறைந்து, கண்களுக்குக் கீழ் கருமை தோன்றி முடி கொட்டுதல் என எல்லாச் சிக்கல்ளும் வரும். ஆகையால் உறக்கம் அவசியம் என்பார்.
நாம் சரியாக உறங்க வேண்டுமென்றால், நமது குடும்பச்சூழல், பணிச்சூழல் சரியாக இருக்கவேண்டும் சமூகமும் சரியாக இருக்கவேண்டும் ஏன் அரசும் சரியாக இருக்கவேண்டும்-இல்லையென்றால் ஏதோ ஒரு வகையில் உடல்நலத்தை நாமிழக்க நேரிடும். கோப்பெருஞ் சோழனை காணச்சென்ற பிசிராந்தையாரிடம் ஆண்டுகள் பலவாகியும் நரை உமக்கு இல்லையே என கேட்டபோது பாடிய பாடலிது.
“ஏன் நரைக்கவில்லை என்பதை கூறுகிறேன், கேளுங்கள்! எனக்கு அமைந்த மனைவியோ ஆகச்சிறந்தவர்: என் மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள்: நான் நினைப்பது போலவே, என் குறிப்பறிந்து பணிபுரியும் என் இளையோர்கள் (பணியாட்கள்) நான் வாழும் நாட்டை ஆளும் மன்னனோ, யாருக்கும் தீங்கிழைக்காத நல்லவன்: மக்களை அன்போடு காப்பவன்: கல்வி கேள்விகளில் நிறைந்தும், மனமொழி மெய்களால் சிறந்தும் உள்ள, உயர் கொள்கைக்காகவே உயிர் வாழும் அறிஞர் பெருமக்கள் வாழும் ஊர், எம்மூர்: இப்படி இருக்க எனக்கு எப்படி நரைவரும்?” என வினவுகிறார். அறிவு பொதுவாக இல்லாத சமூகத்தில் கற்பனையில்கூட இப்படிப்பட்ட கருத்துகள் தோன்றாது என்பதே உண்மை.
திருமதி. தமிழ்மொழி ஆயீஷா சுல்தான்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – பகரைன்.