டிசம்பர் 2022
குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்
ஒரு ஊரில் அழகான ஒரு நடுத்தரக் குடும்பம் சீரான அந்தக் குடும்பத்தில் பல வருடங்கள் கொஞ்சி விளையாடும் குழந்தைகள் இல்லாததால் மகள் வயிற்று பேத்தி பிறந்ததிலிருந்து பாட்டன் பாட்டி செல்லத்தில் வளர்ந்தார்கள். அதன்பின் பேரன பிறந்தான்: அவனும் அதேபோல செல்லமாக வளர்ந்தான்.
பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்டிக்கக்கூட முடியாது. அந்தளவிற்குச் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். பிள்ளைகளும் அடம்பிடித்து எதுவும் பெற்றோரிடம் தனக்கெனக் கேட்டதில்லை. அதேபோல் பெற்றோரும் எத்தக் குறையும் வைத்ததில்லை. காலங்கள் ஓடியது. மகளுக்கும் திருமணம் செய்து முடித்தார்கள். மகனும் பள்ளிப்படிப்பை முடித்தான்: கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தான்: படிப்பை முடித்து வேலைக்குச் சென்றான். முதல் மாத ஊதியம் கிடைத்தது பெற்றோரிடம் கொடுப்பான் என்று எதிர்பார்த்த தருணம், திடீரென வீட்டில் உள்ள குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் ஆடைகள் வாங்கித் தந்தான்.
எவ்வோருக்கும் கொஞ்சம் மனவருத்தம். இருந்தாலும் மகிழ்ச்சி. அதனால் பாட்டி, அவளிடம் வினவினார்கள் “முதலமாத ஊதியத்தை அம்மாவிடம் கொடுக்காமல் இப்படி செய்துள்ளாயே!” என்று அப்போது தான் சொல்லியிருக்கிறான். “நான் சிறுபிள்ளையாக விளையாடிக் கொலாடிருக்கும் பருவத்தில் நீங்கள் என்னிடம் கேட்டது நினைவிருக்கிறா?” என்று கேட்டான்.
யாருக்கும் எந்த ஞாபகங்களுமில்லை: குழந்தைகளிடம் எல்லோரும் கேட்பதுண்டு, “நீ பெரியவனாகும்போது என்ன படிக்க விரும்புகிறாய்? எங்களுக்கு என்னசெய்வாய்? என்று பொதுவாக அனைவரும் கேட்பது வழக்கம். அதை மனதில் வைத்துக் கொண்டு அவன் சொன்னதை அப்போது கூறினான். ‘நான் சம்பாதித்து முதல் ஊதியத்தில் அனைவருக்கும் உடைகள் வாங்கித் தருவதாக கூறினேன். அதனால்தான் இன்று இப்படி செய்தேன் என்றும் இதனால் என்னை என பெற்றோர்கள் கோபித்துக் கொள்ளமாட்டார்கள்” என்றான்.
சிறுவயதுக் குழந்தைகள் தானே என்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எந்த அளவிற்கு அவர்கள் மனதிற்குள் பதிந்து விடுகிறது என்று நாம் உணர வேண்டும். அதனால்தான் பெரியோர்கள் கூறுவார்கள், குழந்தைகளை அருகில வைத்துக்கொண்டு பெற்றோர்கள் சண்டையிடுவது, வன்முறையான வார்த்தைகளை உபயோகப்படுத்துவது. தீயசெயல்களைச் செய்வது கூடாது என்பார்கள். ஏனெனில் சிறுவயது பிள்ளைப்பருவத்தில் எளிதாக மனதில் பதியும் பக்குவமுண்டு. அதனால் குழந்தைகள் வளரும் பருவத்தில் அறம் சார்ந்த வழிமுறைகளையும், நல்லொழுக்கங்களையும், பாலங்களாக இருக்கும் உறவின் பலன்களையும் சொல்லி வளர்த்தால் வருங்காலங்களில் குழந்தைகள் வழிதவறிச் செல்லமாட்டார்கள்.
நேர்பாதையில் செல்ல உதவிடும் குடும்ப உறவுகளைப் பிரித்தாளும் எண்ணம் வராது. உதவிடும் எண்ணம் கூடும். தலைமுறை செழித்தோங்க வழிவகுக்கும். குழந்தைகளை ஆரோக்கியமாக உகுவாக்குவோம்! வளர்ப்போம்! அறிவாளிகளாக
நன்றி!
திரு. மு.ஷாஜஹான்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.