செப்டம்பர் 2022
சொன்னது விடியல் ஆட்சி! நடப்பது விடியாத ஆட்சி!
தற்போதைய தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது பெருத்த கூட்டத்தை தன் பின்னால் வைத்துக்கொண்டு மக்களுக்கு காட்டிய நாடகம் ஏராளம் ஏராளம். அப்படி காட்டிய நாடகத்தில் ஒன்றுதான் “விடியல் ஆட்சி நாடகம்.
கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் துணையோடு பல்வேறு திட்டங்களைத் தமிழ் மண்ணிலே திணித்தனர், அதாவது, மலைகளை அழித்து எட்டு வழி சாலை போடுகின்ற திட்டம், பரந்தூரில் ஒரு விமான நிலைய திட்டம், காவேரி படுகைகளில் எரிவாயு எடுக்கும் திட்டம், அரசே ஆற்று மணல் திருடும் திட்டம், போன்ற பல்வேறு திட்டங்களை கடுமையாக எதிர்த்து அறிக்கைகள் விட்டார், போராடினார் இன்றைய விடியல் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆனால் இப்பொழுது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிற திமுக, பரந்தூரில் விமான நிலையம் அமைத்தே தீருவோம் என்றும், எட்டு வழி சாலையை பயண நேரகுறைப்பு சாலை என பெயரை மாற்றி செயல்படுத்த மும்முரம் காட்டுகிறது.
மக்களை அச்சுறுத்தி சொந்த ஊரை விட்டு அகதிகளாக வேற ஊருக்கு நகர்த்துகிற வேலையை செய்கிறது இந்தத் திமுக அரசு. இவர் தான் அன்று சொன்னார், மக்களோடு தான் நான் என்றும் நிற்பேன், மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க விடமாட்டோம் என்றார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அன்று அவர் சொன்னதற்கு இன்று அவரே எதிராக செயல்படுகின்றர்.
அண்ணன் சீமான் அவர்கள் அப்பொழுதே தன்னுடை தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார், இவர்களை நம்பாதீர்கள். இவர்கள் திருடர்கள், உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று பேசினார். ஆனால் (விளம்பர) செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாந்துவிட்டார்கள். பெரும்பான்மையான ஊடகங்களுக்கு உண்மை தேவையில்லை. செய்திகள் தேவையில்லை. பணம் கொடுத்தால் எதையும் செய்தியாக மாற்றுவார்கள், அதுதான் அவர்களின் மிகப்பெரிய திறமை, இது பாமர மக்களுக்கு புரிவதில்லை. விடியல் தருவோம் என்று வீர வசனம் பேசிய அட்டகத்தி வீரர்களைக் கண்டு மக்கள் தங்கள் ஓட்டுக்களை திமுகவுக்கு போட்டு ஏமாந்துவிட்டனர்.
அட்டகத்தி வைத்திருப்பவன் பொழப்பு ஆடுகளத்தில் தானே தெரியும். அதுபோல திரு ஸ்டாலின் அவர்களின் நாடக நடிப்பு நடந்து கொண்டிருக்கும் ஆட்சியில் தெரிகிறது. விடியல் நாடகக் காட்சியும் கலைகிறது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தெரியவில்லை. தற்பெருமை அரசியல்வாதிகளாக தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு, மக்கள் விரும்பாத எட்டுவழிச்சாலை, விமான நிலையம் போன்றவற்றை மக்கள் மீது திணிக்க முற்படுவது, புதிய விமான நிலையம் வேண்டாம் என பதிமூன்று கிராம மக்கள் போராடுகிறார்கள், கதறுகிறார்கள்.
மக்களினுடைய இந்த நிலையை பற்றி செய்தியாளர்கள் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவர்களிடம் டெல்லியில் கேள்வி கேட்க அதற்கு, மக்கள் கத்தத்தான் செய்வார்கள். அதை நாம் பார்க்கக் கூடாது. நாம் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்கிறார். இவர்கள் மக்களுக்கானவர்களா முதலாளிகளுக்கானவரா? இப்படிப்பட்டவர்கனை அரசியல் கணத்தில் இருந்து களை எடுக்க வேண்டும். எ.வ.வேலு இவர் ஒரு அமைச்சர். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது எட்டு வழி சாலையை எதிர்த்து பேசவில்லை. என்று மிகப்பெரிய பொய்யை கூறுகிறார். அவரது கட்சித் தலைவர் என்ன சொன்னார் என்பது கூட தெரியாத அறிவாளிகளை அமைச்சராக நியமித்திருக்கிறார்கள்.
அதாவது முழு பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றிலை மறைக்க முயன்று அதில் தோற்றும் போனார் எ.வ.வேலு அவர்கள். அதாவது ஒரு ஊரிலே ஒரு முதியவர் விறகு வெட்டி, அதை கரியாக்கி அந்த விறகு கரியை விற்று, தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் மன்னர் அவர் ஊரின் வழியாக வேட்டைக்கு வந்தார். அப்போது முதியவரை கண்ட மன்னர், என்ன செய்கிறீர்கள்! என்று கேட்டார். முதியவர் தன் நிலையை கூறினார். தனக்கென்று யாரும் இல்லை, அதனால் விறகு வெட்டி. அதைச் சுட்டு, கரியாக்கி விற்பனை செய்து பிழைக்கிறேன் என்றார்.
முதியவரின் நிலையை கண்ட மன்னர், நீங்கள் இனிமேல் கடினமாக வேலை செய்ய வேண்டாம். உங்களது பெயரில் ஒரு ஏக்கர் சந்தன மரங்களை எழுதி வைக்கிறேன், அதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அந்த சந்தன மரங்களை அவரிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டார், மன்னர். ஆறு மாதங்கள் கழித்து அந்த வழியே மன்னர் வந்தார், அப்பொழுது முதியவர் மீண்டும் மரம் வெட்டிக் கொண்டிருப்பதை கண்டார். அருகிலே சென்ற மன்னர் இந்த வேலை செய்ய வேண்டாம் என்று தானே உங்களுக்கு சந்தன மரத்தோப்பை எழுதி வைத்தேன் என்றார் மன்னர்.
ஆமாம் மன்னா, உங்களது கருணையால் ஐந்து மாதங்கள் எனது பிழைப்பு நன்றாக இருந்தது. அலைச்சல் இல்லாமல் ஒரே இடத்தில் மரங்களை வெட்டி, நெருப்பிலிட்டு கரியாக்கி விற்று விட்டேன். இப்பொழுது அந்த மரங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன, அதான் வேற மரங்களை வெட்டுகிறேன் மன்னா என்று சொன்னார் முதியவர். சந்தான பாரத்தை முறையாக பயன்படுத்தி இருந்தால் உங்கள் வாழ்நாளின் இறுதிவரை ஆனந்தமாக வாழ்ந்திருக்கலாம் என்று சொல்லி வருத்தத்தோடு சென்றார் மன்னர். பாவம் முதியவர் பழைய பழக்கத்தை விட்டு வெளியேறத் தெரியவில்லை. புதியதை, நல்லதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.’ இந்த கதை போலத்தான் மகத்தான வெற்றியை திமுகவுக்கு மன்னராகிய மக்கள் கொடுத்தனர். ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக கம்பெனி பழைய பழக்கத்தை விட்டு வெளியேறத் தெறியவில்லை. புதியதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. இவர்கள் மக்களுக்கானவர்கள் அல்ல, மார்வாடிகளால் இயக்கப்படும் மறைமுக அரசியல்வாதிகள். இவர்கள் விடியல் ஆட்சி தருபவர்கள் அல்ல, தமிழகத்தை விடியாமலே பார்த்துக் கொள்ளும் கொள்ளக்காரர்கள்.
மக்களே விழித்துக் கொள்ளுங்கள்! அறிவுள்ள தமிழ் மக்களாக இணைந்து நில்லுங்கள்.
நன்றி!
வள்ளலார் மாணவன் திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.