தமிழகத் தொல்லியல் துறைத் தேர்வில் சமசுகிருதம் அறிந்திருத்தல் கட்டாயம் என்ற அறிவிக்கை
தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் பணிபுரிய சமசுகிருதம் மொழி அறிந்திருத்தல் கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது தமிழ்நாடு தொல்லியல்துறை. இந்த மாதிரியான அறிக்கைகளை வெளியிட்டு தொல்லியல் துறையில் ஆர்வம் உள்ள தமிழர்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது திராவிட அரசு.
வேலியே பயிரை மேய்ந்த கதை போல தமிழர்களால் அதிகாரத்திற்கு வந்த திராவிட கூட்டம் தமிழையும், தமிழர் வரலாற்றையும், தமிழர்களையும், புறக்கணிக்கின்றது.
தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளும் மரபு:
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மருத்துவராக வேண்டுமென்றால் சமசுகிருதம் தெரிந்திருக்க வேண்டும்; வழக்கறிஞராக, ஆசிரியராக வேண்டுமென்றால் சமசுகிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இதைவிட மிக அபத்தமான ஒன்று தமிழ் மொழி மீது பற்று கொண்ட ஒருவர் தமிழ் மொழி அறிஞராக வேண்டும் என்றாலோ, தமிழ் மொழி ஆசிரியராக வேண்டுமென்றாலோ அவரும் சமசுகிருதம் படித்திருக்க வேண்டும். சமசுகிருதம் தெரியவில்லை என்றால் அவர் தமிழ் ஆசிரியராக என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது கடந்த கால வரலாறு.
அதன் தொடர்ச்சி தான் தொல்லியல் துறையில் வந்த இந்த அறிவிப்பு. எல்லாத் துறைகளிலும் சமசுகிருதம் கட்டாயம் என்ற பழக்கம் மாறிவிட்டது. ஆனால், தொல்லியல் துறையில் இன்னும் தொடர்கிறது என்பது வேதனைக்குரியது. திராவிட ஆட்சியாளர்கள், தமிழ் மொழியை விட சமசுகிருதம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் தான் இந்த நிலை இன்னும் தொடர்கிறது.
கிட்டத்தட்ட 700 – 800 ஆண்டுகளுக்கு முன்னால் பறிபோன தமிழர்களது அதிகாரம், இன்று வரை தமிழ் நிலத்தை ஆள, ஆளுமை கொண்ட தமிழன் ஆட்சி அதிகாரத்திற்கு வரவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது; தெளிவாக உணர்த்துகிறது.
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்:
இந்திய ஒன்றியத்தில் கண்டெடுக்கப்படுகின்ற கல்வெட்டுக்கள் அனைத்தையும் தொல்லியல் துறை முறையாக ஆராய்ச்சி செய்ய முன்வருவதில்லை. மாறாக சமசுகிருத கல்வெட்டுகளை மட்டுமே ஆராய்ச்சி செய்கிறார்கள். உண்மையில் இந்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும், ஏன் அனைத்து மாநிலங்களில் உள்ள தொல்லியல் துறையும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது தமிழ் கல்வெட்டுகளை தான். காரணம் இந்தியாவின் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம். இந்திய ஒன்றியத் தொல்லியல் ஆய்வகம் கண்டெடுத்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுக்கள் தமிழ் மொழி கல்வெட்டுகளாகும். ஒரு இலட்சம் கல்வெட்டுகளில், 5% கல்வெட்டுக்கள் மட்டுமே தெலுங்கு, கன்னடம், சமசுகிருதம், மராத்தி மொழி கல்வெட்டுகளாகும் .
இந்தியாவில் அறியப்பட்ட முதல் எழுத்துமுறைகள் பிராமி மற்றும் தமிழ் பிராமி:
வெண்கலக் காலத்திய சிந்து வெளி எழுத்துக்களுக்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முதலாக அறிமுகமான எழுத்துமுறைகளில், கிமு 250-களில் அசோகரின் கல்வெட்டுக்களில் எழுதப்பட்ட பிராமி எழுத்துமுறை ஆகும். அசோகர் காலத்திற்கு முந்தைய, கிமு 5-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள், தமிழ்நாட்டின் பழனி ஈரோடு, கொடுமணல், ஆதிச்சநல்லூர், மற்றும் இலங்கையின் அனுராதபுரம் போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசோக காலத்துக்கு முந்தைய தமிழ் கல்வெட்டுக்களையும் பிராமிய எழுத்துக்கள் என்று அழைத்துக் கொண்டு இருந்தார்கள். தமிழ்த் தேசிய எழுச்சிக்கு பிறகு தமிழ் பிராமி எழுத்துக்கள் என அழைக்கிறார்கள்.
காலத்தின் கட்டாயத்தால் தமிழ் மொழிக்கு ஆதரவாக எத்தனையோ ஆதாரங்கள் அடுக்கடுக்காக வந்தபோதிலும், தமிழ்நாட்டில் இருக்கும் திராவிடர்கள் என்ற பிற மொழியாளர்கள் தமிழை தொல் திராவிட மொழி என்றும் தமிழ் நாகரிகத்தினை திராவிட நாகரிகம் என்றும் இன்றளவும் தமிழையும், தமிழர்களையும், தமிழர் நாகரிகத்தையும் திசை திருப்பும் அடையாள மறைப்பு வேலையை செய்கிறார்கள்.எழுத்துமுறை தொழில்நுட்பம் தற்போது வளர்ச்சியடைந்துள்ளதால், மொழியறிவு இல்லாமலேயே பல தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். என்றாலும் கூட இன்றும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சீமானின் வருகையும் தமிழ் தேசிய எழுச்சியும்:
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளையும் தேசிய கட்சிகளையும் சார்ந்து இருந்த மக்களை, இந்த இரு கட்சிகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் நாட்டிற்கும் எந்தவித நன்மையும் இல்லை என்பதனை கொஞ்சம் கொஞ்சமாக தனது உணர்ச்சிமிக்க விழிப்புணர்வு ஊட்டக்கூடிய பேச்சால் மக்களை தயார்படுத்தியதன் விளைவு, தொல்லியல் துறையில் சமசுகிருதம் கட்டாயம் என்ற அறிக்கையை கண்டவுடன், இப்படிப்பட்ட விடயங்களில் தமிழ்நாடு இதுவரை காணாத அளவிற்கு பெரும் எதிர்ப் புகள் தெரிவிக்கப்பட்டன. அது தமிழக முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இளைஞர் கூட்டம் தமிழ் தேசிய அரசியலை உள்வாங்கி உணர்ந்து செயல்படுத்த துவங்கி விட்டார்கள். சீமான் என்னும் பெரும் நெருப்பு, திராவிடம் என்னும் பஞ்சு மூட்டையை கருக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் திராவிடம் காணாமல் போகும். தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் புதிய காலம் மிக விரைவில்…
திரு. க. நாகநாதன்,
naganathanji@gmail.com
செந்தமிழர் பாசறை – ஓமன்.