spot_img

தமிழோவியம்

தமிழோவியம்

ஏமப்பூசல்

“தலைநாள் பூத்த பொன்னிணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப்பூசல்” (வரி-305,306 , மலைபடுகடாம்).

இளவேனில் காலத்தின் முதல் நாளி்ல் பூத்த பொன்போன்ற கொத்தினையுடைய வேங்கைப்பூவைச் சூடுதற்பொருட்டு  உயர்ந்த பரணிலிருந்து தட்டைக்கருவியிசைத்தும் கவன்வீசியும் கிளிகளை விரட்டும், தினைப்புனம் காக்கும் குற மகளிர் புலி புலி என்று கூவி ஆரவாரம்’ செய்வர் இதுவே “ஏமப்பூசல்” (ஏமம்=காவல்; பூசல்=பேரொலி/கூச்சல்) (காவல் வேண்டி எழுப்பும் பேரொலி).

காளை ஒருவன் ஆரவாரத்தைக் கேட்டு ஓடி வந்து வேங்கைப்பூக்களை தலைவியும் தோழிகளும் பெறும்படி கிளையை வளைத்து உதவுவான்.அங்ஙனம் தலைவியும் தலைவனும் காதல் வயப்படுவர்.

“ஏமாற்று” என்ற சொல்லிற்கு வேர்சொல் “ஏமம்” என்று அறிகிறோம்.

திரு. மறைமலை வேலனார்,

செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles