சூலை 2022
தமிழ் மொழி அழிப்பில் திராவிடத்தின் சதி
தமிழ் வாழ்க! என்று அரசு தமிழ் அலுவலகங்களில் பதாகை மற்றும் மின்விளக்கு அலங்காரம் வைத்து பெருமைப்படுத்தியதாக கூறும் திராவிடக் கட்சிகள். ஆம், அது உண்மை தான். ஆனால் உங்களது 60 ஆண்டுகால ஆட்சியில் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடத்திட்டத்தை அனுமதித்து ஏன்?
தமிழ் மொழியின் பழமையும், தொன்மையும், வரலாறும் தெரியாமலா நீங்கள் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை அனுமதித்தீர்கள்.
உங்களது இந்த அறிவிலித்தனமான அணுகுமுறையால் தான் இன்று தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு ஆங்கில வழிக்கல்வி என்பது தான் அறிவு என்ற மனநிலைக்கு தள்ளியது. அத்தோடு திராவிட ஆட்சியாளர்கள் நேரடியாகவும், தங்களது பினாமிகள் மூலமாக மறைமுகமாகவும், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து, கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதற்கு ஆங்கில வழிக்கல்வியை வியாபாரம் ஆக்கி, அதன் மூலம் கோடிக்கணக்கில் மக்களிடம் பணத்தை பிடுங்கி, தங்களது சொத்துக்களாக குவித்தார்கள்.
தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா? சோறு கிடைக்குமா? στές της கீழ்த்தரமான பரப்புரைகளை தங்களது ஆங்கில வழிக்கல்வி மூலம் மக்களிடையே பரப்பி தமிழில் படித்தால் வெகுமானம் இல்லை என்ற நிலையை 5 உருவாக்கியது திராவிட ஆட்சியில் தான்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் ஒப்பீடு:
மொத்த அரசுப் பள்ளிகள் 37.579
அதில்,
தொடக்கப்பள்ளி 24,310
நடுநிலைப்பள்ளி 5788
உயர் நிலைப்பள்ளி 7,024
மேல்நிலைப்பள்ளி 3.110
அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மொத்த எண்ணிக்கை = 8,328
தனியார் பள்ளிகள் எண்ணிக்கை 12.382
அதில்,
தொடக்கப் பள்ளி 5.089
நடுநிலைப் பள்ளி 763
உயர்நிலைப் பள்ளி 2,046
மேல்நிலைப் பள்ளி 3,763
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தகர்ப்பு:
1) அரசின் ஆரம்பப்பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளி வரை அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் விட்டது.
2) ஒரு தனியார் பள்ளி உள்கட்டமைப்பில் 50% செய்யாமல் விட்டது ஏன்? நிர்வாகம் செய்யும் அரசுப்பள்ளியில்
3) தனியார் பள்ளிகள் எண்ணிக்கை 12,382, அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 2.53 இலட்சம்.
அரசினர் மேல்நிலைப் பள்ளி
SOVERNMENT HIGHER SEC SECONDARY SCHOOL
4) அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையோ 37,579, இது தனியார் பள்ளிகளோடு ஒப்பீட்டு அளவில் 3 மடங்கு அதிகம். ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 2.27 இலட்சம் மட்டுமே.
5) ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தபோதெல்லாம் அதைப்பற்றி திராவிட கட்சிகள் சிறிதும் அக்கறை காட்டாமல் விட்டது ஏன்? தமிழக பள்ளிக்கல்வித்துறை काटा 119 18/07/2019 வரை மூடப்பட்ட அரசுப்பள்ளிகள் 1,248 ஆகும்.
6) சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இன்றும் 2,500க்கு மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை இல்லை. கழிவறை உள்ள பல்வேறு பள்ளிகளில் பராமரிப்பு இன்றி இருக்கிறது.
7) திராவிட ஆட்சியில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்பட்டு கொண்டே வருகிறது. ஆனால் அதே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தாமல் விட்டது,
8) அரசின் வருவாயில் மாதச்சம்பளம் வாங்கும் தலைமை செயலகம் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள், ஊரக உள்ளாட்சி அரசு அலுவலகங்கள் வரை பணியாற்றும் உயர் அதிகாரிகள் தொடங்கி, தொடக்கநிலை அரசு அலுவலர்கள் வரை தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தாமல் விட்டது.
9) தமிழ் பாடத்தில் படிப்பவர்களுக்கே தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் 70% இட ஒதுக்கீடு என்று அரசாணை பிறப்பிக்காமல் விட்டது.
10) இறுதியாக தமிழ் வழிக் கல்வியை அழிக்க திராவிட ஆட்சியாளர்கள் ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் நடத்திவருவது.
தலைநகர் சென்னையில் தமிழ் வழியில் 16% மாணவர்களும், ஆங்கில வழியில் 84% மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்த தகவலை தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிக்கொண்டு வந்த டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தமிழ்நாசர் ஆவார்.
நமது வழிபாட்டில் தமிழ் அழிப்பு:
சங்க காலம் முதல், இராஜராஜ சோழன் காலம் வரை தமிழர்களின் பண்பாடாக இருந்து வந்த தமிழில் வழிபாடு என்பதை, நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் வந்த ஆரிய கூட்டம் மாற்றி, தெய்வத்தின் மொழி என்று சமற்கிருதத்தை புகுத்தியது. அதன் பிறகு அந்திய காலனியாதிக்க நாட்டினரிடம் அடிமைப்பட்டு கிடந்த குமரி முதல் இமயம் வரையான இந்திய ஒன்றியத்தில் ஆங்கிலேயே ஏகாதிபத்திய அரசின் கைத்தடியாக இருந்த ஆரியத்தினர் தங்களது மொழியை எல்லா வழிபாட்டு தலங்களில் பெருக்கி கொண்டனர். அதன் பிறகு சுதந்திரம் பெற்ற பிறகு மாநில அரசுகன் கட்டுப்பாட்டில் வந்த இந்து சமய அறநிலையத்துறை என்ற துறை மூலம் தமிழகத்தில் உள்ள கோவில்களின் வருமானத்தை அரசுக்கு என்று எடுத்துக்கொண்ட திராவிட ஆட்சியாளர்கள் அந்த வழிபாட்டு தலங்களில் தமிழில் தான் குடமுழுக்கு, பக்தி பாடல்கள் பாடப்படவேண்டும் என்று நிலைமை 2021 ஆம் ஆண்டு வரை ஏற்படுத்தாமல் ஆரியத்தின் அடிவருடிகளாக இருந்து சமற்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுவதை அனுமதித்து தமிழை புறக்கணிப்பு செய்து வந்துள்ளார்கள்.
தஞ்சை பெரிய கோவில் மீட்புக்குழுவின் தலைவர் ஐயா பெ.மணியரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முண்ணனி சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு விசாரணையில் பல்வேறு குறுக்கீடுகள் இருந்தபோதும் தளராமல் வீரியத்துடன் அதை முன்னெடுத்து, வாதாடி, இறுதியில் நீதிமன்றத்தின் வாயிலாக தமிழிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்ததோடு தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கையும் நடத்தி காட்டினார்கள்.
அதன் பிறகு தற்போது 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தஞ்சை பெரிய கோயில் மீட்பு குழுவின் தமிழில் குடமுழுக்கு என்ற வெற்றியை மடைமாற்ற நயவஞ் சகமாக தமிழுக்கு நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்று எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்த 60 ஆண்டுகாலத்தில் செய்யாத தமிழ் ஓதுவார்கள் என்ற அரசாணையை 2022 ல் பிறப்பித்து அதிலும் தமிழர் அல்லாத பிற மொழியாளர்களை நியமித்து மறைமுகமாக தங்களது தமிழின விரோதத்தை காட்டியுள்ளார்கள்.
வாகனங்களில், வணிக நிறுவனங்களில் தமிழ் புறக்கணிப்பு:
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் மாநில போக்குவரத்து துறையிலும், வணிக நிறுவனங்களின் பெயர் பலகையிலும், அந்த அந்த மாநில மொழிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு அதை இன்றளவும் செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு தமிழில் வைக்கவேண்டும் என்று வெறுமனே அரசாணையை மட்டுமே பிறப்பித்துள்ளது. ஆனால் அதை தீவிரமாக செயல்படுத்தாமல் அரசுப்பேருந்துகளிலில் தொடங்கி தனிநபர் வாகனங்களில், வணிக நிறுவனங்களில் தமிழில் பதிக்குமாறு செய்யவில்லை.
தமிழ்ச் செம்மொழி நாடகமும், ஊழலும்;
2009ல் “பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்டபோது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா” என்று மலேசியா பினாக்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி கடுமையாக விமர்சித்தார். ஈழத் தமிழர்கள் பெரும் இன அழிவைச் சந்தித்து, வதைமுகாம்களில் உறவினர்களை இழந்து, பலர் உடல் உறுப்புக்களை இழந்து, பல்வேறு அரச பயங்கரவாத கொடுமைகளை சந்தித்து இருக்க, உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் 4 செம்பொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா படைப்பாளிகள் சங்கம் கேள்வி எழுப்பியது. இப்படி பல தமிழறிஞர்கள் தங்கள் எதிர்க்கருத்தை வைத்தபோதும், அவற்றை கண்டு கொள்ளாமல், தன் அடிமைகள் சிவரால் தனக்கு வழங்கப்பட்ட முத்தமிழறிஞர் என்ற பட்டத்தை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரையிலான 5 நாட்கள் கோயம்புத்தூரில் பல கோடிகள் செலவு செய்து நடத்தினார்.
அந்தச் செம்மொழி மாநாடு விழா ஏற்பாட்டிலும், மாபெரும் ஊழல் நடைபெற்றது. அதாவது அப்போதைய தமிழக முதலமைச்சர் ஐயா கருணாநிதி செம்மொழி மாநாட்டிற்கான செலவு ரூ.350 கோடி என்று அறிவித்தார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இது குறித்து கேட்டபோது, பொது கணக்குப்பதிவு அலுவலகம் (Accountant General office) கொடுத்துள்ள தகவல் ரூ. 151.22 கோடி மட்டுமே. இதை இங்கு பதிவிடுவதின் நோக்கம் தமிழை வனர்க்கிறோம் என்ற பெயரில் திராவிட ஆட்சியாளர்கள் அதில் ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர தமிழை வளர்க்கவில்லை என்பதை பறைசாற்றவே.
இப்படி கடந்த காலத்தில் திராவிடம் என்று பேசியும், நிகழ்காலத்திலும் பேசிக்கொண்டு இருக்கும் திராவிட கட்சிகள் மேடைகளிலும், அரங்கங்களிலும் தமிழை வளர்ப்பதாக பெருமிதம் பேசுகிறார்களே தவிர உண்மையான கள நிலவரம் இவர்கள் தமிழை வளர்க்கவில்லை. அதற்கு மாறாக அழித்தே வந்துள்ளார்கள் என்பதற்குச் சான்று, தமிழக மக்களின் மனதில் ஆங்கில வழிக்கல்வியே அறிவு மற்றும் உயர்ந்தது என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளை நாடி வந்த சூழலில் இன்று ஆங்காங்கே தமிழக அரசுப்பள்ளிகளிலுமே ஆங்கில வழிக்கல்வியை திணித்துள்ளதே ஆதாரமாக காணலாம்.
இன்றைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியான தமிழில் பேசினால் போதும் அதை எழுதவோ, படிக்கவோ கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை பொதுத்தளங்களில் பேசிவருவதை நாம் அறிவோம்.
இத்தகைய இழிநிலைக்கு இன்றைய தலைமுறையினரை கொண்டு வந்து நிறுத்தியதும் திராவிட கட்சியினரே…
இன்றைய திராவிட கட்சிகளின் கூட்டம் அல்லது மாநாடு என்றால் அதில் கலந்து கொள்ள ஒருவருக்கு தலா ரூ.200, ரூ.300 என்ற அடிப்படையில் கொடுத்தே கூட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள். இப்படி பணம் கொடுத்து கூட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன? அவ்வளவு பெருந்தொகை அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? என்ற அடிப்படை கேள்வி கூட மக்களுக்கு எழாத வகையில் அவர்களையும் தங்களது ஊழலுக்கு பலியாக்கி வழிநடத்தி வந்துள்ளார்கள் இந்த திராவிட ஆட்சியாளர்கள். ஏனெனில் இப்படி கோடிகளில் செலவு செய்து கூட்டம் நடத்துவதற்கு பதிலாக அந்த பணத்தை அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாம்.
தமிழ்நாட்டில் கல்விக்கூடங்களை தொடங்கிய முன்னாள் முதலமைச்சரான மாண்புமிகு, ஐயா. காமராசர் அவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகும் நிறைய பேர் படிக்க வருவதில்லையே ஏன்? என்று விசாரிக்க தொடங்கியபோது பலர் பசியில் இருக்கிறார்கள். அதனால் படிக்க வராமல் கூலி வேலைக்கு சென்று விடுகிறார்கள் என்று தெரிந்ததும், மதிய உணவு திட்டத்தை தொடங்கினார். அப்போது அவரது அமைச்சரையில் இருந்தவர்கள் நிதி பற்றாக்குறை வரும் எப்படி இதை செயல்படுத்துவீர்கள்? என்று ஏளனம் செய்தபோது மக்களிடம் பிச்சை எடுத்தாவது இதை செயல்படுத்துவேன் என்றாராம். மேலும் அவரது அமைச்சரவையில் இருந்த சிலர் நாம் அரசின் செயல்பாடுகளை செய்தித்தாள்களில் விளம்பரப் படுத்தலாம் என்று கூறினார்களாம். அதற்கு ஐயா காமராசர் ஏன்? என்று கேட்டதற்கு மக்களுக்கு அரசின் செயல்பாடுகளை தெரியப்படுத்த தான் என்றார்களாம். ஆனால் அதற்கு ஐயா, காமராசர், நாம் செய்வது மக்களுக்கான திட்டங்கள் தான். அது மக்களை சென்றடையும் போது அவர்களுக்கே தெரியுமே. நாம் ஏன் அதற்கு அரசுப்பணத்தை வீணாக செலவு செய்து விளம்பரம் செய்யவேண்டும் என்றாராம். இப்படி ஒரு நேர்மையான முதலமைச்சரை திராவிட கட்சிகள் உருவாக்க தவறியது ஏன்?
தமிழர்களை ஏமாற்றி தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள, பிற மொழியாளர்கள் தங்களது கட்டமைப்பை வலுப்படுத்த, தம் இனத்தவர்களை தலைவர்களாக கொண்டு அரசியல் கட்சிகளிலும், சமூக இயக்கங்கள் என்ற பெயரில் அந்த இயக்கங்களின் செயல்பாட்டாளர்களாக தமிழர் அல்லாதவர்களையே நியமித்து செயல்படுவதும், இந்த சூழ்ச்சிகளை புரிந்த சிலர் தங்களது சுய முன்னேற்றத்திற்காகவும், அந்த சில சுயநலவாதிகளின் உள்நோக்கம் தெரியாமல் பலரும் திராவிட கட்சிகளை/ இயக்கங்களை ஆதரிப்பதின் மூலம் தங்கள் தாய்மொழியான தமிழ் வழிக்கல்வியில் இருந்து தங்களது சந்ததியினரை வெளியேற்றிவிட்டார்கள்.
இறுதியாக சமகாலத்தில் தமிழை அழித்தது மட்டுமல்ல இன்றும் அழித்துக்கொண்டு இருப்பது யார்? என்பதை நம்மை ஆட்சி செய்துவந்த அரசியலை ஆராய்ந்து பார்த்தால் 100% திராவிட கட்சிகளே என்ற உண்மையை நாம் அறியலாம்.
தமிழில் படிப்பது அவமானம் அல்ல. தமிழே நமது அடையாளம், தமிழே நமது வெகுமானம், தமிழே நமது அறிவு,
திரு. சின்னத்துரை,
செந்தமிழர் பாசறை – கத்தார்.