தமிழ் மொழியின் சிறப்பும் மகத்துவமும்
உலகில் இப்போது வரை பல்லாயிரக்கணக்கான மொழிகள் தோன்றி மறைந்துவிட்டன. ஆனால் தமிழ் மொழி மட்டுமே இன்று வரை உலகின் மூத்த மொழியாக திகழ்கிறது
முத்தமிழ்:
1.இயற்றமிழ்(இயல்)
2.இசைத்தமிழ்(இசை)
3.நாடகத்தமிழ்(நாடகம்)
தமிழின் சிறப்புப் பெயர்கள்:
செந்தமிழ் -பைந்தமிழ் – அந்தமிழ் – வண்டமிழ் – தண்டமிழ் ஒண்டமிழ் – தென்றமிழ் – இன்றமிழ் – மன்றமிழ் – நற்றமிழ் – பொற்றமிழ் – முத்தமிழ் – தேந்தமிழ் – தீந்தமிழ் – பூந்தமிழ் – பழந்தமிழ் – இளந்தமிழ் – பசுந்தமிழ் – அருந்தமிழ் – இருந்தமிழ் -நறுந்தமிழ் – மாத்தமிழ் – சீர்த்தமிழ் – தாய்த்தமிழ் – ஒளிர்த்தமிழ் – குளித்தமிழ் – உயத்தமிழ் – வளர்த்தமிழ் – மரத்தமிழ் – அறத்தமிழ் – திருத்தமிழ் – எழிற்றமிழ் – தனித்தமிழ் – கனித்தமிழ் – பொங்குதமிழ் – கொஞ்சுதமிழ் – விஞ்சுதமிழ் – விளங்குதமிழ் – பழகுதமிழ் – அழகுதமிழ் – தூயதமிழ் – ஆயதமிழ் – கன்னற்றமிழ் – வண்ணத்தமிழ் – இன்பத்தமிழ் – செல்வத்தமிழ் – வெல்கதமிழ் – கன்னித்தமிழ் – முத்தமிழ் – அன்னைத்தமிழ் – தெய்வத்தமிழ் – அருமந்தமிழ் – அமிழ்தினுமினிய தமிழ்
இசைத்தமிழ்:
இசை மனித இனம் சாதி மதம் கடந்து ரசிக்கப்படுகிறது. உலகத்திலேயே இசையால் வளர்ந்த மொழிகளுள் தமிழ் மொழி முதல் மொழியாகும்.
சிவனும் தமிழும் நடமாடும் போது எம் முன்னோர் குகைகுள் இருந்தார்கள் என ஒரு ஆங்கில அறிஞர் சொல்வதில் இருந்து, தமிழின் தொன்மையை அறியலாம். அதாவது நாகரிகம் அடையாத மக்களாய் அவர்தம் முன்னோர் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் நாகரீகத்தோடு வாழ்ந்தார்கள் என்பதே இதற்குப் பொருளாகும்.
நம் முன்னோர் பொருளறிந்து இசையறிந்து இசைத்தமிழை வளர்த்தார்கள். அக்காலத்தில் தான் தமிழோடு இசையும் வளர்ந்தது. உலகத்திலேயே நிறைய இசைக்கருவிகள் மீட்டிப் பாடிய பெருங்குடி நம் தமிழ் குடியாகத்தான் இருந்திருக்கிறது.
உலகின் முதன்முதலில் முத்தமிழ் இலக்கண நூல் தோன்றியதும் எம் தமிழ் இனத்தில் தான். அகத்தியர் படைத்த அகத்தியம் வழி நூலேயன்றி மூல நூலல்ல. முந்து நூல்கள் அதற்கும் முந்தியவை. அவ்வோலைச்சுவடிகள் தமிழையும் இசையையும் ஆய்ந்து அறிந்து நம் முன்னோரால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவை பத்தாயிரம் ஆண்டு காலத்துக்குரியவையாக இருந்திருக்கலாம்.
கருவி :
கல்>கரு>கருவி
தோற்கருவிகள்
அடக்கம் , அந்தரி , அமுதகுண்டலி , அரிப்பறை , ஆகுளி , ஆமந்திரிகை , ஆவஞ்சி , உடல் , உடுக்கை , உறுமி , எல்லரி , ஏறங்கோள் , ஒருவாய்க்கோதை , கஞ்சிரா , கண்விடு தூம்பு , கணப்பறை , கண்டிகை , கரண்டிகை , கல்லல் , கல்லலகு , கல்லவடத்திரள் , கிணை , கிரிக்கட்டி , குட முழா , குண்டலம் , கும்மடி , கைத்திரி , கொட்டு ,கோட்பறை , சகடை , சந்திரபிறை-சூரியபிறை , சந்திவளையம் , சல்லரி , சல்லிகை , சிறுபறை , சுத்தமத்தளம் , செண்டா , டமாரம் , தக்கை , தகுணித்தம் , தட்டை , தடாரி , தண்டோல் , தண்ணுமை , தபலா , தமருகம் , தமுக்கு , தவண்டை , தவில் , தாசரி , தப்பட்டை , திமில , துடி , துடுமை , துத்திரி , துந்துபி , தூரியம் , தொண்டகச்சிறுபறை , தோல்க் , நகரி , நிசாளம் , படவம் , படலிகை , பம்பை , பதலை , பறை , பாகம் , பூமாடு , பெரும்பறை , பெல்ஜியக் கண்ணாடிமத்தளம் , பேரி , மகுளி , மத்தளம் , மதங்கம்முரசு , முருடு , மேளம் , மொத்தை , விரலேறு , ஜமலிகா என்பன தோற்கருவிகளாகும்.
நரம்புக்கருவிகள்:
யாழ் , வீணை
ஊது கருவிகள்:
இசைக்குழல் ( நாகசுரம் ) , புல்லாங்குழல் , மகுடி
தமிழும் எழுத்துக்களும்:
தமிழ் எழுத்துக்களில் உள்ள நுட்பம் மேன்மையும் வளமையும் இலக்கணம் உலகின் எந்த ஒரு மொழிக்கும் இல்லை.
தமிழில் மொத்தம் எழுத்துக்கள் –247
உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயிர் மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1
உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும் வல்லமை கொண்டது. மெய் எழுத்துக்கள் என்பது மனதையும் உடலையும் அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் மாபெரும் சக்தியாக அமைந்துள்ளது. உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து உயரிய சிந்தனை மனதில் உருவாகி இறைவனை அறிய கூடிய ஓர் அற்புதமான செயலை காட்டும்.
ஓம் என்ற மந்திரத்தில் ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க. நாம் பேசும் செந்தமிழ் நற்றமிழ் தேன்தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது.
அதிலும் குறிப்பாக அகத்தியர் தமிழ் மொழிக்கே உரிய நேர்த்தியான இலக்கணம் வகுத்து வெளியிட்டார்.
தமிழ் மெய் எழுத்தும் சுவாச மண்டலமும்:
மானிடர் ஒரு நாள் முழுதும் சுவாசிக்கும் காற்றில் மூன்றில் ஒரு பகுதி உடலின் மூலாதாரத்தை அடையாமல் வீணடிக்கப்படுகிறது. அந்த வீணடிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி சுவாசத்தையும், வீணாக்காமல் சுவாசிப்பதே சுவாச இணைப்பு எனப்படும் யோகக் கலையாகும்.
மானிடருக்கு ஒரு நாளில் 21,600 சுவாசம் உண்டாவதாகவும் அதில் 14,400 சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில் ஒடுங்குகிறது என்றும் மற்ற 7,200 சுவாசம் வெளியே போய் பாழாவதாகவும், இந்த 7200 சுவாசம் வீணாகாமல் சுவாச பந்தனம் செய்வதன் மூலம் சுவசிப்பவருக்கு எக்காலமும் பிணி, மூப்பு , சாவு வராமல் என்றும் பாலனாய் வாழலாம் என சுவாசம் குறித்து கூறுகிறார் யூகிமுனி.
தமிழ் உயிர்மெய் எழுத்தும் உயிரோட்டமும்:
உயிர் மெய் எழுத்துகள் 216
சுவாசம் 21600, ஒர் உயிர்மெய் எழுத்தினுடைய சுவாசம் 100 மூச்சு பலனை தரகூடியது. ஆக 216×100=21600. நீங்கள் உயிர்மெய் எழுத்துகளை சொல்லும்போது 100 மூச்சு வீணாவது தடுக்கபடும். தமிழானது பேசுவதற்கு மட்டும் உருவாக்கபடவில்லை தமிழன் நீண்ட நாள் வாழ்வதற்கும் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று உருவாக்கபட்டது. தமிழுக்கும் அமுது என்று பேர் இப்பாடல் முழுவதையும் ஆராய்க. அதாவது நமது தலையில் அமிர்தத்தை தருவதற்கு ஒரு எழுத்து உள்ளது அது “”ழ்”” இதை தொடர்ந்து சொன்னால் அமிர்தம் சுரக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் தமிழ் எழுத்தை வைத்து ஐம்பெரும் ஆற்றலையும் (நிலம் நீர் காற்று தீ வான்) இயக்க முடியும். மெய் என்ற இறை மற்றும் உடம்பை அடைய, மெய் எழுத்தை ஆராய்ந்தால் இறைவனை அடைய அதில் ஒரு எழுத்து ழ் இருப்பதை அறியலாம். அதை முருக பெருமான் ஏன் கொடுத்தார் ழ…..ழ் ழு….. ழை போன்ற எழுத்து வடிவம் பயன்பாடு உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்
தமிழ் எழுத்தில் கவனம் அதிகம் கொடுக்காத எழுத்து ஒன்று உள்ளது. அதை தமிழரின் படைகருவிகளில் உபயோகபடுத்தியுள்ளனர்
அது ஆதியில் இ என்ற எழுத்துக்கு கொடுக்கபட்டது. அது என்ன என கருத்தில் கொண்டு ஆராய்க. குறிப்பிட்ட தமிழ் எழுத்துகள் கொண்டு சத்தம் எழுப்பி மனிதரின் மூளையை செயல் இழக்க செய்தனர். அது என்ன, என்ன எழுத்து என ஆராயவும்.
தமிழில் ஒரே ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ந்து சொன்னால் உயிர் பிரிந்து விடும் அதை ஆராய்க. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை அது என்ன, என்ன எனவும், ஏன் எனவும் ஆராய்க. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து – னி. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங. இதையும் கருத்தில் கொள்க
இறைவனால் கற்று கொண்டு வந்த இரண்டு உயிர் எழுத்து உ + அ = (குவா). இன்னும் எம் தமிழில் நிறைய ரகசியம் உள்ளன.
தமிழை அதிகமாக பேசி சக்தி பெற முடியும். ஆனால் இன்றைய தலைமுறை மேலைநாட்டு மோகத்தில் திசைமாறி செல்லும் அவலம் நிகழ முதல் காரணம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் தமிழர்கள் கையில் இல்லை. இனிமேலும் தாமதப்படுத்தாமல்
தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலை ஊக்குவிக்க இணைந்திருப்போம் நாம் தமிழராய்!
வாழ்கத் தமிழ் மொழி!
வளர்க தமிழ் நாடு!
திரு. சி.தோ.முருகன்,
துணைச் செயலாளர்,
இணையதள பாசறை,
செந்தமிழர் பாசறை – குவைத்.