செப்டம்பர் 2022
தற்சார்பு பொருளாதாரத்தின் இன்றைய அவசியமும் தேவையும்! (இலங்கையுடன் ஒரு ஒப்பீடு)
இந்தியாவின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்யுமா? வீழ்ச்சிக்கு வீட்டு விடுமா? தமிழ்நாட்டு மக்களின் வரிச்சுமை மற்றும் பெட்ரோல் எரிவாயு பொருட்களின் விலை பெருமளவு பாதித்தது ஏன்?
உலக நாடுகளின் வர்த்தக கூட்டமைப்பு ஐரோப்பாவில் நடக்கும் ரஷ்யா உக்ரேன் போரால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதற்கான ஓர் சீராய்வே இந்த கட்டுரை.
குறிப்பாக கூற வேண்டுமெனில் 99% இந்தியா பின்தங்க சாத்தியக்கூறுகள் இல்லை.
இந்தியாவின் பொருளாதாரம் 3 லட்சம் பில்லியன் டாலர் பொருளாதாரம். இந்தியாவின் கடன் 6.37 பில்லியன் டாலர், அந்நிய செலாவணி கையிருப்பு 6.35%, நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் போது வெளிநாட்டில் உள்ள பணத்தை எடுத்து கடனை அடைத்துவிடலாம் அதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் பக்கத்து நாடான இலங்கையின் பொருளாதாரத்திற்கோ பேரிழப்பு. இலங்கையின் பொருளாதாரம் 84 மில்லியன் டாலர் பொருளாதாரம். இலங்கை நாட்டின் கடன் 52 பில்லியன் டாலர்கள். அத்தியச் செலாவணி கையிருப்பு இரண்டு பில்லியன் டாலர் மட்டுமே ஆகையால் இலங்கை மிகப்பெரிய சரிவை சந்தித்து கொண்டிருக்கிறது
ஆனால் இந்தியாவில் வசிக்கின்ற மக்கள் தொகையில் நடுத்தர மக்கள் வைத்திருக்கும் சொத்து 25% ஆகும். 25 கோடி நடுத்தர மக்கள் சேமிப்பில் இருக்கும் பணம் இந்தியாவில் உள்ள வங்கிகளில் 82 மில்லியன் சேமிப்பில் இருக்கிறது. அதாவது, 1.1 மில்லியன் டாலர். ஆனால் இலங்கையில் 19 லட்சம் பேரின் சேமிப்பில் மட் மூன்று மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது. அதாவது, 5.87 பில்லியன் பணம் வைத்திருக்கிறார்கள். அங்கு சேமிப்பு அதிகம் இவ்லை.
ஆனால் இந்தியாவில் பெகுந்தொகையை சேமிப்பில் மக்கள் வைத்துள்ளார்கள். இந்தியாவில் கச்சா எண்ணெய், டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போதும், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் பொழுதும் அத்தகைய பொருளாதார சிக்கல்கள் வருமேயானால் கிட்டத்தட்ட 60 மாத காலம் தாக்குப் பிடிக்கும் என்பது வல்லுநர்கள் கருத்து.
இந்தியாவில் 1991 அவசரகால நிலை ஏற்பட்டு இருந்தபோதும், பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. 17 மாதங்கள் பொருளாதார இழப்புகள் நீடித்தது. மீண்டும் அந்த சரிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை நமது வல்லுனர்கள் சரி செய்துவிட்டார்கள்.
அதே நிலைமை தற்காலத்தில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மத்திய உணவு பாதுகாப்பு சேமிப்பு கிடங்கில் 12 மாதத்திற்கான உணவுப்பொருட்கள் சேமிப்பில் உள்ளதாக புலனாய்வு சொல்கிறது. ஆனால் நம்மோடு வேறு நாடு போட்டாலோ இது போதுமா? போர் செய்தாலோ அல்லது பொருளாதார தடைகள் என்பது கேள்விக்குறியே.
அண்டை நாடான இலங்கையில் 7 மாதத்திற்கான உணவு இருப்பே உள்ளது என நிபுணர்கள் கருதுகிறார்கள். உலக நாடுகளில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் முப்பது மாதத்திற்கான உணவுகளை சேமித்து வைத்திருப்பதாக உலகச் செய்திகள் சொல்கிறது. இவற்றையெல்லாம் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். நம் மக்களுக்கான தானியங்களின் இருப்பைக்கூட்ட களஞ் சியங்களின் எண்ணிக்கையை கூட்டவேண்டும்.
இந்தியா பொருளாதாரத்தில் முதலீடு செய்வது, தங்கம் வாங்குவது குறைவு, ஆனால் டாலர்களை அதிகமாக சேமித்து வைத்துள்ளது என நாம் படித்தோம். இப்பொழுது நடக்கின்ற ரஷ்யா, உக்ரேன் போர்க்கனத்தில் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல இந்தியாவிற்கும் 30% தடைகளை விதித்தாலே இந்தியா அவர்களைப் போல ஆட்டம் கண்டு விடும். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு போகக்கூடிய நிலைமை உண்டு என வல்லுநர்கள் கண்காணித்து கூறுகின்றனர்.
இலங்கையின் சர்வதேசக் கடனில் வட்டி மட்டுமே 51%, 1.4 பில்லியன் டாலர் கடனை திருப்பிக் கட்ட வேண்டிய நிலையில் உள்ளது. அவர்களுக்கென்று உற்பத்தி அதிகப்படுத்தாது இறக்குமதியை மட்டுமே செய்ததன் விளைவு தான் இலங்கை திவாலானதற்கான காரணம். அதில் ஊழல் மிக முக்கியமாக நடத்தப்பட்டதாக பத்திரிக்கைகளில் படிக்கிறோம்.
இலங்கை பொருளாதார இழப்பிற்கு பல காரணங்கள்:
- 3 லட்சம் மக்களுக்கு இலவசம் வழங்கியது
- ஒரு குடும்பத்திற்கு 6000 ரூபாய் வழங்கியது
- ஒரு மில்லியன் மக்களுக்கு வாரம் மூன்று கிலோ அரிசி இலவசம் வழங்கியது.
- ஒரு குடும்பத்திற்கு 1 /2 கிலோ மீன் வழங்கியது.
- ஆர்கானிக் உரம் என்று 1190 மில்லியன் பணம் செலவு செய்யப்பட்டது.
இதெல்லாம் சீனாவில் இருந்து கடன் பெறப்பட்டு செலவு செய்யப்பட்ட தொகை. இலவசம் என்று சொன்னதன் விளைவு இலங்கை திவாலாகிப் போனது.
அதேபோல்தான் இந்தியாவில் 7 மாநிலங்கள் இலவசங்களை அள்ளிக் கொடுக்கின்றன:
- தமிழ்நாடு 37%
- உத்தரப்பிரதேசம் 31%
- ஆந்திர பிரதேசம் 25%
- தெலுங்கானா 23%
- மேற்கு வங்கம் 17%
- ராஜஸ்தான் 17%
- பீகார்17%
இதைப்போல் இருக்கிற மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் அதிகமாக இலவசங்களை கொடுக்கின்ற மாநிலம். 2020-21 நிதியாண்டில் 5.70 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு வட்டி மட்டும் 32 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அதாவது ஒரு தமிழ் நாட்டுக் குடிமகனுக்கு 73 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. பத்தாண்டுகளில் தமிழக அரசியல் இலவசத்திற்கு செலவு செய்த தொகை 2 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது 11.561 லட்சம் இலவசத்திற்காக செலவு செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது.
இப்படி இலவசம் கொடுத்தால் கூடிய விரைவில் தமிழ்நாடும் இலங்கையை போல மாறி விடக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர்கள் கொடுத்த இலவசத்தை வைத்து 25,000 பள்ளிக்கூடங்களும், 11000 மருத்துவமனைகளும் சுட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கலாம். அரசு அதிகாரிகள் இதைச் செய்வார்களா? கடினம்.
இலவசங்கள் கொடுப்பதில் மற்ற 17 மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கப்படுகின்ற தொகை குறைவு.
இந்த இலவசத்தால் ஏழைகள் வாழ்க்கை தரத்தில் உயர்ந்துவிட்டார்களா என்றால் கேள்விக்குறி. அதாவது 2005 முதல் 2013 வரை உள்ள காலகட்டங்களில் அரசு அதிகாரிகளுக்கு கொடுத்த சம்பளத்தை விட நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக பத்திரிக்கை செய்திகளின் மூலம் படிக்கிறோம் அதாவது 8000 கோடியிலிருந்து 34000 கோடி உயர்ந்துள்ளதாக செய்திகள் வருகிறது.
அரசாங்கத்திற்கு தொழில் துறையில் வரிச் சலுகைகள் அளிக்கின்றனர். அதில் ஏற்படுகின்ற நஷ்டத்தை கணக்கிடுவதில்லை என ஆய்வு அறிக்கை கூறுகிறது.அதை கணக்கில் காட்டுவது இல்லை அது அரசியல் இழப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
இலவசம் கொடுப்பதன் மூலம் மக்களை முன்னேற்றம் அடைய செய்வதாக நினைத்து பொங்கலுக்கு 2500 கொடுக்கிறார்கள். இந்தப் பணம் கொடுத்ததாக இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகிறதா என்றால் இல்லை. ஏற்றம் கண்டதா இல்லை. இதனால் யாருக்கு பயனின்றி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தான் இந்த பணம் அனைத்தும் போய் சேர்ந்துவிடுகிறது. எப்படி மக்கள் முன்னேறுவார்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்ற செயலை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள்புரிந்து கொள்ள வேண்டும் தமிழக மக்கள் மெரினா புரட்சி ஏற்படுத்தி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு சமூகம். ஆனால் இலவசத்திற்காக கையேந்துவதை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தாமல் சென்றால் அண்டை நாடான இலங்கையை போல பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். உலக நாடுகளில் சுவிட்சர்லாந்து நாட்டு மக்களிடம் அதிபர்கள் ஒரு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார்கள் மக்களே உங்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் தருகிறேன்” என்று சொன்னதும் மக்கள் எல்லோரும் உங்களுடைய பணம் தேவை இல்லை நாங்கள் வேலை செய்கிறோம் எங்களுடைய நாடு எங்களை வேலை செய்யவிடாமல் சோம்பேறியாக வேண்டாம். எங்களுக்கு இலவசம் தந்தால் பொருளாதாரத்தில் பின்தங்கி விடுவோம் என்று இலவசம் வேண்டாம் என்று 70% மக்கள் ஓட்டு போட்டார்கள் . ஆகவே தான் அந்த நாடு பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்றது.
தமிழ்நாட்டு மக்களே உங்களது உழைப்பை நீங்கள் வீண்டித்துக் கொண்டிருக்கிறீர்கள். 100 நாள் வேலை திட்டம் என்று உங்களுடைய உழைப்பை சிறுமைபடுத்துகிறீர்கள். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு துளியும் நாட்டினுடைய பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் மற்றும் எதிரி நாடுகள் நம்மோடு போரிட்டாலும் பொருளாதாரம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்
சிந்தித்து உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும் இந்த அரசாங்கம் பொங்கலுக்கு இலவசம் கொடுத்த பணம் 1972 கோடி, இந்தப் பணத்தில் தடுப்பணைகள் கட்டி இருக்கலாம் அல்லது போக்குவரத்து வசதி செய்து கொடுத்து இருக்கலாம் அல்லது பாலம் அமைத்துக் கொடுத்து இருக்கலாம் ஒரு நல்ல காரியத்திற்கு இந்த பணம் செலவு செய்ய முறைப்படுத்தப்பட வேண்டும். இலவசம் வேண்டாம் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு தமிழர்கள் நிற்க வேண்டும் இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது.
நம் இந்தியாவையும் நமது தமிழ்நாட்டையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல, நல்ல அரசு அமைய வேண்டும். மக்கள் மீது அன்பு கருணையும் மக்களுக்கான உழைப்பையும் அதற்கான ஊதியத்தையும் சரியான விகிதத்தில் பங்கிட்டு கொடுக்கப்போகும் அரசு தாம் தமிழர் அரசு தான்.
இது அமைய வேண்டுமே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக வேண்டும். 2026 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஆட்சி தமிழக மண்ணில் மலர வேண்டும் நாடும் மக்களும் செழிப்பாகவும் லஞ்சம் ஊழல் கொலை கொல்லையில்லாமல் தூய ஆட்சி மலர ஒன்றினைவோம் நாம் தமிழராய்!
திரு. மீ.பூமிநாதன்
செந்தமிழர் பாசறை – குவைத்.