செப்டம்பர் 2022
மாஞ்சோலை (தாமிரபரணி) படுகொலை
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். பல தலைமுறையினார் அங்கு குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்த்த நிலையில் 30ரூபாய் ஊதிய உயர்வு கேட்டனர். பல அரசியல் தலைவர்களிடமும் கோரிக்கை வைத்தனர்.
1999ம் ஆண்டு சூலை மாதல் 8ம் தேதி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போரட்டம் நடத்தினர். திராவிட ஆட்சியல்லவா! போராடிய அனைத்து தொழிலாளர்களையும் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட தங்கள் கணவர்களை விடுவிக்க கோரி பெண்கள் போராடினர். அப்பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது திராவிட அரசு. திராவிட திமுக அரசின் பெண்ணியப் புரட்சி இவ்வளவு தான்.
652 பேரை விடுவிக்க கோரியும், ஊதிய உயர்வும் கேட்டு சூலை 23ம் தேதி ஆட்சியர் அலுவலகம் முன் மக்கள் அணிவகுத்தனர். சுமார் 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல அரசியல் தலைவர்களும் இதில் கலந்துக்கொண்டனர். சுமார் ஐந்தாயிரம் பேர் இந்த போரட்டத்தில் கலந்துக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு 50 மீட்டர் முன்னரே அணிவகுப்பு நிறுத்தப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன.

ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதிக்குமாறு அன்றைய கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம் அரசியல் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை மறுக்கப்படவே, தாமிரபரணி ஆற்றின் கரை வழியே ஆட்சியர் அலுவலகம் செல்வதற்கு போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர் முயன்றனர். கூட்டத்தைக் கலைக்க காவலர்கள் லத்திகளையும் கற்களையும் சொண்டு தாக்கினர்.
வானத்தைப் பார்த்தவாறு இரு முறை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு அச்சமடைந்த மக்கள் தாமிரபரணி ஆற்றைக் கடந்து தப்பிக்க முயன்றனர். அப்போதும் மிருகத்தனம் கொண்ட காவலர்கள் அவர்களைத் தண்ணிருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்தனர்.
உயிரிழந்த 17 பேரில் இரண்டு பெண்களும் ஒரு 2 வயது குழந்தையும் அடக்கம், சம்பவம் நடந்து முடிந்த பின்பே ஆட்சியர் தனவேல் அந்த இடத்திற்கு வந்தார். வழக்கம்போல காவலர்கள் எழுதி கொடுத்த செய்தியை வாசித்துவிட்டு சென்றார். மத்தியில் பாஜகவோடு கூட்டு சேர்ந்து இந்த திமுக அரசு மக்களை காவு வாங்கியது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் நியமிக்கப்பட்டார்.

விசாரணையின் முடிவில் 11 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததாகவும், மற்றவர்கள் காயங்களால் இறந்ததாகவும் நீதிபதி அறிக்கை சமர்ப்பித்தார்.
உயிரிழந்தவர்களின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்தனர். ஐந்து நாட்களில் மிகுந்த பாதுகாப்போடு பிணங்களை அரசு புதைத்தது. திராவிட மாடல் அரசு இதுதான். மக்கள் கலகம் செய்ததால் தான் காவலர்கள் தாக்கினர் என்று அறிக்கை சமர்ப்பித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.
இந்தச் சம்பவத்தை நினைவுகூர நினைவுச் சின்னம் அமைக்குமாறு அரசியல் தலைவர்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. நாம் தமிழராய் ஒன்றுபட்டால் தான் இது போன்ற கோர நிகழ்வுகள் நடக்காது நமது மக்களைப் பாதுகாக்க முடியும்.
உயிர் நீத்த ஈகியர்களுக்கு வீரவணக்கம்!
திரு. டொமினிக் செயசீலன்,
செந்தமிழர் பாசறை – சுத்தார்.