ஆகத்து 2022
நாம் தமிழரின் தற்சார்பு பொருளாதாரம்
திரு. சீமான் சொல்லும் தற்சார்பு பொருளாதாரம் நடைமுறைக்கு சாத்தியமா? எனக் கேள்விகள் கேட்போருக்கும், தொழிற்சாலைகளே இல்லையென்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உருவாகும்? நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்? என கவலைகள் அடைவோருக்கும்…
“இன்று நம் மத்திய மாநில அரசுகள் முன்னெடுக்கும் பல திட்டங்கள் நம் இயற்கை வளங்களுக்கு எதிரானது குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம், அணுக்கழிவு மையம், தேனியில் நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், சேலத்தில் 8 வழிச்சாலை, கடலோர மாவட்டங்களில் சாகர்மாலா திட்டம், கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை என இன்னும் பல நம் தாய் மண்ணை மலடாக்கும் நாசாகாரத்திட்டங்கள்”.
சரி அப்படியென்றால் தொழிற்சாலைகளே வேண்டாமா? எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று சொல்லிக்கொண்டு அரசு கொண்டுவரும் திட்டங்களை எல்லாம் தடுத்து விட்டால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி உருவாகும்? என்று கேட்பவர்களுக்காக என்னால் இயன்றவரையில் சிறு விளக்கம்.
உலகில் மிகச் சிறிய நாடுகளெல்லாம் தன் நாட்டில் உள்ள வளங்களை மட்டுமே வைத்து தன் பொருளாதார மற்றும் உணவுத் தேவைகளை மேம்படுத்திக்கொள்ளும் பொழுது கடல்வளம், கனிமவளம், காட்டுவளம், மண்வளம், மலைவளம், கச்சா எண்ணை வளம், நீர்வளம், நில வளம் உள்ள நம் தமிழ் நாட்டில் முடியாதா? பிறகு ஏன் தமிழ்நாடு அரசுக்கு மட்டும் 7 லட்சங்கோடிகள் கடன்?
அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் ஒரு பாலைவன நாடு அதன் பரப்பளவு நமது கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களின் எல்லைக்குட்பட்ட பரப்பளவேயாகும். அந்நாடு 1965ம் ஆண்டு வரையில் ஏழை நாடுகளின் பட்டியளில் இடம்பெற்றிருந்த ஒருநாடு, அக்காலத்தில் முத்துக்குளிப்பு மற்றும் மீன் பிடித்து வணிகம் செய்து வந்தனர். ஆனால் அந்நாட்டின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
உலகின் வல்லாதிக்க நாடுகள் கூட தன்னுடைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, சற்று அஞ்சி உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த தயங்கும் பொழுது எதிர் வரும் நவம்பர் மாதத்தில் 2022க்கான உலக கால்பந்து போட்டிகளை கத்தார் நாடு நடத்தப்போகின்றது. அதற்காக எட்டு விளையாட்டு மைதானங்கள் புதிதாக கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. இது எப்படி முடிந்தது?
இன்று கத்தார் நாட்டின் முதன்மையான வருமானம் எண்ணை வளம் மற்றும் இயற்கை எரிவாயு (Oil & Liquefied Natural Gas). எதிர்காலத்தில் ஒருவேளை எண்ணை வளம் தீர்ந்து விட்டால்?. அடுத்து என்ன செய்யும்? கத்தார் நாட்டின் TAT QIA (Qatar Investment. Authority) வலைப்பக்கத்தில் சென்று பாருங்கள்.
உலகின் பல நாடுகளில் சுமார் 100 பில்லியன் டாலர் பணத்தை (இந்திய மதிப்பில் சுமார் 2200 கோடிகள்) முதலீடு செய்துள்ளது. மற்றும் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களின் 30% பங்குகளை வைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளைப்போன்று பெரும் வணிக வளாகங்களையும், சுற்றுலாத் தளங்களையும் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது. இன்று தனி நபர் வருமானத்தில் உலகில் முதல் பணக்கார நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது கத்தார்.
அடுத்து சிங்கப்பூர், அந்நாட்டின் மொத்த பரப்பளவு, சென்னை மாநகரை போல் இரு மடங்கு பரப்பளவு மட்டுமே! நாட்டின் வருமானம் / வளம் : மீன், சுற்றுலா, வணிக வனாகம் (commodity / stock market), உலகின் மிக சிறந்த மருத்துவமனைகள்.
உலகின் பல நாட்டு இளைஞர்களுக்கும் வேலை கொடுக்கின்றது. காரணம் ஊழல் வஞ்சமற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகம். அந்நாட்டில் அனைவரும் வருமான வரி கட்டி தனது கடமையைச் செலுத்துகின்றனர். ஆட்சியாளர்களோ அன்பான சர்வாதிகார ஆட்சியை நடத்தி மக்களின நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். உலகின் தீண்டத்தகாத நாடு என கேவலப்படுத்திய வல்லாதிக்க நாடுகளுக்கு முன்பு இன்று சிங்கப்பூரை உலகின் மிகச்சிறந்த நாடாக மாற்றி நிறுவியிருக்கிறார்கள் அதன் மதிப்புமிக்க ஆட்சியாளர்கள்.
மூன்றாவதாக கியூபாவை எடுத்துக்கொண்டால் எழுபத்தைந்து விழுக்காடு நாட்டின் பொருளாதாரத்தை வெறும் கரும்பு சர்க்கரை ஏற்றுமதியால் மட்டுமே தன்னிறைவை அடைந்துள்ள நாடு. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என போற்றப்படும் கியூபா, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான தன் கொள்கை கோட்பாடுகளில் சற்றும் பின் வாங்காமல் தன் மக்களுக்காகவும் தாய் மண்ணிற்காகவும் சிறந்ததொரு ஆட்சியைக் கொடுத்து வருகிறது. ஆனால் அனைத்து வளங்களும், நிலங்களும், அளப்பரிய மனித ஆற்றலையும் கொண்ட தமிழ்நாட்டிற்கு பிறகு எப்படி ஏழு லட்சம் கோடிகள் கடன் வந்தது? காரணம் என்ன? ஆட்சியாளர்கள் மாற்று பொருளாதாரத்திற்கு திட்டமிடாமல், தனியாரிடம் நாட்டையும் நாட்டின் வளத்தையும் தாரை வார்ப்பதும், ஊழல் லஞ்சம் என கேடுகெட்ட ஆட்சிமுறையுமே ஆகும்.
அரசுக்கு தான் ஏழு லட்சம் கோடிகள் கடனேத் தவிர அரசை ஆளும் முதலமைச்சர் முதல் வார்டு கவுன்சிலர் வரை யாகும் கடன்காரர்கள் இல்லை மாறாக பல ஆயிரம் கோடிகளின் அதிபதிகள். குறிப்பாக அன்று திருட்டுத்தனமாக தொடர்வண்டி ஏறி வந்தவர்கள் இன்று ஆசியாவில் ஆறாவது பெரும்பணக்காரர். கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழர்கள் நாம் அடைந்தது என்ன? பிற மொழியாளர்களை நம் மண்ணில் வாழவைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை நாட்டை ஆளவும் வைத்து அவர்களை கோடிகளில் புரளவிட்டு நாம் தெருக்கோடியில் நின்றது தான் மிச்சம்,
ஒரு அமைச்சர் பள்ளி விழாவில் பேசுகிறார், அரசின் சாராயக்கடையான டாகமாக வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று.
இதைவிடக் கேவலம் ஒன்று உண்டா அன்று திருடன், கொலைக்காரன், கொள்ளைக்காரன், ரவுடிகள் நடத்திய சாராய வியாபாரத்தை இன்று அரசே நடத்துகிறது. அரசு நடத்தவேண்டிய கல்வி நிலையங்களை இன்று தனியார் ரவுடிகளும், அரசியல் பொறுக்கிகளும் நடத்துகிறார்கள்.
நாட்டின் நலன், மக்களின் பொருளாதார மேம்பாடு, நலமிக்க பொருளியல் வாழ்வு போன்றவற்றில் துளியும் கவனம் செலுத்தாது, தமிழர்களுக்கெதிரான செயல்பாடுகளிலும், தமிழ், தமிழர் வரலாற்றை அழிக்கும் வேலைகளிலுமே முழுவதுமாய் கவனம் செலுத்தி வருகிற திராவிட மாடல் ஆட்சியாளர்களின் கோர முகங்கள் இன்றைக்கு நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகளால் முழுவதுமாகத் தோலுரிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழர்கள் மீதான வெறுப்பினால் தமிழர்கள் மத்தியில் சாதி மத உணர்வுகளை நாளும் விதைத்து, அதன்மூலம், தமிழர்களை ஓர்மையடையாமல் பிரித்து பிளந்து, அரசியல் பிரதிப்பயனும், இலாபமுமடைந்து, அதிகாரத்தைச் சுவைத்து வந்த திராவிட கட்சிகளின் ஆட்சியாளர்களை, குறிப்பாக திமுகவின் கொடுங்கோன்மையை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக புரியத் தொடங்கியிருக்கின்றனர். இவங்கையில் குடும்ப ஆட்சிக்கும், தமிழர்கள் மீதான வெறுப்பரசியலுக்கும் கிடைத்த சம்மட்டி அடி விரைவில் தமிழ்நாட்டில் திமுகளின் குடும்ப ஆட்சியாளர்களுக்கும் கிடைக்கும்.
லஞ்சம் ஊழலை ஒழித்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்று எம்மக்கள் எண்ணுவது சரிதான்! யாரை வைத்து ஒழிப்பது?
எவன் சாராய ஆலைகளை நடத்துகிறானோ! அவனுக்கே வாக்குச் செலுத்தி வெற்றிபெற வைத்து, அவனே சாராயக்கடைகள் மூடுவான் என்று எண்ணி ஏமாறும் தமிழர்கள் நம்மவர்கள் தான்.
இதை சரி செய்யத்தான் தீயத் திராவிடக்கட்சிளான திமுக, அதிமுக தேசியக்கட்சிகளான காங்கிரசு, பாஜக இவற்றிற்கு ஒரே மாற்று நாம் தமிழர் கட்சி என்று அரசியல் களத்தில் தனித்து களமாடி மக்களது மனங்களை வென்று குறிப்பிடத்தக்க வாக்குகளையும் பெற்று விட்டோம்!
நாம் தமிழர் அரசு அமையும் வேளையில், அரசு முன்னெடுக்கும் அன்பான சர்வாதிகார ஆட்சியில் சில திட்டங்கள்.
ஊழல் லஞ்சத்தை ஒழிப்பதற்கு வெளிப்படையான வரவு செலவு கணக்கு.
கல்வி, மருத்துவம், குடி நீர் அனைவருக்கும் இலவசம்.
மழை நீர் சேகரிப்பில் முழு கவனம். தீர் தேவையில் தன்னிறைவு.
ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி
ஏ2 வகை பால் உற்பத்தியில் மூன்று லட்சம் கோடி வருமானம் தரும் நாட்டுப்பசுக்கள் வளர்த்தல், ஜெர்சி மாட்டிற்கு தடை (டாசுமாக் நிரந்தர தடை.)
ஆடு, மாடுகளின் உரத்தொழிற்சாலை. கழிவைக்கொண்டு இயற்கை
இயற்கை உரங்களைக் கொண்டு விவசாயம். செயற்கை உரத்திற்குத் தடை
நிலம் வளம் சாரந்த பசுமைத் தாய்மை தற்சார்பு பொருளாதாரம்; மீன் பிடித்தல், இயற்கை வளம், மண் சார்ந்த தொழிற்சாலை. படித்தவர் படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை.
படிக்காதவர்களே இல்லை உருவாக்குவது அடுத்த வேலை. என்ற நிலையை பொருளாதாரத்தில் தன்னிறைவு.
விவசாயம் அரசுப்பணி, நாம் தமிழர் அரசு கட்டமைத்து கொடுக்கப்போகும். இந்த திட்டத்திற்கு தேவைப்படும் கால அளவு வெறும் 10 ஆண்டுகள்.
நாங்கள் செய்யும் அரசியல் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கானது. பூமியின் சொர்க்கமாக நம் தாய்த் தமிழ்நாட்டை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கையளிக்கப்போகிறோம். நாம் தமிழர் அரசு அனைத்து உயிர்களுக்குமான தேவையை முன்னெடுத்துச்செல்கின்றது.
அனைத்து துன்பப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே என்றும் அதிகாரம் மிக வலிமையானது. அதை அடைந்துவிட்டால் அனைத்தும் மிக எளிமையானது என்றும் அறிவாசான் அண்ணல் அம்கேத்கார் அவர்கள் சொன்னது போல, நாம் தமிழர் அரசு மக்களுக்கானதும் அனைத்து உயிர்களுக்குமானது.
ஆட்சி அதிகாரம் எம்மக்களுக்கானது என பிரகடனம் செய்கிறது நாம் தமிழர் கட்சி. எனவே இக்கட்சியை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை. நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் அமைய கரம் கோர்ப்போம் நாம் தமிழராய்.
நன்றி! வணக்கம்!! நாம் தமிழர்.
திரு. வெள்ளியங்கிரி சண்முகம்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.