ஆகத்து 2025
பனைமரம்
உலகிலுள்ள மொழிகளுக்கொல்லாம் மூத்த மொழி நம் தமிழ் மொழி என்று நாம் பெருமையோடு சொல்கிறோமே, அந்த செம்மொழி நமக்கு கிடைக்க காரணமாக இருந்த மரம் தமிழர்களின் அடையாளமாகவும், தமிழ்நாட்டின் மரமாகவும் விளங்கும் மரம் – தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துவிட்டு வருவார்கள்; அது போல தான் கால் பதித்த இடமெல்லாம் புதைத்துவிட்டு வந்த மரம்.
ஆம்.
கற்பக விருட்சம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்ட பனைமரம்.
இது ஒரு வகையான புல் வகையை சார்ந்த பேரினம். இதை இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தொல்காப்பியத்தில் நம் தொல்காப்பியரே கூறுகிறார்
புறக் காழனவே புல்லெனப் படுமே…
அகக் காழனவே மரமெனப் படுமே…
இந்த பாடலை பற்றிய விளக்கம் தெரிந்த கொள்வதற்கு முன்பு பண்டைய கால தமிழும் அது பதிவு செய்து வைத்துள்ள அறிவியல் குறித்தும் ஒரு பார்வை…
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை கொண்டவை என நம் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுகளோடு விவரிக்கிறார்.
1. ஓர் அறிவு – தொடு அறிவு (எ-கா) புல், மரம்
2. இரண்டறிவு -தொடு மற்றும் சுவை அறிவு (எ-கா) நத்தை, சங்கு
3. மூன்றறிவு- தொடு,சுவை மற்றும் மோப்ப அறிவு (எ-கா) கரையான, எறும்பு
4. நான்கறிவு- தொடு,சுவை,மோப்ப மற்றும் பார்வை அறிவு (எ-கா) நண்டு, தும்பி
5. ஐந்தறிவு- தொடு,சுவை,மோப்ப ,பார்வை மற்றும் கேட்டல் அறிவு (எ-கா) விளங்குகள், பறவைகள்
6. ஆறறிவு – தொடு, சுவை, மோப்ப, பார்வை, கேட்டல் மற்றும் பகுத்தறிவு (எ-கா) மனிதர்களாகிய நாம் அனைவரும் இவ்வாறாக தொல்காப்பியர் வகைப்படுத்துகிறார்.
அது போல தற்கால தாவரவியல் அறிஞர்கள் கூறுகையில்,
புல் – ஒரு வித்திலை தாவரம் இவை கிளைகளின்றி நேராக வளரக்கூடியவை ,இதில் கட்டை எனப்படும் பகுதி இருக்காது (புறக்காழ்)
மரம்- இரு வித்திலை தாவரம் இவை கிளைகளை கொண்டு வளரக்கூடியவை இதில் கட்டை எனப்படும் பகுதி இருக்கும். (அகக்காழ்)
தென்னை மரமும், பனைமரமும் ஒரு வித்திலை தாவரம் என்பதால் இந்த பனைமரம் புல் இனத்தை சார்ந்தது என புலப்படுகிறது.
வகைகள்:
இந்த பனைமரங்கள் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டவை. இவை அடர்ந்த காடுகளில் தென்படுவதில்லை; பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடங்களிலும் நீர் நிலைகளை ஒட்டியேயும் பனை காணப்படுகிறது. தற்போது இவை ஆசிய நாடுகளான இந்தியா,இலங்கை,மலேசியா, மியான்மர்,தாய்லாந்து,வியட்நாம்,சீனா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இந்த மரங்கள் மொத்தமாக 34 வகைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
ஆண் பனை, பெண் பனை, கூந்தப் பனை, தாளிப் பனை, குமுதிப் பனை, சாற்றுப் பனை, ஈச்சம் பனை, ஈழப் பனை, சீமைப் பனை, ஆதம் பனை, திப்பிலிப் பனை, உடலற் பனை, கிச்சிலிப் பனை, குடைப் பனை, இளம் பனை, கூறைப் பனை, இடுக்குப் பனை, தாதம் பனை, காந்தம் பனை, பாக்குப் பனை, ஈரம் பனை, சீனப் பனை, குண்டுப் பனை, அலாம் பனை, கொண்டைப் பனை, ஏரிலைப் பனை, ஏசறுப் பனை, காட்டுப் பனை, கதலிப் பனை, வலியப் பனை, வாதம் பனை, அலகுப் பனை, நிலப் பனை மற்றும் சனம் பனை என வகைப்படுத்தப்பட்டுகின்றது.
திருக்குறளும் பனைமரமும்:
ஒரு பொருளை சிறியது என குறிப்பிட தினையளவு எனவும் பெரியது என குறிப்பிட பனையளவு எனவும் வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.
உலகப் பொது மறை எழுத ஓலை தந்த பனைமரத்திற்கு நன்றி பாராட்டும் விதமாக தனது அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால் என மூன்று பால்களிலும் பனைமரத்தை பயன்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.(104-அறத்துப்பால்)
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.(434-பெருட்பால்)
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையாக்
காமம் நிறைய வரின்.(1282-இன்பத்துப்பால்)
புறநானூறும் பனைமரமும்:
பாடல் 255ல் ஆலந்தூர் கிழார் சோழன் நலங்கிள்ளி படைகள் வரும் போது
அவன் முதல் வரிசை படைகள் பனைமரத்தின் நொங்கை சாப்பிட்டதாகவும்,
அவனது இடைநிலைப் படைகள் முதல்நிலை படைகள் மீதம் விட்டுச்சென்ற பனங்காய்கள் பழுத்த பழத்தை சாப்பிட்டதாகவும், கடைநிலைப் படைகள் இடைநிலைப் படைகள் உண்டுவிட்டு வீசிய பனம்பழுத்தின் கொட்டை முளைத்து அதிலிருந்து வந்த பனங்கிழங்கை உண்டதாகவும், சோழனின் படைபலம் விரிந்திருந்ததாக பனைமரத்தின் பருவத்தோடு ஒப்பிட்டு பாடியிருக்கிறார்.
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கினி மாந்த
கடையோர் விடுவாய் பிசிரோடு சுடுகிழங்கு நுகர.
நில மலர் வையத்து வல முறை வளைஇ.
என்று செல்கிறது பாடல்.
இவ்வாறாக திருக்குறள், தொல்காப்பியம்,நற்றினை,புறநானூறு,திருப்பதிகம் என பல சங்க இலக்கிய நூல்களில் பனையின் பெருமை பாடப்பட்டிருகின்றது..
கிபி 1030 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் வந்த அல் பிரிணி(Albiruni), கால்டுவெல் முதல் ஐரோப்பியர்கள் காலம் வரை தமிழர்கள் பனை ஓலையை பயன்படுத்துவதை கண்டு வியந்து போயிருக்கின்றனர்.
தமிழர்கள் எழுத்தாணியையும், பனை ஓலையையும் குறைந்த காசுகளுக்கு வாங்கி மிக வேகமாகவும் துல்லியமாகவும் ஓலை பழுதடையாமலும் எழுதுகின்றனர். இப்படி பனை ஓலைகளில் எழுதப்படும் எழுத்துக்கள் குறைந்தபட்சம் 400 ஆண்டுகள் அழியாமல் இருக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றனர்.
பனைமரத்தின் பயன்கள்:
ஏறத்தாழ 801 வகையான பயன்கள் மனித குலத்திற்கு கிடைப்பதாக ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் பெர்குசன் கூறுகிறார்.
பனங்கருக்கு என சிறு மரங்களை உடைப்பதன் மூலம் பனங்குருத்து கிடைக்கிறது. இதை உண்பதற்கு சுவையாக குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு இதை கொடுப்பார்கள்.
வளர்ந்த மரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலைகள் வீடுகளில் கூரை அமைப்பதற்கு, பாய் பின்னுவதற்க்கு, உட்காருவதற்கு, பண்டங்கள் காட்டுவதற்கு, விசிறிகள் செய்வதற்கு, வீடு துடைப்பதற்கும் பயன்படுகின்றன. கடுமையான வறட்சி காலங்களில் மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்திருக்கிறார்கள்.
பனைமரம் பாளை விடும் போது அந்த பாளையிலிருந்து பதநீர் கிடைக்கும். பதநீர் இறக்கும் பானையில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் சுவையான இயற்கையான போதையூட்டும் கள் கிடைக்கிறது.
கள் இறக்கிய சில நாட்களுக்கு பிறகு அந்த மரத்திலிருந்து பனங்காய் காய்க்கிறது அதிலிருந்து குளிர்ச்சியூட்டும் நுங்கு கிடைக்கிறது. அதன்பிறகு சற்று முற்றிய காய்களை சேவாய் என்பார்கள் அதை வேக வைத்து உண்ணலாம்.
பனங்காய் பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கிறது. இதிலிருந்து பலவகையான திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.
பனம்பழுத்திலிருந்து கிடைக்கும் கொட்டைகள் முளைத்து பனங்கிழங்கு கிடைக்கிறது. முளைக்காத கொட்டையிலிருந்து சீப்பை கிடைக்கிறது இவைகள் குழந்தைகள் உண்பதற்கு சுவையானதாகவும்,நார்ச்சத்து மிகுந்ததாகவும், சர்க்கரை நோய் வராமல் காக்கவும்,வயிற்றுப்புண்ணுக்கு உகந்ததாகவும் உள்ளது.
பனம்பாலை கொப்பறையில் ஊற்றி சூடேற்றும் போது ஒரு குறிப்பிட்ட கொதி நிலையில் கட்டியாகும் பாகிலிருந்து கருப்பட்டி எனும் பனை வெல்லம் கிடைக்கிறது.
அதை தாண்டிய கொதி நிலையில் கட்டியாகும் பாகுவை ஒரு மண்பானையில் போட்டு ஆறு மாத காலம் மண்ணுக்குள் புதைத்து வைத்தால் கற்கண்டு மற்றும் மொலாசீஷ் எனும் வேதிப்பொருள் கிடைக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் எத்தனால் குறிப்பிட்ட அளவு பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது. மலேசியா அரசு இந்த முறையில் எரிபொருள் சிக்கனத்தையும் கடைபிடித்து வருகின்றது.
பனைமரத்தின் வேர்கள் மழை நீரை மிக வேகமாக பூமிக்கடியில் கடத்தும் திறன் கொண்டவை என்பதால் நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கின்றது.
1991 ஆம் ஆண்டு இந்தியாவின் (Village Industry Commission) சிற்றூர் தொழில் குழுமம் எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் மட்டும் 40 கோடியே 25 இலட்சம் மரங்கள் இருந்ததாகவும் தற்போது இந்திய அளவில் மொத்தமே 10.2 கோடி மரங்கள் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் வெறும் 2 கோடி மரங்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்கள்.
பனை மரங்கள் அதிக அளவில் செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக வெட்டி எடுத்துச் சொல்லப்படுவதால் பனை இனம் மிக வேகமாக அழிந்து வருகிறது எனவும்
இதன் மூலம் கோடை காலங்களில் இதுவரை காணாத அளவில் புவி வெப்பமயமாதல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது எனவும். சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வேதனையுறுகிறார்கள்.
பனை வளர்ந்தால் தமிழன் எழுச்சி பெற்று விடுவான் என்று தெரிந்தே திட்டமிட்டு தமிழகத்தை இத்தனை ஆண்டுகளாக தன் வசம் வைத்திருக்கும் திராவிடம் தன் அதிகார திமிரில் அதற்கு தடை விதித்து நம்மை மெல்ல மெல்ல அழித்து வருகின்றனர்.
தமிழகமெங்கும் டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விரிய மிக்க தமிழ் இளைஞர்களை சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாக்கி ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே குழி தோண்டி புதைத்து வருகின்றனர். இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்க தடையில்லை; தமிழகத்தில் மட்டும் தடை என்றால் இந்த அரசு நமக்கு என்ன சொல்ல வருகிறது. இதனால் வெகுண்டெழுந்த அண்ணன் செந்தமிழன் சீமான் தடையை மீறி தானே பனை ஏறி கள் இறக்கி மக்களுக்கு கொடுத்து வரலாற்று சிறப்பு மிக்க புரட்சியை செய்திருக்கிறார்.
தமிழகம் பல்வேறு புரட்சியை கண்டிருக்கலாம்; ஆனால் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் குரல் நம் அடிமை விலங்கை உடைத்தெறிய வந்துள்ளது. அது தமிழகமெங்கும் பரவ தொடங்கி விட்டது; திருட்டு திராவிட அயோக்கியர்கள் இதை எப்படியாவது மடை மாற்றி புறக்கணித்து மீண்டும் ஆட்சி கட்டில் அமர்ந்து விட வேண்டும் பல வேலைகளை செய்து வருகின்றனர். சில ஒட்டுண்ணிகள் சமூக வலைதளங்களில் வெறி நாய்களை போல் குரைக்க துவங்கிவிட்டன. ஆனால் கட்சியை சாராத பொது மக்களே இந்த வெறி நாய்களை துரத்தி அடிப்பதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
இதிலிருந்து தமிழன் விழித்துக் கொண்டான் என்பது மன மகிழ்ச்சியை தருகிறது இத்தனை ஆண்டுகால போராட்டம் வீண் போகவில்லை நிச்சயமாக நாம் தமிழர் கட்சி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை மென் மேலும் வளர ஆரம்பித்துவிட்டது.
இனி தான் புலி பாய்ச்சல் ஆரம்பம் என்பதை அனைவரும் உணர்ந்து முன்னேற வேண்டும். புரட்சி தீ நாடெங்கும் பரவ வேண்டும்; எதிரி எங்கு நம்மை அடிமைபடுத்தினானோ இங்கிருந்தே அவனை விரட்டி அடித்து காற்றில் கரைக்க வேண்டும். பனை மரம் தமிழனை வாழ வைக்கும் கற்பக விருட்சம் மட்டுமல்ல எதிரியை அழித்தொழிக்க பச்சமட்டையை தரும் ஆயுத கிடங்கும் கூட இதை மனதில் பதிய வைத்துக்கொண்டு முன்னேறுவோம்.
வாழ்க பனைமரம் வளர்க பனைமரம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
திரு. சதீஷ் குமார் சங்கர்,
செந்தமிழர் பாசறை – கத்தார்.