சூன் 2025
பாதுகாக்கப்படாத உணவும் பாதுகாக்கப்படும் நஞ்சும்
நம் விவசாயிகளின் உழைப்பால் உருவான நெல்மணிகள், மக்கள் உணவாக உண்ண வேண்டிய இயற்கையின் கொடை. ஒருபக்கம் அவை தகுந்த பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் மழையிலும் காற்றிலும் சிதைவடைந்து குருவிகளுக்கும் எலிகளுக்கும் இரையாகிறது. விவசாயியின் துயரத்தை மதிக்காத இந்த நிலை, உணவின் மீதான உழவின் மீதான திமுக அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.
மற்றொரு பக்கம், மனித உடல் மற்றும் மனதைச் சிதைக்கும் மதுபான கடைக்கோ காவல்துறை துவக்குடன் காவலாய் நிற்கிறது. மேலும் கண்காணிப்புக் கருவிகள், புலனாய்வு வசதிகள், பாதுகாப்புக் கதவுகள் என அனைத்தும் மதுவைப் பாதுகாக்க திமுக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது திராவிட மாடலின் சிந்தனையும் செயலையும் வெளிப்படுத்துகிறது.
மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டிய அரசின் பொறுப்பு என்னவாயிற்று?
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய அரசு, உணவைக் கைவிட்டுவிட்டு நஞ்சுக்குப் பாதுகாப்பு அளிப்பது கசப்பான உண்மை. உணவைக் குறைவாக மதித்து, மது விற்பனைக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசின் நடைமுறை, நமது சமூகத்தின் விழுமியங்களையும், அரசின் நிர்வாகத் திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
உலகெங்கும் உணவில்லாமல் தான் புரட்சி வந்துள்ளதே தவிர, மதுவில்லை என்பதால் அல்ல. வாழ்க்கைக்கு ஆதாரமான உணவுக்கு பாதுகாப்பு கொடுக்காமல், உயிரைக் கெடுக்கும் பொருளுக்கு அரசுத் துணை நிற்கும் இந்நிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். தமிழக மக்களே திராவிட மாடலை தீயிட்டு கொளுத்துவோம்; மதுவை ஒழிக்க நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிப்போம்!
திரு. க. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.