ஏப்ரல் 2023
பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் உயர்ந்தால் தமிழன் மேன்மையுறுவான் என்பதை உணர்ந்து, தன் வாழ்நாவெல்லாம் அன்னைத் தமிழுக்குக் கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும், நாடகங்களும், புதினங்களும் நல்கி, தமிழை உயர்த்திப் பிடித்தவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், நூற்றாண்டு கடந்தும் நம் நினைவலைகளில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் புரட்சிக்கவி அவர்.
கனகசபை முதலியாரும் இலக்குமி அம்மையாரும் 1891 ஆம் ஆண்டு புதுவை மண்ணில் நம் புரட்சிக்கவியை ஈன்று கையளித்தனர், தமிழுக்காக காலனியாதிக்கக் காலத்தில் பிறந்ததினாலேயே பிரெஞ் மொழியை இளமையில் கற்கும் இன்னலுக்கு உள்ளான போதும், தாய்மொழி மீது கொண்ட பற்றினாலேயே தமிழ் மொழியின் இலக்கண இலக்கியங்களை பேரறிஞர்களிடமிருந்து கற்கும் பேற்றினை இயற்கை அவருக்களித்தது எனலாம்.
பதின்ம வயதில் தமிழ் மீது அவர் கொண்டிருந்த புலமையினால் கல்லூரிப் படிப்பை முடித்தவுடனேயே அரசு கல்லூரியில் தமிழாசிரியராகும் வாய்ப்பினைப் பெற்றார். அயலானிடத்தில் அடிமைப்பட்டிருந்த மக்களைத் தன் எழுச்சிமிகு பாடல்களால் செயலாற்றத் தூண்டிய பாரதியின் மீது அன்பும் நட்டும் கொண்டவராய்த் திகழ்த்தார்.
பாரதிதாசன் சுதந்திரப் போராட்டக்களத்தில் பலமுறை சிறைக்குச் சென்றவர். அந்நியர் ஆட்சியில் சிறைக்காவலில் இருந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர். தமிழுக்கு மட்டும் தொண்டு ஆற்றாது, தமிழருக்கும் சட்டமன்ற உறுப்பினராய் இருந்து அவர் தொண்டாற்றினார்.
பாரதிதாசன் தம் பாடலில் தமிழ், தமிழர் என்று படிநிலை அமைத்துப் பாடியுள்ளார். தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள். அவர்கள் வீரம் நிறைந்தவர்கள், கங்கையைப் போன்றும் காவிரியைப் போன்றும் கருத்துகள் ஊனும் உள்ளம் கொண்டவர்கள் என்று தமிழையும் தமிழர்களைப் பற்றியும் பாடியுள்ளார்.
கனீச்களை, பூத்தேன். வெல்லப்பாகு, இளநீர், கரும்புச்சாறு, பசும்பால் ஆகியவற்றின் சுவையை விடச் சுவைமிக்கது தமிழ்” என்று கூறியதோடு நில்லாமல், “தமிழுக்கு அமுதென்று அது பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” வனத் தமிழை அமுது என்று கூறியும், அத்தமிழை உயிருக்கு நிகராக பாவிக்கும் பெரும் தமிழ்க் காதலனாய்த் திகழ்ந்தவர்
சூராவளியில் சிக்குண்டு நாள் முழுவதும் அலைந்து திரிந்த போதிலும் அவ்வனுபவத்தை கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கொண்டு கவிஞனுக்கே உரித்தான பாணியில் எழுதினார்.
“வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா..? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் என்னும் நினைவா.. உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள் உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா…”
போன்ற எழுச்சிமிகு பாடல்கள் மூலம் எளிய மனிதர்கள் படும் இன்னல்களையும். அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும்
அதிகார வர்க்கத்தினரின் திமிரையும் கேள்வி கேட்டவர். பெண் அடிமைத்தனம், மூடநம்பிக்கை, தீண்டாமை மற்றும் சாதி போன்ற கொடுமைகளையும் எதிர்த்துச் சாடியவர்.
பெண் கல்வி, பெண் விடுதலை போன்றவற்றைப் போற்றி அடிக்கடிப் பாடினார். தம் பாடல்களாலும், கவிதைகளாலும், கட்டுரைகளாலும் தமிழ்ப்பற்றை இளையோர் மனதில் விதைத்ததில் பெரும் பங்காற்றியவர் பாரதிதாசன் என்றால். அது மிகையாகாது.
உலகப் போது மறையாம் திருக்குறளின் பெருமையைத் தம் பாடல்களில் விளக்கிப் பாடியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், 86 நூல்களைத் தமிழுக்கு அளித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, பாண்டியன் பரிசு, இருண்ட எதிர்பாராத முத்தம். குறிஞ்சித்திட்டு, முல்லைக்காடு, விடுதலை வேட்கை போன்ற நூல்களாகும். இயற்கையின் மீதும் பறவைகளின் மீதும் மிகுந்த காதல் கொண்டதால், நான் நடத்திய இதழுக்குக் குயில் எனப் பெயரிட்டவர். எழுத்தாளர், கவிஞர், தமிழவிரியர், அரசியல் ஆளுமை, திரைக்கதாசிரியா, இதழாசிரியர் போன்ற பன்முகம் கொண்ட பாவேந்தர் இயற்கை கவிஞர், தமிழ்நாட்டு ரசூல் சம்சதேவ், பகுத்தறிவுக் கவிஞர், புதுவைக்குயில், புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி போன்ற பல புனைப்பெயர்களால் அழைக்கப்பெற்றவர்.
பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் அஞ்சல் தலை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவரது பெயரில் சிறந்த கவிஞர்களுக்கு இன்றும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருமதி பவ்யா இம்மானுவேல்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.