சூன் 2025
மக்களின் கண்ணீரும் மதிகெட்ட திமுகவின் கொண்டாட்டமும்
மதிப்பிற்குரிய தமிழ்நாட்டு திராவிட மாடல் முதல்வர் அவர்களே!
ஒரு சராசரி தமிழ்க் குடிமகனின் மனக்குமுறல்மிக்க கேள்விக்கு விடை சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் மக்கள் நலனுக்காகச் சில முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் இன்னமும் பல்வேறு கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு சதுரங்க விளையாட்டில் பலியிடப்படும் சிப்பாய்கள் போல மக்களின் நிலை இருக்கிறது.
🔹அரசு ஊழியர் போராட்டங்கள்
🔹பள்ளி மாணவர்களின் தற்கொலைகள்
🔹பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்
🔹எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அதீத விலையேற்றம்
🔹மதுவால் குடும்பங்கள் சீரழிதல்
🔹இளைஞர்களைக் கெடுக்கும் போதைப் பொருள்கள்
🔹கனிமவளக் கொள்ளை
🔹இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் திட்டங்கள்
இவ்வாறு மக்கள் தொடர் சிக்கல்களில் அல்லலுற்று கண்ணீர் வடிக்க, நீங்கள் ஒளிரும் விளம்பரங்களில் “தமிழக மக்கள் திமுகவின் நல்லாட்சியில் மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்று கொண்டாடுகிறீர்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? உண்மையில் மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய நிதி, இந்த வெற்று விளம்பரங்களுக்காக வீணாகிறது.
மதுவை தடை செய்ய வேண்டிய அரசே, அதிலிருந்து வரும் வருமானத்துக்காக, விற்பனை இலக்கு வைத்து விற்று மயக்கத்தில் மக்கள் வாழ்வதைச் சகித்துக் கொள்வது எவ்விதமான தலைமைத்துவம்? தலைமைக்குத் தகுதி இல்லாத வாரிசுகளைத் திணிக்கும் வழிப்பறி கொள்ளையர்கள், வாய்ச் சவடால் வீரர்கள், திராவிடத் திருடர்கள் தான் நீங்களும் உங்கள் கட்சியினரும் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளுகின்ற காலம் வந்துவிட்டது.
திராவிட மாடலின் முதல்வர் அவர்களே! மக்களாட்சியின் மாண்புகளையும் தத்துவத்தையும் மண்ணில் போட்டு புதைத்துவிட்டு, விலைக்கு வாங்கிவிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைக் கையில் வைத்து மறைக்கப் பார்க்கிறீர்களா? உங்களைப் போலச் செய்தி அரசியல் செய்யாமல், சேவை அரசியல் செய்கிற தமிழ்த்தேசியம் எனும் உன்னதமான கொள்கைக் கோட்பாட்டுடன் மக்களின் குரலாக இன்று இருக்கின்ற நாம் தமிழர் கட்சி, திறனற்ற திராவிடத்தையும் அறமற்ற ஆரியத்தையும் வீழ்த்தும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுவரைக்கும் சிரித்துக் கொண்டிருங்கள் உங்களது செய்தி விளம்பரங்களில்!
திரு. க. நாகநாதன்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.