spot_img

மறக்கக்கூடாத பேரூழிக்காலம் (தாய்நிலத்தில் தமிழினப் படுகொலை)

மே 2022

மறக்கக்கூடாத பேரூழிக்காலம் (தாய்நிலத்தில் தமிழினப் படுகொலை)

இனப்படுகொலை குழு என்பது முற்றிலுமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் செயல்பாடு. இது மனித இனங்களுக்கு இடையே காணப்படும் இயல்பான வேற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் பெரும்பான்மை மக்கள், மொழியின் அடிப்படையில் அல்லது நிறத்தின் காரணமாக அல்லது மதம் மற்றும் சாதி வேறுபாடுகளை கொண்டு, அதே நிலத்தில் வாழும் சிறுபான்மை மக்களை அழித்து ஒழிப்பது தான், இனப்படுகொலை. ஐநா மன்றம் 1951இல், இனப்படுகொலையை ஒரு இனக்குழுவின் மக்களைக் கொல்வது அல்லது உடல் மற்றும் ள ரீதியில் தீங்குகளை ஏற்படுத்துவது’ என்று வரையறுத்துள்ளது. இனப்படுகொலை என்பது மனிதப் படுகொலையை மட்டும் குறிப்பது அன்று: ஓர் இனத்தின் பாரம்பரியக் கலைகள், கலாச்சார விழுமியங்கள், பண்பாட்டு நடைமுறைகள், வழிபாடுகள், குடியிருப்புகள். தொழில் வளங்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் குறிவைத்து அழிப்பதாக இருத்தாலும், அது இன அழிப்பு தான். மனித சமூகம் நாகரீகம் அடைந்த பின்பு வரலாறு நிறைய இனப்படுகொலைகளைச் சந்தித்திருக்கிறது. 1915 முதல் 1920 வரை துருக்கியில் ஆர்மீனியர்களுக்கு எதிராக ந ந்த இனப்படுகொலை, 1994ல் ருவாண்டாவில் டூட்ஸி மற்றும் ஹூட்டு இளச்சிகளில் 8 லட்சம் பேர் கொல்லப்பட்ட இனப்படுகொளை ஆனால் இரண்டாம் உலகப்போர் தருணங்களில், ஜெர்மனியில் நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது தான், இந்த உலகம் கண்மிகப்பெரிய இனப்படுகொலை.

ஈழத்தில் தமிழினப் படுகொலை:

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாகக் குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், தேரடியாகச் கட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இல அழிப்பைக் குறிக்கும். குறிப்பாகத் தமிழர்களின் நியாயமான சிக்கல்களுக்கு எந்தவித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது. பொதுமக்களையும் பொருட்படுத்தாது, கொடும் போரில் குரூரமாக மக்களைக் கொன்றொழித்த படுபாதகச்செயல் அது. சற்றேறக்குறைய 60 ஆண்டுகளில் 1) ஸட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டதாகப் பொது ஊடகங்கள் தெரிவித்தாலும் கூட உண்மையில் உயிரிழப்பும், உறுப்பழிவும். உள்ளச்சிதைப்பும் உறுதியாக இதைவிடப் பன்மடங்கு இருக்குமென்பது திண்ணம். மனித வரலாற்றில் திட்டமிட்டுப் பல கட்டங்களாக நிகழ்ந்தவற்றுள் பெரியதும், தொடர்ச்சியானதும், மிக நீண்டதுமான இனப்படுகொலை, தமிழினப்படுகொலை தான்.

இலங்கையின் இனச்சிக்கல் தோற்றமும், தொடர்விளைவுகளும்:

டச்சுக்காரர்களுக்குப் பின்பு, இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஆங்கிலேயர் வசம் வந்ததும், அவர்கள் தங்கள் காலனி நாடுகள் எல்லாவற்றிலும் செய்தது போலவே, வளச்சுரண்டலை மட்டுமே முன்னிட்டு தேசிய இனங்களின் எல்லை வரையறைகள், புவியியல் பண்பாட்டு கூறுகள், அரசியல் சமூகத் தேவைகளைப் பொருட்படுத்தாமல், ஈழத்தின் மூன்று அரசுகளையும் தங்களின் நிர்வாக வசதிக்கென்று ஒரே அரசாக மாற்றினார்கள். வேண்டுமென்றே இனச்சிக்கல்களை வலிந்து உருவாக்க விரும்பிய ஆங்கிலேயர்கள், இலங்கையிலும் அந்தந்த தேசிய இனங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைத் தராமல், தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் பெரும்பான்மை சமூகமான சிங்களர்கள் மனது வைத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலையைத் திட்டமிட்டு உருவாக்கினார்கள். பெரும்பான்மைச் சமூகத்திற்கு எல்லா பொறுப்புகளையும் கொடுத்து விட்டு, முடிந்தால் தீர்த்துக்கொள் ! இல்லாவிட்டால் எங்களைப்போல் வன்முறையையும் சூழ்ச்சியையும் கையாண்டு கொள்! என்ற அனுபவப் பாடத்தையும் ஓதிவிட்டு, 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கி விட்டுச் சென்றார்கள்.

இன்றுவரை உலகின் பல அண் நாடுகளுக்கு இடையே நிகழும் எல்லைத் தகராறுகளுக்கும், உள்நாட்டில் நிலவும் தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல்களுக்கும் முக்கியமான காரணமே, இந்த ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க வெறிதான். இலங்கையும் இந்த நிலைக்கு விதிவிலக்காக இல்லை. இனமோதல் முற்றி விடுதலைக்குப்பின் கலவரமாக வெடித்தது. சிங்களத் தலைவர்கள் எல்லாவகையிலும் தமிழர்களின் குரல்வளையை நெறிக்கும் வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். அவர்கள் அசந்தாலும் புத்த மத குருமார்கள் “பெரும்பான்மைவாதம்” எனும் விஷத்தைத் திகட்டத் திகட்ட வலிந்து புகட்டினர். மதத்தை மட்டுமே முன்னிறுத்தி ஒரு நாடு ஆளப்படும் போது எப்படிப்பட்ட அராஜகங்களும், அநியாய உயிர் பலிகளும் நிகழும் என்பதற்கு இலங்கை உதாரணமாகிப் போனது.

இலங்கை குடியுரிமைச் சட்டம், 1948:

ஒரு நாடு அந்திய நாட்டிடமிருந்து விடுதலை அடையும் பொழுது அந்த நாட்டின் குடிமக்கள் யார்? என்பதை அறிந்து கொள்வது நியாயமானதுதான். 1948 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தக் குடியுரிமைச் சட்டத்தை சிங்கள தேசியவாதிகள், இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது இலங்கையின் மத்திய, மலைநாட்டுப் பகுதியில் இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக. பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை மறுத்து, அவர்களை நாடற்றவர்களாக மாற்றினார்கள். இந்தச் சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கில் மலையகத் தமிழர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர்.

சிங்களம் மட்டும் சட்டம், 1956:

1956ல் பண்டாரநாயக்க தலைமையில், இலங்கை அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட “சிங்களம் மட்டுமே சட்டத்தின் மூலம், அதுவரை இலங்கையின் ஆட்சி மொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70 சதவீத பெரும்பான்மைச் சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி, ஆட்சி மொழியாக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலமாக 

இன்னொரு சதியையும் சிங்களர்கள் நிறைவேற்றினார்கள். அதாவது அரசுப் பணிகளில் இருந்த அனைத்து தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். (தற்போதைய இந்தியாவில் இந்தியை அனைவரும் படிக்க வேண்டும் என்று திணிப்பது போல) தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராகத் தமிழர்கள் அகிம்சை முறையில் அறப்போராட்டங்களைத் துவங்கினார்கள். ஆனால் அவர்கள் சிங்கள் வன்முறை குழுக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையைத் தடுக்க, சிங்களக் காவலதுறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கொழும்பிலும், பிற இடங்களிலும் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் ஈழத்தமிழினப் படுகொலையில், முதலாவதாக நடந்த கொடிய வன்முறைச் சம்பவம் எனலாம். இந்த நிகழ்வு தமிழர்களின் எழுச்சிக்குக காரணமாகவும், மேலும் கொழும்புவாழ் தமிழர்கள் பலர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரவும், காரணமாக அமைந்தது. அன்று தொடங்கி இந்த நொடி வரை இலங்கையில் நடப்பவை, நாகரீகமடைந்த மனித இனம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாத மனங்களை இரணமாக்கும் படுபாதகச் செயல்களே, இதில் சில முக்கியமான துயர்மிகு நிகழ்வுகளை மட்டும் இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை, 1974:

தங்கள் தாய்மொழியாம் தமிழின் இலக்கியத் தொன்மை மீதும், அதன் இலக்கண அழகியல் மீதும், தமிழ் கற்றுத் தந்த அறத்தின் மீதும் தீராக்காதல் கொண்ட தமிழர்கள், இலங்கையில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் στοότη 19746 முடிவெடுத்தது. சிங்கள் அரசியல்வாதிகளுக்குக் கோபத்தை ஊட்டியது. இறுதித் தருணத்தில் தமிழ் மாநாடு நடக்கவிருந்த அரங்கத்திற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளிலிருந்து, தமிழறிஞர்கள் இலங்கை வருவதைத் தடுப்பதற்கு அவர்களுக்கு நுழைவிசைவுச் சீட்டு மறுக்கப்படுகிறது. ஆனாலும் தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவோம் என்று உறுதிபூண்ட தமிழ்த் தலைவர்கள், ஜனவரி மாதம் பத்தாம் நாள் அந்த மாதாட்டை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர் புகைக் குண்டுகளை இலங்கைக் காவல்துறையினர் வீசினார்கள். பின்னர் நடந்த துப்பாக்கி சூட்டில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழர்களின் தோதல் வெற்றியும், சிங்களர்களின் வெறியாட்டமும், 1977:

பின்னர் 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தோதலில், இலங்கை தமிழ்த் தேசியக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்ப் பகுதிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையொட்டி, தனிநாடு கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டு, மிகப்பெரும் வெற்றி பெற்றது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் வென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்தது. இந்த வெற்றியை சற்றும் எதிர்பாராதச் சிங்களர்கள் அனுராதபுரம், கொழும்பு போன்ற பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இதில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரசு விசாரணை தெரிவித்தது. ஆனால் மூவாயிரத்திற்கும் அதிகமாக தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சார்பற்ற ஊடகங்கள் கூறின. திருவிளையாடல் புராணத்தில் நக்கீரருக்கும், சிவபெருமானுக்கும் இடையிலான விவாதம் நடந்து, சற்றேறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் இருக்கலாம். வந்தவன் சிவன், இறைவன் என்று நக்கீரனுக்குத் தெரியாமல் இல்லை. இருந்தாலும் மொழிப்பற்றால் உந்தப்பட்டு, “நீ சிவனாக இருந்தாலும் சரி! உன் நெற்றிக்கண்ணைத் திறந்து என்னை சுட்டெரித்தாலும் சரி! உன் பாடலில் பிழை இருக்கிறது” என்று சொல்லக்கூடிய துணிவு நக்கீரருக்கு இருந்தது. மன்னன் புலவனைப் பார்த்து, “என்னை வாழ்த்திப்பாடு!” என்று சொன்னபோது, “மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ?” எனச் சொல்லி வாழ்த்திப் பாட மறுத்த கதைகளையும் நாம் அறிந்திருக்கிறோம். இப்படித் தமிழ் மொழி சிதைக்கப்படும்போது, இனம் அழிக்கப்படும்போது, தமிழினம் தன்னெழுச்சி பெற்று மேலே எழும்பும் என்பது வரலாறு கண்ட உண்மை.

தெற்காசியாவை முழுவதும் கட்டி ஆண்ட தேசிய இனத்தில் வீரர்களுக்கு என்ன பஞ்சமா? புறநானூறு பாடுமே “எழுந்தன படைகள்! அதிர்ந்தன நான்கு திசைகள்! அடங்கி ஏழு கடல்கள்! பிறந்தது தூசிப்படலம்! மறுப்பொடு மறுப்பெதிர் நெகுப்பொடு, தெருப்பெதிரென்று சுடர்கொடி தரித்திட, தளர்கொடி நிழற்கதுவே” அப்படி எழுந்தான் புறநானூறு கண்ட வீரன், தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தலைவன், மேதகு. வே.பிரபாகரன். முப்பது வருட அரசியல் வழி அறப்போராட்டங்கள் நமக்கான விடுதலையைச் சாத்தியப்படுத்தவில்லை என்று உணர்ந்தபோது, மாற்று வழி அதைச் சாத்தியப்படுத்தலாம் என்று அந்த வழியைத் தேர்ந்தெடுத்தான், நம் தலைவன். இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தொடர்ச்சியாகத் தமிழினப் படுகொலையும் மறுபுறம் நடந்தேறிக் கொண்டிருந்தது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு, 1981:

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதன் மக்களைக் கொன்றால் மட்டும் போதாது: அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டும், அறிவுசார் தேடல்களைச் சிதைக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நடந்ததுதான், யாழ்ப்பாண நூலக எரிப்பு. இந்நிகழ்வு இருபதாம் நூற்றாண்டின் இனக் கலாச்சார அழிப்புகளில், ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாண நூலகம் 97,000 அரிய நூல்களுடன், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. தமிழர்கள் பல தலைமுறைகளாகக் கட்டிக்காத்து வந்த அரிய ஓலைச் சுவடிகளையும் பழமையான பல பனுவல்களையும், இந்த நூலகத்திற்குத் தந்திருந்தார்கள். 1981 இல், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சிங்களர்கள் வைத்த தீக்கு எரிந்து சாம்பலானது யாழ்ப்பாண நூலகம் மட்டுமல்ல: தமிழர்களின் வரலாறு, இலக்கியத் தொன்மை, மருத்துவக் குறிப்புகள் மற்றும் அறிவியல் தரவுகள் போன்ற முக்கியமான மூல அறிவுவனங்களும் தான்.

கறுப்பு யூலை என்றழைக்கப்படும் கருப்பு ஜூலை, 1983:

1953 ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் நடந்த இந்தப் படுகொலை, தமிழர்களின் மனங்களில் என்றும் மாறாத காயத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த இன அழிப்பின் பாதிப்புகள், பின்பு பல ஆண்டுகள் வரை உணரப்பட்ட ஒன்று. இன்னும் சில ஏடுகள், கறுப்பு ஜூலை நிகழ்வை இனக்கலவரம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்திக் கூறுகிறார்கள். இனக்கலவரம் என்பது இரண்டு இனங்கள் அவர்களுக்குள் மோதிக்கொள்வது ஆனால் கறுப்பு ஜூலையில் நடந்தது ஒன்றும் அறியாத அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட இன அழிப்பு நிகழ்வு. இது ஒரு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அரச பயங்கரவாதம் படுகொலை. போரில் இறந்த பதிமூன்று சிங்கள இராணுவ வீரர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில், நடு வீதியில் வைத்து இறுதி அஞ்சலி செய்ய வேண்டும் என்று அரசு முடிவு எடுக்கிறது. அதற்குள் சிங்கள அரசு 3000 அடியாட்களைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

பொதுவெளியில் தமிழர்களால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு அரசு மரியாதை என்று மக்களை ஒரு கொதி நிலையில் வைத்து, அவர்களின் கோபத்தை அப்பாவி தமிழர்கள் மீது ஏவி விட்டார்கள். அரசு எந்திரம் அத்தனை பொறிகளையும் கனகச்சிதமாக ஆயத்தம் செய்தது. முதலில் கொழும்பின் தாகலிங்கம் ஸ்டோர்ஸ்” என்ற தமிழ் மளிகைக் கடை தாக்கப்பட்டது. பின்னா நடந்த வன்முறையில், தமிழர்களை வெட்டிக் கொன்றார்கள்: நிர்வாணப்படுத்தித் தீக்கிரையாக்கிக் கொலை செய்து அதைக் கண்டு மகிழ்ந்தார்கள், காடையர்கள். தமிழர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. காவல்துறை, தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்த வன்முறையை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் நடந்த இந்தக் கலவரத்தின் முடிவில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்: 5000 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன: 8000 வீடுகள் குறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன என்று கணக்கிட்டு இருந்தார்கள். இன்றைய பண மதிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் பல ட்ரில்லியன் டாலர்களுக்கு நிகரான தமிழர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்படி அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நாதியற்ற நிலையில் இருந்த மக்களைப் பார்த்து அந்த நாட்டு அதிபர் கொள்னான், “போர் என்றால் போர்! சமாதானம் என்றால் சமாதானம்!”. அழிந்து கிடந்த மக்களை பார்த்து அழித்தவன் விட்ட அறைகூவல் அது.

தியாக தீபம் திலீபனின் மரணம், 1987:

பார்த்திபன் ராசையா எனும் இயற்பெயர் கொண்ட திலீபன், யாழ்ப்பாண நகரத்தின் ஊரெழு என்ற கிராமத்தில் பிறந்தவர். அமைதி வழி அறப் போராட்டங்கள் மூலமாகத் தீர்வுகளை எட்ட முடியும் என்ற அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து கோரிக்கைகளை இந்திய அமைதிப் படையினரிடம் வைத்துவிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார்.

1. மீள்குடியமர்வு என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2. சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்.

3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4. ஊர்க்காவல் படையினகுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.

5.தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும்  நடவடிக்கைகள்  முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

நீரும் சோறும் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர், 1967 செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி ஆரம்பித்தார். புத்தனின் பல்லைப் பாதுகாத்த மனிதன், அவன் சொல்லை விட்டுவிட்டான் என்பார்களே! அதுபோலக் கத்தியின்றி, இரத்தமின்றி அகிம்சையால் விடுதவை அடைந்தோம் எனப் பீற்றிக்கொள்ளும் இந்தியாவின் அகிம்சை திலீபனிடம் தோற்றுப்போனது. உண்ணாவிரதம் தொடங்கி 12 நாட்கள் கழித்து செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி திலீபனின் ஆவி தமிழுடனும், தமிழர் வரலாற்றுடனும் கலந்தது. அவர் மறைந்த பின்பு, புலிகள் அமைப்பில் ‘லெப்டினண்ட கேணல் திலீபன்” என்ற பதவி வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995:

1995 ஆண்டில் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி, பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணி அடித்தபோது. உணவை உண்டு விட்டுப் பிள்ளைகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் புக்காரா விமானங்கள், குண்டுகளைக் கண்மூடித்தனமாக வீசின. நடப்பது என்னவென்றே அறியாத மாணவர்கள், மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டால் தப்பித்துவிடலாம் என்று எண்ணி மரத்தின் கீழே பதுங்குகிறார்கள். அடுத்த வெடிகுண்டு மரத்தின் மேலே விழுந்து 39 மாணவர்கள் உடல் சிதறிப் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் 6 வயது குழந்தை முதல் 10 வயது சிறுவர்கள் வரை அடங்குவர். அதே போன்ற ஒரு நிகழ்வு, செஞ்சோவை வெடிகுண்டுத் தாக்குதலில் நடந்தது. செஞ்சோலை பெண்கள் பாடசாலையின் மீது விமானம் தாக்கி 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் ஊடகங்கள் இந்தச் செய்திகளை வெளியிட முடியாத அளவுக்கு அரச பயங்கரவாதம் அவர்களைத் தடுத்தது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள், 2009:

ஒரு போர் எப்படி நடக்க வேண்டும் என்று சாவதேச சமூகம் ஏற்றுக் கொண்ட நெறிமுறைகள் அனைத்தையும் மீறி குறைந்தபட்ச மனிதத் தன்மையே இல்லாமல் தமிழாகளைக் கொன்றொழித்த படுபாதக நிகழ்வுகள் தாம், இந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலைகள். 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா மன்றம் அறிவிக்கிறது. ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சார்பற்ற ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உச்சகட்டப் போர் நடந்து கொண்டிருந்த தருணம், திடீரென்று ஒரு பகுதியைப் பாதுகாப்பு வளையம் (No fire Zone) என்று சிங்கள அரசு அறிவிக்கிறது. பொதுமக்கள் அந்தப் பகுதிக்குள் வந்தால் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கிறது. சிங்களர்களின் பசப்பு வார்த்தையை நம்பி இவட்சக்கலாக்கானத் தமிழர்கள் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நிலப்பரப்புக்கு, அதாவது கொலைக்களத்திற்குத் துரத்தப்பட்டார்கள். காயம்பட்ட தமிழாகளுக்கு மருத்துவ உதவி வழங்க, தற்கால மருத்துவமனை ஒன்றை ஐ.நா நிர்வாகிகளும் ஏற்படுத்தி இருந்தார்கள். அடுத்த சில நாட்களில் அந்த பாதுகாப்பு வளையத்திலிருந்த மக்கள் மீதும், ஐநா மன்றம் அமைத்திருந்த தற்காலிக மருத்துவமனை மீதும் கண்மூடித்தனமாகக் குண்டு மழை பொழிந்தார்கள், சிங்கள ராணுவத்தினர். நடப்பது என்னவென்றே தெரியாமல் கண்மூடித் திறப்பதற்குள் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், அப்பாவித் தமிழர்கள் என ஆயிரக்கணக்கானோர்  துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இன்னும் சில நாட்கள் கழித்து கடற்கரை ஓரத்தில், முன்பை விடச் சிறிய ஒரு பாதுகாப்பு வளையத்தை மீண்டும் அமைத்தது, சிங்கள அரசு, சற்றேறக்குறைய 2 லட்சம் தமிழர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைகிறார்கள். அப்போது அந்தப் பாதுகாப்பு வளையத்தில் நடந்ததுதான் பெரும் அவலம், அனைத்துலகமே கண்டு கொள்ளாத அல்லது கண்டுகொண்டும் பொருட்படுத்தாதப் படுபாதாச் செயல் அது. அந்தப் பகுதிக்குள் வேண்டுமென்றே உணவும், மருந்தும் சென்று விடாமல் தடுக்கிறார்கள், சிங்கள இராணுவத்தினர். “மனிதநேய உதவிகளைச் செய்யுங்கள்” என்று ஐநா மன்றம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. அழுகிற குழந்தைக்குப் பால் இல்லை: பசித்தால் அடுத்தவேளை உண்பதற்கு உணவில்லை என்ற நிலைக்குத தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டது.நீரை மட்டும் குடித்து விட்டு, உயிர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த தாளில் பேரிடியாக வந்து இறங்கியது. சிங்கள இராணுவத்தின் வெடிகுண்டு வீச்சு, கஊரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடந்த அந்தத் தாக்குதல்களில், ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். “மகனே கண்திறந்து அம்மாவின் முகத்தைப் பாரப்பா!” என்று அழும் ஒரு தாய். “ஐயோ! என்ற பொடியன்ட முகத்தைக் காண கிடைக்கேலையே” என்று முகம் சிதைந்து இறந்து கிடக்கும் மகனை, மார்போடு அணைத்துக் கொண்டு அழும் இன்னொரு தாய். காயம்பட்ட தன் மகளைக் கரங்களில் ஏந்திக் கொண்டு, ஐநா மன்றம் அமைத்த தற்காலிக மருத்துவமனைக்கு ஓடுகிறார், ஒரு தந்தை. ஆனால் போகும் வழியிலேயே குழந்தை இறந்து விடுகிறது.

ஒவ்வொரு நிமிடமும் எந்தவித முன்னறிவிப்புமின்றி சாவு தமிழர்களைத் துரத்திக கொண்டிருந்தது. இது நடந்து சில நாட்களில் ஒரு மைல் நீளத்திற்கு அடுத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. மீண்டும் அதே போன்று பாதுகாப்பு வளையத்தின் மீது தாக்குதல், வீதி முழுவதும் தமிழர்களின் பிணங்கள்: சாலை முழுவதும் தமிழர்களின் இரத்த ஆறு. காயம்பட்டவர்களை மீட்கிறோம் என்று அழைத்துச் சென்று, நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்புறம் கட்டி துப்பாக்கியைத் தலையில் வைத்துச் கட்டு மூளையைச் சிதறடித்துக் கொன்றார்கள், சிங்கள் இராணுவத்தினர். தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாவியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொங்கைகள் அறுக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். வரலாறு காணாத ஒரு பெரும் இன அழிப்பு, சர்வதேசச் சமூகத்தின் முன்பும், ஐநா மன்றத்தின் முன்பும், செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பும் நடந்தது இன்று வரையிலும் கூட நடந்து வருகிறது.

மானத்தமிழ் மக்கள் மனதிலிருந்த வேண்டியவை:

தமிழ்த்தேசியவாதிகளிடம் நான் சொல்லிக் கொள்வது இதுதான். எந்தத் தருணத்திலும் நமக்குள் முரண்கள் எழுந்து நாம் வேறுபடும்போதும், கொடுரமாகப் படுகொலை செய்யப்பட்ட நம் இனத்தை நினைத்துக்கொள்ளுங்கள். காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது பாருங்கள்! யாரைத் தலைவன் என்று சிங்களர்கள் கொண்டாடினார்களோ, அவனது உருவ பொம்மையை இன்று காலையில் வைத்து எரிக்கும் சூழல்?!?! எவன் நமது மக்களை அகதிகளாக வெளியேற்றினானோ, அவனது பிள்ளைகள் இன்று அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சமடைகிறார்கள்! எந்த வாய்கள் நம் தேசியத் தலைவரைத் தூற்றியதோ, அதே வாய்கள் இன்று ஒருவேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் நமக்கு உணவாவது அளித்து இருப்பார்: இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைமைக்குச் சென்று இருக்காது என்று சொல்லுகின்றன. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்களே! தெய்வம் கொல்லும்! உறுதியாய்க் கொல்லும்! ஏனெனில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது சிலம்பின் வாக்கு! அது பொய்யாகுமா?

திரு. அருண் தெலஸ்போர் 

செய்தித் தொடர்பாளர், 

செந்தமிழர் பாசறை, வளைகுடா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles