ஏப்ரல் 2023
மாவீரன் தீரன் சின்னமலை
பிறப்பிடம்:
ஈரோடு மாவட்டம் மேலப்பாளையம். ஏப்ரல் 17, 1756 பிறந்தார்.
சிறப்புப் பணிகள்:
கொங்கு தலைவர், பாளையக்காரர் மற்றும் சிறந்த இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்பு சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
ஆரம்பகால வாழ்க்கை வரலாறு:
பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் புலவர்களை ஆதரித்து, வாயடைக்கும் அளவிற்கு அவர்களின் கவி மற்றும் புலமைக்காகப் பாராட்டி பரிசுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீர்த்தகிரி கவுண்டர் அவர்கள், அவர்களின் மரபு வழக்கத்தால், இளம்பருவத்திலே ‘தீர்த்தகிரிச் சர்க்கரை என்றும் அழைக்கப்பட்டார்.
கலை ஆர்வமும் பயிற்சியும்:
தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள் பயிற்சி, குத்துச்சண்டை, கோலாட்டம், வீல்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை, நாட்டுப்புற இசை நடனங்கள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வீரராக உருவெடுத்தார். பல தற்காப்பு கலைகளைக் கற்றிருந்தார். பலருக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கட்டளையும் பிறப்பித்தார்.
தீரன் சின்னமலை பெயர் காரணம்:
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கோங்கு நாடு, மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்குப் பகிர்ந்தளித்தார். இதைத் தடுத்த தண்டலசசரர்கள் கேட்டபோது. “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
திப்பு சுல்தானுடன் கூட்டணி:
தீரன் சின்னமலை வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் வளர்த்தது. இதைச் சிறிதனவும் விரும்பாத சின்னமலை, அவர்களைக் கடுமையாக எதிர்த்தார். அச்சமயத்தில், அதாவது டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டில் மைசூர் மன்னர் ஐதர் அலி மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேரோடு வெட்ட எண்ணினார். இதுவே, தீரன் சின்னமலை அவர்களுக்கும் சாதகமாக அமைந்தது. ஆகவே, நண்பர்களோடு அவர் ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கைக்கோர்க்க முற்பட்டார். இந்தக் கூட்டணியை சுற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்களை அச்சமடைய வைத்தார்.
மாவீரர் இறப்பும் அரசமரியாதையும்:
ஆங்கிலேயர்கள் பலரையும் பல்வேறு தொல்விக்குள்ளாக்கி தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை, நேரடியாக எதிர்க்க முடியாத காரணத்தால் குழச்சி மூலம் வீழ்ந்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரர் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். கைது செய்து அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்கும் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார்.
நினைவஞ்சலி
தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்னது. இது மாவிரணை எஞ் ஞான்றும் நினைவூட்டும் என்றாம் மீசையாகாது.
முடிவுரை:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 31 ஆம் தேடு 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசின் தபால் தந்தி நலவல் தொடர்புத்துறை, ‘தீரன் உள்ளமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிட்டது. அச்சம் என்பது மடமையடா…!!
அஞ்சாடை தமிழர்கள் உடைமையடா….!!
தமிழ்நாட்டைத் தமிழர் ஆளவேண்டும் என்று வீர முழக்கமிடுவோம்…!!
வீழ்வது நாமாக இருந்தாலும்…!!
வாழ்வது நம் தமிழாக இருக்க வேண்டும்.
வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கம்…!!
தோல்விகளைக் கண்டு பயந்து விடாதீர்..!!
ஒருபோதும் துவண்டு விடாதீர்…!!
இன்று நாம் தமிழர் பிள்ளைகளின் மனதில் விரமான தமிழ்த் தேசிய விதைகளை இடுங்கள் போதும். அவை பெருமரமாகும்போது நமக்கு வெற்றி நிச்சயம்…!! இனம் ஒன்றாவோம்…! இலக்கை வென்றாவோம்…!!
திரு. சி.தோ.முருகன்,
செந்தமிழர் பாசறை – குவைத்.