மே 2022
யார் தீவிரவாதிகள்?
தீவிரவாதிகள் என்றால் இத்தனை கட்டமைப்புகள் தேவையிருந்திருக்குமோ?
இராணுவக் கட்டமைப்புகள்:
1. இம்ரான் பாண்டியன் படையணி.
2. ஜெயந்தன் படையணி.
3. சார்லஸ் அன்றனி சிறப்புப் படையணி.
4. கிட்டு பீரங்கிப் படையணி.
5. குட்டிச்சிறி மோட்டார் படையணி.
6. இராதா வான்காப்புப் படையணி.
7. சிறப்பு உந்துகணை செலுத்துப் படையணி.
8. விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
9. சோதியா சிறப்புப் படையணி.
10. அன்பரசி படையணி.
12. ஈரூடகப் படையணி.
12. குறி பார்த்துச்சுடும் படையணி.
12. சிறுத்தைப் படையணி.
14. எல்லைப் படையணி.
15. துணைப் படையணி.
15. பொன்னம்மான கண்ணிவெடிப் படையணி.
7. ஆயுதக்களஞ்சியச் சோக்கைப் பிரிவு.
18. பாதுகாவலர் பிரிவு.
19. முறியடிப்புப் பிரிவு.
20. கேப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
21. ஆழ ஊடுருவும் படையணி.
22. உந்துருளிப் படையணி.
23. கடற்படைகள்.
24. கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
25. கடல் வேவு அணி.
26. சார்லஸ் இறப்பு அவரி.
27. அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்)
28. சுலோசன ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்)
29. கடற்சிறுத்தைச் சிறப்பு அணி.
30. சங்கா படையணி.
31. வசந்தன் படையணி.
32. சேரன் படையணி.
33. பாக்கியம் ஆழ்கடல் தாக்கும் படையணி.
34. வான் படை.
35. கரும்புலிகள்.
36. புலனாய்வுத் துறை.
37. உள்ளகப் புலனாய்வுப்பிரிவு.
38. வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
39. வேவுப் பிரிவு.
40. களமுனை முறியடிப்புப் பிரிவு.
41. களமுனை மருத்துவப் பிரிவு.
42. கணினிப் பிரிவு.
43. பொறியியல் பிரிவு.
44. விசேட வரைபடப் பிரிவு.
நடுவப்பணியகம்
45. அரசியல் துறை (பரப்புரைப் பிரிவு
கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
46. தமிழீழப் படைத்துறைப் பள்ளி.
47. ஆயுத உற்பத்திப் பிரிவு.
48. மின்னணுவியல சிறப்பு உதவிப் பிரிவு.
49. மாவீரர் பணிமனை.
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை, உலகத்தில் எந்தவொரு விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை. ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப்புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், முழு பலத்தினாலும் தேசிய இராணுவமாக வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். ஆரம்ப காலங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பாக மட்டுமே இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டுவந்து, படையணிகளுக்கும் தனித்தனி சீருடை களுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கொப்பாக இருந்தார்கள். எல்லா நாடுகளிலும் முப்படைகள் இருந்தன. விடுதலைப்புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படை தான், கரும்புலிகள்.
எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ள முடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான கரும்புலிகள், விடுதலைப் புலிகளிடமிருப்பது அவர்களுக்கு சிறப்பையும் அதிக பலத்தையும் கொடுத்திருந்தது. அந்தச் சின்னஞ்சிறு தேசத்தில், எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு இனத்தின் மக்கள் படையுடன், முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால், அங்கே தமிழர்களின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும். அன்றும் இன்றும் என்றும் உலக வரலாற்றில், தமிழருக்கென்று ஒரு குணம், தமிழருக்கென்று ஒரு வீரம் அழியாமல் இருந்து கொண்டே இருக்கின்றது. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இவ்வாறு தமிழர்களின் வீரத்தை அறத்தோடு உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப்புலிகளா தீவிரவாதிகள்???
திருமதி. தமிழ்மொழி ஆயீஷா சுல்தான்,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – பகரைன்.