ஏப்ரல் 2023
மீளும் தமிழ்த்தேசியம்!
பற்றிப்படர முள்வேலி மட்டுமே இருந்தாலும் கூடத் தளராமல் வளரும் சிறு செடியைப் போல், பகைவர் பல முனையில் நின்ற போதும் தமிழும் தமிழினமும் மேதுவாக மீண்டு, முன்னினும் செழித்தோங்கும் நிலையில் உள்ளது.
நம் தமிழின் வரலாற்றைத் திருடியே பழக்கப்பட்ட ஆரியமும் திராவிடமும் தொடர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும் ஆய்வு முடிவுகளும் தொல்லியல் ஆராய்ச்சிகளும் நம் தமிழன்னைக்குச் சாதகமாகவே இருந்து வருகின்றன.
இடையில் ஒரு சிலரால் தமிழின் மாண்பு மழுங்கடிக்கப்பட்டு வந்தாலும் இன்றைய பல இளைஞர்கள், தமிழின் தொன்மையையும் பெருமையையும் உணர்ந்து கற்றாய்ந்து தமிழ் மரபைத் வாழ்க்கையில் பிரதிபலித்தும் கொண்டிருக்கின்றனர். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் தங்கள் குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயரை இட்டும், குலதெய்வங்களுக்கு வழிபாட்டில் முன்னுரிமை வழங்கியும் வருகின்றனர். தமிழ்மொழி, உலகின் தேர்ந்த செம்மொழியாக உள்ளது. இன்றைய தலைமுறை தமிழின் மகத்துவத்தை அறிந்து அதன் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளையும் முடித்தவரை முன்னெடுத்து வருகிறது.
ஆகச் சிறந்த விழுமியங்களை வாழ்வியலாகக கொண்டிருந்த தமிழினம் இடையில் ஆரிய திராவிட சூழ்ச்சிகளினால் பல இன்னல்களைச் சந்தித்து பின்னடைவடைந்தது. ஆனால் இன்றோ நிலைமை வேறு.
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அனைத்து உயிருக்குமனை அரசியல் புரட்சி, சீகிய பல மாற்றங்களைச் சமுதாயத்தில் நிகழ்த்தியுள்ளது. செயற்கை உரங்களையும், அதிநவீன பூச்சிக்கொள்லி மருந்துகளையும் கொண்டு விவசாயம் செய்த தமிழர்கள் சிந்திக்கத் தொடங்கியதோடு செயலாற்றவும் ஆரம்பித்து விட்டார்.
விளைவு இன்று மீண்டும் இயற்கை விவசாயம் பின்பற்றப்படுவதோடு, அரிய வகைப் பயிர்களும் மரபணு மாற்றப்படாத விதைகளும் தினந்தோறும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வகுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் இருந்து சிறு குறு வியாபாரிகளும் இன்று தன்னிச்சையாக புத்துணர்வோடு இயங்கத் தொடங்கியுள்ளனர். வேறு நாடுகளில் வசித்து வத்த தமிழ்மக்கள் பலரும், தற்போது உள்ளூர்ச் சிறப்பை உணர்ந்து தாய் மண்ணுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தாய்மொழியையும் தாய் மண்ணையும் தேசித்து தமிழ் மரபு வாழ்னீமலில் தம்மை அங்கமாக்கிக் கொண்டு வருகின்றனர். அதனால் தமிழ் இனி மெல்ல மேலோங்கி வளரும் என்பதில் ஐயமில்லை. பண்பாடு மற்றும் கலைகளின் வளர்ச்சியும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினரின் அரசியல் விழிப்புணர்வே இதற்கு முக்கிய காரணம், தமிழ் இலக்கியங்கள் மக்களால் வாசிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. பல்லுயிர் ஓம்புதல் என்ற வாக்கிற்கேட்ப அனைத்து உயிர்களையும் பேணிப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழர்களின் மரபான காதல், வீரம், அறம் எல்லாம் முடிந்த கதை என்றில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழினம் மீண்டு கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இன்றைய இளைய தலைமுறை ஒரு சிறந்த உதாரணமாகும்.
திருமதி இ.வயலெட் சுகந்தி,
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்,
செந்தமிழர் பாசறை – குவைத்.