spot_img

இன்றைய ஊடகங்கள்

செப்டம்பர் 2022

இன்றைய ஊடகங்கள்

தமிழனை திராவிடன் (அ) இந்து என்பது!
திராவிடன் (அ) இந்துவை தமிழன் என்பது!!
திராவிடத்தின் கட்டுக்கதையை வரலாறு என்பது!
தமிழினத்தின் வரலாற்றை கட்டுக்கதை என்பது !!

தமிழ்த்தேசிய பற்றாளனை இனஎதிரி என்பது!
இனஎதிரியை தமிழ்த்தேசிய பற்றாளன் என்பது!
தமிழினத் துரோகியை தலைவன் என்பது!
தமிழினப் போராளியை தீவிரவாதி என்பது!

அழிவுத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்பது!
வளர்ச்சித்திட்டத்தை அழிவுத்திட்டம் என்பது!
வங்கியில் திருடியவனைக் கொள்ளைக்காரன் என்பது!
வங்கியைத் திருடியவனை பணக்காரன் என்பது!

விளம்பரத்தில் சூதாடினால் வாழ்வு என்பது!
செய்தியில் சூதாடியதால் சாவு என்பது !
விளம்பரத்தில் ஆக்கிரமிப்பை வீட்டுமனை என்பது!
செய்தியில் வீட்டுமனையை ஆக்கிரமிப்பு என்பது!

விளம்பரத்தில் நீட்தேர்வால் வாழ்வு என்பது!
செய்தியில் நீட்தேர்வால் சாவு என்பது!
விளம்பரத்தில் -துரித உணவை நல்லது என்பது!
செய்தியில் துரித உணவை தீது என்பது!

விளம்பரத்தில் – போலி மருந்தை நல்லது என்பது!
செய்தியில் – போலி மருந்தை தீயது என்பது!
திரையில் போராடினால் புகழ்வது!
தரையில் போராடினால் இகழ்வது!

தன்பிழைப்பிற்கு அரசியல் செய்பவனை புகழ்வது!
தன்இனத்திற்கு அரசியல் செய்பவனை இகழ்வது!
சாதி வெறிகொண்ட திராவிடனை புகழ்வது!
இனப் பற்றுகொண்ட தமிழனை இகழ்வது!

தமிழ்மொழியை வஞ்சித்தவனை புகழ்வது!
தமிழ்மொழியை வாழவைத்தவனை இகழ்வது!
ஆரிய திராவிட அட்டகத்தி சண்டையை புகழ்வது!
ஆரியதமிழின வாள் சண்டையை இகழ்வது!

பணத்தைக்கொண்டு வாக்கைப் பெற்றால் புகழ்வது!
கருத்தைக்கொண்டு வாக்கைப் பெற்றால் இகழ்வது!
தமிழர்களை குடிக்கவைத்த திராவிடனை புகழ்வது!
தமிழர்களை படிக்கவைத்த தமிழனை இகழ்வது!

தன்குடுப்பத்திற்கு உழைத்த திராவிடனை புகழ்வது!
தன்நாட்டிற்கு உழைத்த தமிழனை இகழ்வது!
பெண்களை திராவிட மேடையில் ஆடவிட்டால் புகழ்வது!
பெண்களை தமிழர் மேடையில் முழங்கவிட்டால் இகழ்வது!

ஆணுக்கு பெண் சமம் என்றால் புகழ்வது!
ஆணும், பெண்ணும் சமம் என்றால் இகழ்வது!
பெண்ணுக்கு சொத்தில் சரிபாதியென்றால் புகழ்வது!
பெண்ணுக்கு ஆட்சியதிகாரத்தில் சரிபாதியென்றால் இகழ்வது!

நடிப்பவனின் பெருமைக் குரலை திணிப்பது!
துடிப்பவனின் வறுமைக் குரலை மறைப்பது!
ஆட்சியாளர்களின் வீண்விளம்பரத்தை திணிப்பது!
வாக்காளர்களின் உரிமை போராடத்தை மறைப்பது!

வாய்வியாபாரிகளின் கருத்தை திணிப்பது!
சமூகப்பற்றாளனின் கருத்தை மறைப்பது!
விடுதலை நாளில் நடிகர்களின் திரைப்படத்தை திணிப்பது!
விடுதலை நாளில் ஈகியர்களின் ஈகத்தை மறைப்பது!

பொழுதுபோக்கு நிகழ்வை மக்களிடம் திணிப்பது!
முற்போக்கு நிகழ்வை மக்களிடம் மறைப்பது!
சமூகத்திற்கு தேவையற்ற செய்தியை திணிப்பது!
சமூகத்திற்கு தேவையான செய்தியை மறைப்பது!

திராவிடத்தின் கருவாட்டுச்சாம்பாரை முற்போக்கென்பது!
தமிழ்த்தேசியத்தின் தனித்துவத்தை பிற்போக்கென்பது!
திராவிடத்தின் திருமணம் கடந்த உறவை முற்போக்கென்பது!

தமிழ்த்தேசியத்தின் அறநெறி வாழ்வை பிறப்போக்கென்பது!
வாக்கிற்கான இலவசத் திட்டத்தை முற்போக்கென்பது!
வாழ்விற்கான உழைக்கும் திட்டத்தை பிற்போக்கென்பது!

திரு. க.குப்புசாமி,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles