நவம்பர் 2022
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
அப்பன் முருகனுக்கு ஆறுபடை…
மேதகு பிரபாகரனுக்கும் பிசகின்றி ஆறுபடை…
அந்த ஆறு படையின் அருமையை
நறுக்கென்று சொல்வேன் இங்கே…
சப்பாத்துக்கு ஒருபோதும் அழுததில்லை ஏன்…?
பாதமில்லாதவனும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருப்பதால்…
ஒழுக்கம் பேணினால் உண்டு உய்வதற்கு உபாயம்…
ஒழுக்கம் தவறினால் உயிருக்கே அங்கு அபாயம்…
மது மாது சூதில்லா இராணுவம் இல்லை இப்பாரினிவே…
பொடி பீடி குடி இல்லை இப்படைதனிலே….
தரைப்புலிப்படை இனத்திற்காக ஓடும் கூட்டமாதலால்
கடற்புலிப்படை கண்டிக்குளம் கடல் நீர்பரப்பை
சுண்டச் செய்யும் ஆற்றல்…
அங்கு நுழையும் எதிரியின் நாவாயோ போகும் பீற்றல்…
வான்புவிப்படை கட்டுநாயக்க தளத்தை
கட்டுக்குலையச் செய்து, எதிரி ரடாரின்
கண்களைக் குத்தி பத்திரமாய்
தரையிறங்கிய தந்திரம்…
கரும்புலிப்படையோ ஒங்கிலையும்
மிஞ்சம் – அறிவுக் குறியீட்டில்’ இப்படையே
வெல்லும் படையொன்று எது இப்பாரினிலே…
இப்படை தோற்கின்… எப்படை வெல்லும்…?
திரு. இரா.சாந்தகுமார்,
ஆன்றோர் அவை, செந்தமிழர் பாறை – குவைத்.