மே 2025
உரிமைகள் மீட்க ஒன்றிணைவோம்!!!
உரிமைகள் காத்திட
கரங்களும் உயரட்டும்!
உழைப்பவர் வாழ்வு
தரணியில் சிறக்கட்டும்!
எளியோரை வதைக்கும்
வலியோர் ஒழியட்டும்!
ஏற்றத் தாழ்வில்லா
சமுதாயம் பிறக்கட்டும்!
சமத்துவங்கள் மலர்ந்திட
சட்டங்கள் இயற்றுவோம்!
சதிகாரக் கூட்டத்தைக்
கூண்டோடு அகற்றுவோம்!
திசையெட்டும் உரிமைக்
குரலும் ஒலிக்கட்டும்!
தீண்டாமை இல்லாத்
தேசமும் மலரட்டும்!
அன்னைத் தமிழ்நிலத்தை
ஆள்பவர் யாரோ?
ஆதிக்குடிகளின் அதிகாரத்தைப்
பறித்தவர் எவரோ?
உறுதிகொண்ட நெஞ்சோடு
உயர்த்திடு கரங்களை!
உணர்வுகொண்ட உள்ளத்தோடு
காத்திடு உரிமைகளை!
நயவஞ்சகர் மறைந்து
நல்லவர்கள் வெல்லட்டும்!
நாம்தமிழர் ஆட்சியது
நாடெங்கும் பரவட்டும்!
திரு. பா. வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.