மே 2025
உரிமையை மீட்கும் புலிக்கொடி
திராவிடக் கட்சிகளுக்கு
நாம் கொடிபிடித்தோம்!
அதிகாரத்தை ஏன்
தமிழா நாம் விடுத்தோம்?
தமிழா கூலிக்குப்
போட்டாய் உனது வாக்கை!
திராவிடம் தனதாக்கியது
தமிழர் நாட்டை!
தமிழா அரசியலில்
ஒதுக்கப்பட்ட இனமானோம்!
திராவிடச் சூழ்ச்சிக்கு
நாள்தோறும் பலியானோம்!
பிடிப்பிழந்தத் தமிழினமே
பிழைத்துக்கொள்!
இனியெனும் நீயும்
விழித்துக் கொள்!
இதோ
தமிழர் கொடி!
தலைவன் தந்த
புலிக்கொடி!
இதை மட்டும்
உயர்த்திப் பிடி!
உயிரனைய உரிமையை
மீட்கும் கொடி!
சீமானும் தம்பிகளும்
தூக்கும் கொடி!
நாம் தமிழர்
கட்சியின்
உரிமைக்கொடி!
தமிழினமே
உணர்வாய்ப் பிடி!
உயர்த்திய கையில்
உறுதியோடு பிடி!
தமிழராய் ஒன்றிணைவோம்
இறுகப் பிடி!
தமிழருக்கு இதுவே
இனி விடியல்கொடி – இது
நாம் தமிழரின்
வெற்றிக் கொடி!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.