செப்டம்பர் 2022
உறுதியாய் இரு!
இன்பம் என்னடா துன்பம் என்னடா தூக்கிக்கொண்டு போகும் போது ஏதுமில்லடா!
கீழ என்னடா மேல என்னடா துரும்புகூட பல்குத்த உதவும் பாருடா! கிழிஞ்ச துணிகூட மேல பறக்குது பாருடா
பயனுள்ள உலகத்திலே படிப்பதற்கு கோடியுண்டு! பார்க்கின்ற பார்வையிலே பாதை மாறிப் போவதுண்டு!
மண்ணில் விதை மறைவது உண்டு! மாற்றத்தோடு எழுவது உண்டு! மனசை மாத்து மாற்றம் உண்டு! மறைந்த பாதை திறப்பதுண்டு!
சொல்லாலும் வில்லாலும் சேர்த்துவைத்த செல்வமெல்லாம் சொல்லாமல் ஒரு நாள் போவோமே எல்லோரும்!!
எடுக்கின்ற காரியத்தில் எள்ளளவும் மாறாதே! கையில் எடுக்கும் முன்னே யோசிக்க தவறாதே!
எந்த வலி வந்தாலும் உண்மை வழி மாறாதே! உறுதியோடு போராடு உயர்வு வந்து சேர்ந்துவிடுமே!!
காலத்தை மாற்றிடவே நாம் கருவுற்று இங்கு வந்தோம்!! மக்கள் கண்ணீரை துடைத்திடவே நாம் தமிழனாய் இணைந்து வந்தோம்!
சொந்த மண்ணை காத்திடவே நாம் சுவர்க்கம் வரை போகலாமே! சொற்ப ஆசை என்ன செய்யும் சுதத்திசதாகம் நம்மை வெல்லச் செய்யும்!
வந்தாரை வாழ வைத்தோம் இன்றும் வடவரயே ஆள வைத்தோம் வந்த வழி மறந்து விடாமல் தமிழ் தந்த வழி வாழ்ந்திடுவோம்!!
வள்ளலார் மாணவன் திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.