சூலை 2025
உலாப் போகும் மேகங்கள்
வான்வெளியில் உலாப் போகும் மேகங்களே!
மான்விழியில் மண்ணிற்கு நற்செய்தி சொல்வாயே!
உனது பிறப்பிடம் என்ன குடகு மலையோ
புகழ்பலக் கொண்ட பொதிகை மலையா!
வெண்பஞ்சைப் போலப் பறந்து செல்கிறாய்!
வேடிக்கை காட்டி மனதை அள்ளிச் செல்கிறாய்!
நீலவானம் உனது நடையைக் கண்டு மயங்கி நின்றது!
நில்லாது உனது வேகம் தென்திசைக்கு நகர்ந்து சென்றது!
பறவைகளும் உன்னோடு பரிந்து பேசக் கண்டோம்!
உன்னழகைப் புகழ்ந்திடும் புலமை கொண்டோம்!
சிந்தையை நீயும் இழுத்துச் செல்கிறாய்!
சிகரங்கள் பற்பல தீண்டிச் செல்கிறாய்!
நீரோடையில் உன்முகமும் நீந்திச் சென்றது!
ஓடை மீனது உனைக் கண்டுத் துள்ளிக் குதிக்கிறது!
கடலில் உருவாகி! காற்றினில் நிறமாறி!
வெண்மேகமாய் உருமாறி! தென்றலும் தீண்ட!
பொழிவாய் வான்மாரி! மேகமே கண்ணிமைக்கும் ஒருநொடி
நில்லாயே! உன்னழகைப் பாடினேன் கேட்டுச் செல்வாயே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.