என்னுயிர்த் தமிழ் கன்னித் தமிழ்!!
ஒலியிலிருந்து கருவாகி
மொழியாக உருவான தமிழ்!
ஓசைகள் குறைவின்றி
தொடங்கும் ஒப்பற்ற தமிழ்!
ஒளியென உலகிற்கு
அறிவொளியானத் தமிழ்!
ஓய்வின்றி நாளும் இயங்கும்
உன்னதத் தமிழ்!
ஒழுக்கம் உயர்வென
நிலைத்து வாழும் தமிழ்!
ஒரு சொல்லானாலும்
பொருள் தரும் செந்தமிழ்!
ஒய்யாரமாய் உலகின் மூத்தமொழியான
முதுமைத் தமிழ்!
ஒலிக்கும் திசையெங்கும் நிலைக்கும்
தேன் தமிழ்!
ஒடுக்குமுறை அடக்குமுறை வடவரும்
வந்தபோதும் வளங்குன்றாத் தமிழ்!
ஒற்றெழுத்தும் உயிரெழுத்தும் ஒருங்கே
மெய்யெழுத்தும் சேர்ந்த தீந்தமிழ்!
ஓராயிரமல்ல நூறாயிரம் காலம்
கொண்ட கன்னித் தமிழ்!
ஒருநாளும் எம்மை விட்டு
விலகா என்னுயிர்த் தமிழ்!
ஒவ்வொரு நாளும் புதுமைகள்
படைக்கும் புதுமைத் தமிழ்!
ஒலிச்சுடராய் பிறமொழிக் கலப்பின்றி
தனித்தியங்கும் தென்னாட்டுத் தமிழ்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.