மே 2022
ஒற்றைவரிப் பொய் எது? உள்நாட்டுப் போர் அது!
கருமேகக் கூட்டம் தான், கலங்கியேதும் நிக்காத!
கருகியதெல்லாம் குப்பைதான், வருத்தமேதும் கொள்ளாத!
போனதெல்லாம் உயிரல்ல, உதவியேதும் செய்யாத!
பக்கத்து தேசம்தானே, சண்டையெல்லாம் சகஜம் தான்!
இருபது நாடுகளும் ஒற்றைப்பொய் சொல்லியதே!
ஐக்கிய சபைகளுக்கு அதுவெல்லாம் கேக்கலயா?
காது கொடுத்து கேளுமையா! கதையின்னு எண்ணாத!
பாய்ந்து வந்த தோட்டாக்கள், கண்ணீர் வடித்த கதையிது!
கண்ணீர்புகைக் குண்டுகளும் கதறியழுதுப் புலம்புது !
பீரங்கி டாங்கிகளும் ஓடிஒளியத்தான் துடிக்குது!
இவையனைத்தும் தெரிந்திருந்தும், இந்தியாவும் உதவுது !
தொப்புள் கொடி உறவொன்றைக் கருவறுக்கத் துடிக்குது!
எதிர்ப்பதெல்லாம் இராணுவமாம்! ஏழு திசையும் நடுங்குது!
களத்தில் யாரது புலிகளடா! எதிர்த்து நின்னு உருமுது!
உள்ளூரு குருவிபொன்று, உயரப் பருந்தாய் பறக்குது!
ஒற்றைநாள் போர், அதைத் துரோகம் வந்து முடிக்குது!
உலக நாடுகளோ இரக்கமின்றிக் கைதட்டச் சிரிக்குது..
காரணம் யாதென்பேன்?
எம் இனம் கொண்ட சிறப்பது !
எஞ்சிய புலிகளெல்லாம் எங்கெங்கோ சிதறிக் கிடக்குது!
தாய்ப்புலியின் கனவைதான். இலட்சியமாய்ச் சுமக்குது!
எனதருமை உலகத்தீரே ! தீர்ப்பொன்றை எழுதுங்கள்!
பாய்ந்து வந்து, பதறிச் சென்று புலிகள் நெஞ்சை பயந்து
நெருங்கிய தோட்டாக்களைக் கேளுங்கள்!
சிங்கள இனமொன்றை அழிப்பதல்ல புலிகள் நோக்கம்!
துரோகத்தால் சிதைக்கப்பட்ட தமிழீழத் தாயகத்தில்
சுதந்திர சுவாசமொன்றை விதைப்பதே எங்கள் ஏக்கம்!
உயிர்நாடி பிரிந்தாலும், தொப்புள் கொடி அறுந்தாலும்,
“எங்கள் தாகம் தமிழீழத் தாயகம் !!!”
திரு. சோழன் பாரதி,
செந்தமிழர் பாசறை – பகரைன்.