நவம்பர் 2022
கப்பலோட்டிய தமிழர்!
வங்கக்கடல் ஆர்ப்பரிக்க!
ஆண்ட வெள்ளையரும் அடங்கி நிற்க!
பழந்தமிழர் தேயத்தின் பைந்தமிழ் பாந்தனே வாழியவே!
கடல்கொண்டு வாழ்ந்த கப்பலோட்டிய தமிழரே வாழியவே!
வருவேன் கப்பலோடு இல்லையேல் கடலோடு என முழக்கமிட்டாய்!
வந்திரே கப்பலோடு இறுதிவார நின்றீரே உறுதியோடு!
சுதந்திர வேட்கையும் உள்ளுக்குள் எழுந்திட!
சுதேசி கப்பல் கொண்டு வெள்ளையரை மிரள வைத்திரே!
பாரததேயம் உம்மைப்போல்
மாமனிதரை அதுவரை கண்டதில்லை!
வாணிபம் கொண்டு வெள்ளையரை
வீழ்த்திட்ட எங்களின் தமிழ்ப் பெருந்தகையே!
பொய்வழக்குப் புனைந்து
புறவழியில் வந்தவர் உமக்குச் சிறைபூட்ட!
சிறைக்குள் உபக்கோ எத்தனை இன்னல்கள்
அத்துனையும் தாங்கினீரே விடுதலைக்கு!
சுதந்திரத் தேயத்திற்கு நீங்கள்
கொடுத்தச் செல்வங்கள் ஏராளம்!
கொடுத்தது. உடமைகளை
மட்டுமல்ல உயிர்க்கொடையும்தான்!
வரலாற்றில் உம்பைப்போல் எவரும்
செய்ததில்லைத் தியாகம்!
விடுதலைக் கனவை
உள்ளுக்குள் உரமேற்றி செய்தாயே ஈகம்!
சுதந்திரத் தேயத்திற்கு செக்கிழுத்த
எங்களின் செம்மலே!
கண்டங்கள் கடந்து கப்பல் தந்த
வ.உ.சி ஐயாவே வாழியே!
முத்துநகரில் முதல் கப்பல் கண்ட
தமிழரே வாழியவே!
குமரிக்கடலில் தமிழரின் புகழ்நாட்டிய
எங்களின் சிதம்பரனாரே வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
துணைத்தலைவர்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.