ஆகத்து 2022
கயப்பும் சிறப்பும்!
எந்தமிழ் மாட்சியறியா உள்ளங்கொண்டோர் நிலை சுயப்பு!
வந்தவர் ஆளட்டும் என்றுவிடுமோர் உள்ளங்கயப்பு!
மாற்றினங்கூறும் பொய்யுரைப் போற்றி
தன்னினங்கொல்லும் எம்மனோர் மாற்றம் கயப்பு!
பொருளுக்கும் புகழுக்கும் கொள்கை கொல்வோர் கயப்பு!
தினையும் தேனும் உண்டோர் ஊனொவ்வா ஊண் தேடும் பழக்கங்கயப்பு!
தேறவொடு காதலும் கலந்துண்டு களித்தும்
ஆநிரையொடு திணையாவும் உலவி
வேலும் வில்லும் சிலம்பும் வீசியும் எறிந்தும் சுழன்றும் அறம் மறம் அகம் புறம் என வகுத்து வாழ்ந்த -நாம் தன்னின, தம்மொழி மாட்சி காவா நிலை கயப்பு!
மலர் யாவும் மோப்ப மகிழ்ந்தும் பா யாத்தும் ஆழியில் ஆடியும்
மண்ணும் உயிரும் ஒன்றெனக் கொண்டு கொடியோர் எதிர்த்து களத்தில் நிற்போர் சிறப்பு!
நீரும் சோறும் பெருஞ்சொத்து மற்றவை யாவும் முதலென்றுக் கொள்ளா நிலை சிறப்பு!
தண்டமிழ் வாழ கூற்றினில் எட்டினில் கொடுமொழி நீக்கும் முயற்சி – சிறப்பு!
தனித்தமிழ் காக்க யாவரும்
வடமொழி பிறமொழி நீக்குதல் சிறப்பு!
திரு. மறைமலை வேலனார்,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.