பிப்ரவரி 2024
களத்தின் நாயகன் அண்ணன் சீமான்!
தலைவன் தந்த கொடையாக வந்தான்!
தமிழர் உரிமை மீட்கவே நின்றான்!
உலகத்தமிழர் பட்ட காயங்கள் அறிந்தான்!
உறுதியது நெஞ்சத்துள் ஊறக் கண்டான்!
உறுபசியை உளமாற நாள்தோறும் துறந்தான்!
விடுதலைக் கனவையும் கண்ணோரம் சுமந்தான்!
உழவரின் உரிமை கேட்டுத் துடித்தான்!
உலக அரசியலை எளியவர்க்கும் உரைத்தான்!
உயிர்கள் யாவும் ஒன்றெனச் சொன்னான்!
உடலுறுதியை நித்தம் பேணச் செய்தான்!
மழைவெள்ளம் புயல் சீற்றம் எதுவாகினும்!
மானத்தமிழ்த் தமிழருடன் களம் காண்பவன்!
மண்ணுக்கொன்று என்றாலும் மக்களுக்கொன்று என்றாலும் !
களம்கண்டு தீர்வைக்காணும் நம்மினத்தின் காவலன்!
தமிழினம் எழுச்சியுற விழியுறக்கமின்றிச் சுழலுபவன்!
எம்மினம் விழித்தெழுந்திட வழிகள்பல தந்தவன்!
உள்ளபடியே உண்மைகளை உரக்கக் கூறுபவன்!
நல்லபடியே காலம்தந்த களத்தின் நாயகன்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.