செப்டம்பர் 2022
காரிருள் தேடும் ஒளிக்கதிர்!
ஊன் உயிர் தந்தோருக்கு தேவதை என்றானேன்!
ஆசைக்கும் ஆஸ்திக்கும் நானொன்றாவேன் கால் போல்
காலை சுற்றி வந்து சிங்காரச் செல்வ மகள் ஆனேன்.
மேற்றுண்டு ஏற்று சுவருக்குள் பதுங்கின
நாளொன்று இன்றெண்ணும் போதும்
உவகையே இமை மூடி திறக்கும் முன்
திங்கள் பல போயிற்றோ
பேராண்டுகள் கடந்ததும் மணம்
முடிக்க மன்னவரும் வந்தாரே
மகவோடு மரடம் வேர் விட்டதோ
நாலு கொண்டேன் புத்திரம்
ஓர் கண்ணாவது நோக்காதா
என்று பெருமிதம் கொள்வேன்
புயம்மேல் ஓங்கி நிற்கும் வனப்போ வனப்பு
துளை மேல் துவளும் பருவம் பொய்த்து
மங்கள நாள் நால்வர்க்கும் கூடி வர
மாற்றான் தாய் சுமையும் எனக்கானதோ!
என் வழித் தோன்றலை காணும் விழி காண
மாடப் போர்வை வேண்டுமென்றானதோ
பூவோடு பொட்டும் நீர் கொண்டுப் போசு
ஊன்றுகோல் என் துணை என்றானதே
பஞ்சு மெத்தை வெற்றுத்தரையானதோ
வயிறு வெந்தனலாக ஆவுடன் இரவுகள் கரைந்திட்டதோ!
பகலவன் எனை காண வந்தும்
அம்பா என்ற சொல்லில் இயை திறந்தும்
சிரம் தூக்க முடியாதோர் நிலை
பல்லக்கில் ஏற்றி யுவராணியாக்கி
ஊர் சுற்றுவான் என்று நினைத்து
பேருவகை மனதோடு கொண்டேன்!
நான் இறங்குமிடம்
முதியோர் இல்லம் என்ற தெரியாமல்
பள்ளிப் பருவம் பொய்த்தபின்
மழலைப் பருவம் மனதோடு வந்த காலம் இது
அரண்மனை ஆண்ட காலம் போய்
நான்கு சவருக்குள் அடங்கின காலம் இது
சொந்தமில்லை பந்தமில்லை இருந்தும்
காலம் தந்த பரிசல்லவோ!
முதுமை கொண்ட இப்பந்தங்கள்
மையிருட்டும் ஆதவனை தேட
அக்கதிரோனும் காரிருளை தேடும் போதும்
எப்பெருமான் பாசக்கயிறொன்றும்
கண்முன் தோன்றாதோ!
நல்ல நாள் பல வந்து போகுமோ
எவ்வழி அன்புகள் எனை ஒரு கண் நோக்காதா
நெருஞ்சி முள் ஊன் கொள்ளும் போதும்
இவ்வலி உண்டோ நடைபிணமான வாழ்க்கை
முக்தி பெறும் நான் வராதா
சுமை தாங்கி நான் கமையானேனே!
திருமதி. அனு,
செந்தமிழர் பாசறை – சவூதி அரேபியா.