டிசம்பர் 2023
காவியமாகிவிட்ட செஞ்சோலை ஓவியங்கள்
வதங்கிய செடிகளில் முளைத்து விழுந்த வாடா மலர்கள்…!
வசந்தங்கள் காணா வாழ்வில் வண்ணம் இழந்த மொட்டுக்கள்…!
வலிகள் தெறிக்க சிங்கள வெறியர்கள் அழித்த ஓவியங்கள்!
வன்முறை வளர்த்த இராணுவச் சிப்பாய்களால் சிதைந்த சிறார்கள்…!
வையகம் வாளாவிருந்து கண்டது எம் வலிகளின் சாட்சியம்!
இளந்தமிழ்ப் பூக்கள் கருகுவதை உலகம் இரசித்த கொடூரம்!
எங்கள் குழந்தைகளின் உயிர் உயிர் இல்லையா இறைவா?
தெய்வங்களே! கண்மூடி நின்று மௌவுனித்துப் போனீர்களே நியாயமா?
குண்டுகள் குலைத்த எம் அடுத்த தலைமுறைச் செல்வங்களே…!
குருதியில் தோய்ந்து அழிந்த செஞ்சோலைக் காவியங்களே….
நீங்கள் விடுதலை நெருப்பில் விதைக்கபட்ட விதைகள் ஆனீரோ?!
உங்கள் முகங்கள் மறவாத எங்களை மறுமுறை காணீரோ?!
திருமதி. பாத்திமா அனிஷா,
செந்தமிழர் பாசறை – குவைத்.