spot_img

காவிரிச் செல்வன் விக்னேசு!

அக்டோபர் 2025

காவிரிச் செல்வன் விக்னேசு!

நீரின்றி அமையாது உலகு!
காவிரியின் பிறப்பிடமோ குடகு!

தமிழர்கள் நம் நிலத்தை இழந்தோம்!
வந்தவர்களால் நம் வளத்தையும் இழந்தோம்!

உரிமைக்காகப் போராடிப் போராடி வீழ்கின்றோம்!
நாள்தோறும் சிக்கல்களில் உழன்று வாழ்கின்றோம்!

காவிரி நீர் உரிமை மீட்புப் போராளி!
களத்தில் நின்ற தமிழ்த் தேசியவாதி !

உயிர் துறந்தேனும் உரிமையைக் காத்திடத் துணிந்தான்!
உதவாதினி ஒரு தாமதமென விழித்தெழுந்தான்!

கைப்பட எழுதிய காகிதங்களும் காற்றில் பறந்தன!
மெய்ப்பட எழுதிய யாவும் தமிழருக்காகவே இருந்தன!

தீயினுள் ஈட்ட தேகம் தீர்ந்து போகுமுன்னே!
தமிழர் உணர்வோடு கலந்தாயடா கண்ணே!

உரிமையைக் காக்க உன்னையே தந்தாயடா!
உலகத் தமிழரின் உள்ளத்தினை வென்றாயடா!

திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles