அக்டோபர் 2022
கிட்டுவும் தமிழினத் தலைவரும்!
உடன் வா என்றேன்!!
மறுமொழியின்றி வனவாசம் வந்தான்!!
யாழ்தீவு உள் பொறுப்பு என்றேன்!
வீடுதோறும் சொந்தம் பிடித்தான்!
சிங்களனை சிறைபிடித்தான்!
பசிக்கு “மாம்பழங்கள்” அனுப்பி வைத்தான்!
காலில் குண்டு துளைக்க,
தோழனின் காதினிலே மெல்ல
“ஒரு கால்” போய்விட்டது நண்பா என்றான்!
கட்டை கால் கொண்டு, கடல் எங்கும் உலவி
பன்னாட்டு ஆதரவை திரட்டினான்!
ஐரோப்பாவின் தலைநகரங்களில்
தமிழீழ ஏடு நடத்தினான்!
மருத்துவம் படிக்கும் காதலியை காணாது –
தலைவனைத் தேடிச்சென்றான்!!
சாகும் நொடியில் நண்பர்களை
கடலில் தள்ளி தன்னை மட்டும் வெடித்துக்கொண்டான்!!
யார் நண்பா நீ! தாயினும் அதிக பாசம்!
காதலியைவிட பேரன்பு!
பெற்ற மகனை விஞ்சும் கீழ்ப்படிதல்!
தந்தையைப்போல் அரவணைப்பு!
என அனைத்தையும் தந்தாய்!
இந்த “பிரபாகரனின்” நாயகன்
யாரென இந்த மெய்யுலகம் அறியாது!
யானும் இந்த யாழ் தீவும் அறிவோம்.
எமது நாயகன் “கிட்டு” நீ என்று!!
திரு. கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – வளைகுடா.