ஆகத்து 2023
சட்டத்தரணி தடா.சந்திரசேகரன் இரங்கற்பா
தாய்த்திரு தமிழ் நாட்டிற்கோ
தமிழர்க்கோ இன்னலொன்று வந்தபோது
மின்னலென நின்றவர் – என்றும்
தன்னலமின்றி வந்தவர்!
இடையூறுகள் கடந்து
தடைகள்பல உடைத்தவர் – தன் இறுதி வரை
தமிழ்த்தேசியக் களத்தில் உழைத்தவர்!!
தமிழர் மீது பேரன்பும் – தலைவர்
பிரபாகரன் மீது பெருமதிப்பும் கொண்டு
தலைவரது பெற்றோர் தமிழகம் வந்தபோது
பிரியமுடன் காத்து நின்றார் – என்றென்றும்
தமிழர் நலனில் தாகம் கொண்டார் – அவரோ
வழக்காடு மன்றத்தில் வாதம் வென்றார்
தமிழ்த்தேசியத் தலைவருக்குத் துணை நின்றார் – அதனால்
சட்டத்தரணி எனப் பெயருங் கொண்டார்!!
கொலையுண்ட ராசீவால்
பழியுண்ட அப்பாவித் தமிழர்கண்டு
மனம் நொந்தவர் – இறுதிவரை
அவர்களுக்குத் துணை நின்றவர்
களத்தில் செயல் வென்றவர்!
இருபத்தி அறுவர் தூக்கிற்குத்
தடை பெற்றவர் – இவர்தான்
எழுவர் விடுதலைக் கேள்விக்கு விடை தந்தவர்!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
தடா என்றொரு தடை வந்தபோது
விடாது காத்தவர் – அவர்தாம்
எங்கள் மூத்தவர்!!
இழப்பொன்று வந்தபோதும் – எம் அண்ணனுக்கு இன்னலென்று வந்தபோதும்,
நானென்று துணை நின்றார் – இன்றோ
அண்ணனோடு எம்மையும் தனியே விட்டுச் சென்றார்!!
தமிழ்த்தேசிய மன்றத்தில்
இறுதிவரை வழக்காடிய சட்டப்புலி
இன்றோடு தன் வாதத்தை
முடித்துக் கொண்டது – தமிழ் மூச்சை நிறுத்தி விட்டது!
இதுவரை இந்த இனத்திற்கு
நீங்கள் ஆற்றிய கடமை அளப்பரியது
இனி இளைப்பாறுங்கள் மூத்தவரே!
அருவமாய் நடந்திடுங்கள் எங்களோடு!
திரு.காந்தி மோகன்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.