அக்டோபர் 2023
சமூகநீதிப் போராளி !
மண்ணின் மைந்தரே
இமானுவேல் சேகரனே!
அடிமை விலங்கை
உடைத்தெறிந்த அரனே!
அகவை பதினெட்டில்
சிறைக்களம் கண்டவரே!
முகவைத் திருநாட்டில்
சரித்திரம் படைத்தவரே!
இளம் படை வீரனே
களம் கண்ட தீரனே!
குலக்கல்வி தீதெனக்
கொடிபிடித்த சூரனே!
விடுதலை வீரனாக
வாகை சூடியே!
கீழோன் மேலோன்
பேதமை களைந்தாயே!
தீண்டாமை ஒழிந்திட
சரியாசனம் கிடைத்திட!
சமத்துவம் மலர்ந்திட
போராடிய தமிழனே!
உரிமைக்குக் குரல்
கொடுத்த ஈகியே!
உம்மையும் மறப்போமா?
தமிழினத்தின் தியாகியே!
மானம்பெரிதெனத் தகர்த்தாய்
இரட்டைக் குவளை!
தமிழினமே போற்றுவோம்
தாத்தனின் பெரும்புகழை!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.
அக்டோபர் 9 – பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் பிறந்த நாள் (1924)