செப்டம்பர் 2025
சாதியத் தீ(ண்டாமை)
உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதத்தைப் புகுத்தினரே!
ஊரோடு உறவானவரைப் புறம்பேசி ஒதுக்கினரே!
எளியவர் என்றதோற் பெயரைச் சுமக்கலானார்!
ஏர்பிடித்த தமிழ்க் கூட்டத்தை ஏய்க்கலானார்!
சமத்துவம் என்ற வார்த்தை சரிந்து போனதேன்?
சாக்கடை அரசியலைத் திராவிடர் விதைப்பதால் தானோ!
சுட்ட பின்பு சங்கும் வெண்மையாய் நிற்குமே!
சூடுசுரணை உள்ள மாந்தர் அறிந்து நடவாரோ!
சிகரம் தொட்ட தமிழ்க் குடியைக் காணவில்லையே!
சீர்கெட்டுப் போனதும் திராவிடத்தின் சூழ்ச்சியே!
சென்ற இடமெல்லாம் புகழ்க்கொடி நாட்டியவர்!
சேரசோழபாண்டியர் எனும் பெருங்குடியர்!
சொல்வாக்குத் தவறாது வாழ்ந்திருந்த பெருங்கூட்டம்!
சோரத்தால் வீழச்செய்தது ஆரியத் திராவிடச் சிறுகூட்டம்!
தமிழ்த் தாயின் பிள்ளைகளே நமக்குள் பேதமா!
இடைவந்த சாதியும் நம்மையும் பிளக்குமா!
சமத்துவத் தீயில் சாதியத் தீண்டாமையைக் கொளுத்திடுவோம்!
ஆரியத் திராவிடப் புரட்டினைக் குழிதோண்டிப் புதைத்திடுவோம்!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.