ஆகத்து 2023
செஞ்சோலைச் சிறார் படுகொலைகள்
செஞ்சோலை இளம்வளர் பூக்களே!
செவ்விரத்தம் சிந்திய திந்நாளிலே!
செம்மையாய்ப் பதிந்துள்ள தெம்முள்ளங்களில்!
செய்வதறியாது தவிக்கிறோம் நாமிங்கு!
இன அழிப்பின் சிங்களச் சிகரமே
இளந்தமிழர் இனம் அழிக்கவே
ஏதும் அறியாப் பாலகர்மேல்
ஏன் குண்டு வீசிக் கொலை செய்தாய்?
அறுபத்தி நான்கு இன்னுயிர்களும்
ஆயுதம் எந்தவில்லையே உனக்கு எதிராய்!
அடுக்கடுக்கான உன் தோல்வி மறைக்க
ஆணையிட்டதோ அதிகார வெறி அரசு
ஆண்டுகள் பதினேழு ஆகினவே
அரும் நீதி எமக்கு மட்டும் இல்லையா?
அனைத்து உயிர்களும் ஒன்றுதானே!
அகிலமே ஏன் மௌனம் காக்கிறாய்?