அக்டோபர் 2022
தனிமை வாழ்வே இனிமை!
வாழ்வினில் இனியது தனிமை வாழ்வே
தந்திடும் சுகமே தாராளம் ஆகவே
இருப்பிடம் என்றும் மிளிர்ந்தே காணுமே
இளமையும் இனிமையும் ஒன்றாய் சேருமே
தளராது மனமும் தடைகளை உடைக்குமே
கனவுகளை கடந்து நினைப்பதை நடத்துமே
அறிவை வளர்க்கும் ஆற்றல் பெருகுமே
தனியாய் நின்றால் மகத்துவம் கிடைக்குமே
வாழ்வியல் படித்து வாகை சூடுமே
வாழ்க்கையை மாற்றி வானத்தைத் தொடுமே
திரு. மு.ஷாஜஹான்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.