spot_img

தமிழகம் என்னும் நூலகம்!

ஆகத்து 2022

தமிழகம் என்னும் நூலகம்!

தமிழகம் என்னும் நூலகம்
தலைப்பு மட்டும் தமிழினம்
திட்டம் தீட்டி வளருது ஓரினம்
திண்டாடி நிற்கிறது தமிழினம்!

கறையான் கூட்டத்துக்கு கதவைத் திறந்து விட்டு!
கதவருகே காவலுக்கு ரெண்டு ஆளையும் போட்டு!
நூலகத்தில் காத்து வச்ச காவியமெல்லாம்
நுனிகூட முறியாமல் நூறாண்டு இருக்குமென்றான்!

காவலாளி துணையோடு கறையானின் கைவரிசை!
தமிழர் என்னும் புத்தகம் முதலும் முடிவும் இல்லாது
அகமும் அர்த்தமும் இல்லாது தமிழர்
அறமும் மறமும் அழிக்கப்பட்டது!

சொன்னதை எல்லாம் கேட்டதாலே
சோம்பேறியாக ஆக்கப்பட்டோம் சோற்றுக்காக
இலவசத்தை நம்பிவிட்டோம்
சொந்த மக்களை இழந்துவிட்டோம்!

மதுக்குடி மயக்கத்தைப் பெற்றுவிட்டோம் – நம்
இயற்கை குணத்தை மறந்து விட்டோம்|
இயற்கை வளத்தை இழந்து விட்டோம்|
இத்தனைக்கும் காராம்…

தமிழகம் என்னும் நூலகம்,
தலைப்பு மட்டும் தமிழினம்
திட்டம் தீட்டி வளருது திராவிடம்
திண்டாடி நிற்கிறது தமிழினம்!

அயலான் ஆட்சியிலே நீ அடைந்த சிறப்பு என்ன?
அநியாயம் நடக்கையிலே அவன் எடுத்த நிலை என்ன?
உன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்!
தமிழராய் இணைந்து கொள்!
உடலில் உயிர் உள்ளபோதே எழுச்சி கொள்!!

திரு. க.நாகநாதன்,
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles