மே 2025
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்!!!
தமிழர் நாட்டின்
நாளிதழின் முன்னோடி!
தினத்தந்தியைத் தந்தருளிய
ஞாலக் கண்ணாடி!
தமிழ்ப்பற்று நாட்டுப்பற்றைத்
தமிழருக்குள் விதைத்தவர்!
நாளிதழில் தாய்த்தமிழை
நாடெங்கும் சேர்த்தவர்!
நாம்தமிழர் இயக்கம்
துவங்கிய அண்ணலே!
நானிலம் போற்றிடும்
தன்னலமில்லாத் தமிழரே!
தென்னவர் நாட்டில்
உதித்தது மதுரை முரசு!
தடைகளைத் தகர்த்த
தமிழப் பேரரசு!
பாமரரும் வாசிப்பை
நுகர்ந்திட வழிதந்தவரே!
பனைமரச் சோலையில்
பிறந்த பாசத்தமிழரே!
ஏடு நடத்துவோருக்கு
எழுத்தாணியாய் இருந்தவரே!
எழுத்தாளருக்குக் கலங்கரை
விளக்காய்த் திகழ்ந்தவரே!
தமிழினம் கொண்டாடும்
தமிழர் தந்தையே வாழியவே!
தன்னலம் பாராது
வாழ்ந்த பெருந்தகையே வாழியவே!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.