சூன் 2025
தமிழர் யாரென்று உரக்கச் சொல்வோம்!!
தலைமகன் வரலாறு பழந்தமிழரின் புறநானூறு!
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனென நீகூறு!
அன்று தனித்தமிழ் கொண்டு சூளுரைத்தார்!
தமிழீழம் காண வாழ்வையே அர்ப்பணித்தார் !
தடம் புரண்டது சிங்களக் காடையரின் நரித்தனம்!
தமிழினம் கண்டது தலைவனின் உண்மை முகம்!
விடியல் தந்திடத் தமிழர் நிலத்தில் உதித்த கதிரவன்!
கொடியில் பாயும் சோழப் புலியைப் பதித்தப் பிரபாகரன்!
தாயகக் கனவுடன் தமிழர் நிலம் பூத்திருக்கு!
தலைவன் வருவாரென்று இன்றும் காத்திருக்கு!
எல்லை காத்து நின்ற மானத் தமிழ்ப் பிள்ளை!
தொல்லை கொடுத்தவருக்கு பாடம் புகட்டிய வேலுப்பிள்ளை!
உணர்வெனும் உளிகொண்டு உரிமைக்காக நில்லுங்கள்!
உலக மாந்தருக்கு நாம் யாரென்று உரக்கச் சொல்லுங்கள்!
உலக வரைபடத்தில் தனித்தமிழீழம் உருவாகும் ஒருநாள்!
உலகத் தமிழினம் ஒன்றுபட்டுக் கொண்டாடும் திருநாள்!
தமிழேறு உழுதிடச் செல்லட்டும் பற்பலர் உள்ளம் நோக்கி!
தமிழர் படை வீறு கொள்ளட்டும் நமது விடுதலை நோக்கி!
திசையெட்டும் தமிழர் இனயெழுச்சித் தீ பரவட்டும்!
பாரெங்கும் பேரெழுச்சியாய் இடைவிடாது ஒளிரட்டும்!
திரு. பா.வேல்கண்ணன்.
செந்தமிழர் பாசறை – அமீரகம்.