செப்டம்பர் 2025
தமிழால் இணைவோம்!
செந்தமிழில் உண்டு
பல்லாயிரம் ஏடு..!
தேடிக் கண்டு அவற்றையும் நாடு..!
நல்லவை நான்கினை நாள்தோறும் தேடு..!
நாவிற்கினியதை
நன்முறையில் ஓதிப்பாடு..!
தீயவரைக் கண்டால்
தமிழால் சாடு..!
சாதியத் தீயவரைக் கண்டால் விலகியோடு..!
எவருக்கும் நிரந்தமில்லா நிலையென எண்ணப்பாடு..!
தமிழா நமக்குள்ளேன்
இத்தனை வேறுபாடு..?
தீந்தமிழ்ச் சிறப்பினை
உலகினில் பாரு..!
தமிழ் தானே நமக்கான
மூலக்கூறு!
தமிழின்றி உமக்கேது
எமக்கேது சோறு..?
தமிழர் தேசமே
தமிழுக்கான ஊரு..!
தமிழா! தமிழால் தமிழரோடு உறவாடு..!
நமக்குள் வரலாமோ
சிறுசிறு இடர்பாடு..!
தமிழெனும்
நாம் தமிழரெனும்
உணர்வோடு..!
தமிழ் வேங்கை
யாமேயென உறவாடு..!
திரு. பா.வேல்கண்ணன்,
செந்தமிழர் பாசறை – அமீரகம்.