சூலை 2022
தமிழா! அடிமையாக இருக்காதே!
நீர் வேணாமா?
உனக்கு சோறு வேணாமா?
பார் மட்டும் வச்சுகிட்டா
வாழ்க்கை ஓடுமா?
ஆண்ணில்லை, பெண்ணில்லை
அத்தனையும் அலையுது!
அகதி போல சொந்த மண்ணில்
அடிபட்டு கிடக்குது!
அன்பான குடும்பங்கள்
குடியால கருகுது!
கண்டுக்காம காசை
அள்ளி கவர்மெண்டு முடியுது!
நம்மை சுற்றி நச்சு மரம்
நாடெங்கும் முளைச்சிருக்கு
நம்ம வாழ்வை அழிப்பதற்கு
நாலு திசையும் காத்திருக்கு!
மதுவுக்கு இங்கே மவுசு
இருக்கு மனித உயிருக்கு
எங்கே மதிப்பு இருக்கு!
மதுவை ஆதரிக்க அரசு இருக்கு
மக்களை ஆதரிக்க யாரிருக்கா!!
உயிரோடு இருந்து விடு ஓட்டு போட நீ வேணும்!
உண்மைய தெரிஞ்சுக்கிற
உன் அறிவு செயல்படனும்!
உன் அறிவை அழித்திடவே
மதுக்கடைக்கு மாலையிட்டான்!
மண்டைக்குள்ள உள்ளதெல்லாம்
மண்ணாக்க திட்டமிட்டான்!
நல்லோர்கள், பொல்லார்கள்
நடமாடும் உலகமிது
நஞ்சு உண்டு வாழ்வதையே
நலமென்னும் அரசு இது!
அரசு போதையில நிக்குது
நிர்வாகம் ஊழலில் சுத்துது
மக்கள் வீதியில் கத்தது
இதைதான் திராவிட மாடல்னு பீத்துது!!
திரு. க.நாகநாதன்
செய்தித் தொடர்பாளர்,
செந்தமிழர் பாசறை – ஓமன்.