ஆகத்து 2022
தமிழா “புயலாகப் புறப்படு”
சதி ஒன்று நடக்குதுங்க -நாட்டில் சதி ஒன்று நடக்குதுங்க.
மனித மூளையை முடக்கி மூலையில் கிடத்திட சதி ஒன்று நடக்குதுங்க.
சட்டங்கள் போட்டு பல திட்டங்கள் தீட்டி தீமைகள் நடக்குதுங்க.
தினம் தினம் மக்கள் திண்டாடி நிற்கிறாங்க.
தமிழக வளங்களை தன்னலவாதிகள் தன்வசமாக்கிட கொள்கைகள் வகுக்கிறாங்க – அரசு தமிழர்களை கோமாளியாக நினைக்கிறாங்க.
பணம் செய்யும் பேய்கள் பள்ளியை நடத்துறாங்க. அரசு பதவிகள்எல்லாம் அதற்கான பாதையை வகுக்குதுங்க.
அறிவை வளர்த்து நீ அகிலத்தை ஆள்வதை ஆள்பவன் விரும்பவில்லை அதனால் தமிழனுக்கு தொடருது தொல்லை.
சதிமினை உடைத்து உயிர்களை காத்திடஉரியவன் நீ தாமோ தமிழ் என்னும் சமூகத்தில் பிறந்தவனே.
சீமானின் பின்னாலே சீறுகின்ற புலி கூட்டம்ஒருநாளும் பிரளாது சிகரத்தை அடையாமல் திருநாளும் இனியாது.
சிதறிய துளி எல்லாம் திராவிடமாய் ஆள்கிறது அலைகடவோ அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
அன்புத் தமிழினமே ஆழிப் பேரலையாய் எழுந்து விடு அனைத்து உயிர்களையும் இன்புற்று வாழ விடு.
ஆரியத்தையும், திராவிடத்தையும் குழிதோண்டி மூடி விடு ! அன்புத் தமிழ் பிள்ளைக்கு அதிகாரத்தை கொடு!
அடுத்த தலைமுறைக்கு நலமான தமிழகத்தை உருவாக்கி விடு!!
திரு. க.நாகநாதன்
செய்தித்தொடர்பாளர்
செந்தமிழர் பாசறை – ஓமன்